தமிழ அரசின் கலைமாமணி விருதுப்பட்டியலில் என் இனிய அண்ணன் பாஸ்கர் சக்தியின் பெயரும் இடம் பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எம்மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு மற்றும் சமீபத்தில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு ஆகிய படங்களின் வசனகர்த்தா அவர். 'நீ வர்ற வரைக்கும் வச்சிகிட்டா இருப்பாய்ங்க...' போன்ற எளிய, இயல்பான வசனங்களின் மூலம் 'வெண்ணிலா கபடிக் குழு'த் திரைப்படத்தில் தன் இருப்பைப் பரவலாக்கியவர்.
கோலங்கள், மெட்டி ஓலி போன்ற சாகாவரம் பெற்ற நெடுந்தொடர்களில் அவரது வசனங்களைப் பேசி நடித்தவர்கள்தான் இன்று சின்னத்திரையை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அத்தி பூத்தார் போல அவ்வப்போது பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதுவார். அழகர்சாமியின் குதிரை, பழுப்பு நிறப் புகைப்படம் ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. பாஸ்கர் குறித்து ரமேஷ் வைத்யா அடிக்கடிச் சொல்லும் கொட்டேஷன் "நானும் நீயும் ஒரு கிராமத்துச் சந்தைக்குப் போனால் அதிகபட்சம் ஒரு கட்டுரை தேறும். ஆனால் பாஸ்கர் போனால் இருபது சத்தானச் சிறுகதைகள் எழுதுவான். அத்தனை நுட்பமாய் உலகைக் கவனிப்பவன்".
பாஸ்கர் சக்தி மேலும் பல தளங்களில் இயங்கி நம்மை மகிழ்விக்க இந்த விருது ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்று நம்புகிறேன். மனதார வாழ்த்துகிறேன்.
17 comments:
பாஸ்கர் சக்திக்கு வாழ்த்துக்கள்!
'அவங்க' யாருன்னு சொல்லவே இல்லேயே செல்வா!!
அண்ணே!
புள்ளக்குப் பால் குடுத்து; புருசனுக்கு சமைச்சுப் போடுறத்துக் கெல்லாம் ;கலைமாமணியாமே!!
அதுகளோட இவுகளுக்குமா???
ஏனண்ண! அப்படியே கலைஞர் மனிசிமாருக்கும்; ஸ்டாலின்; அழகிரி மனிசிமாருக்கும்
ஒவ்வொன்று குடுத்தா கொறைஞ்சா போயிடுவீங்க!!
சீ போங்கய்யா?? நீங்களும் ஒங்க துப்புக் கெட்ட விருசுகளும்.
நல்லதொரு செய்தி செல்வா
கீற்று தளத்தில் பாஸ்கர் சக்தியின் சில் படைப்புகளை கண்டிருக்கிறேன். இவரது எழுத்துக்களை பள்ளிப் பருவத்தில் விகடனில் வாசித்து, பின் இவரது சிநேகத்துடனான எழுத்தைத் தேடி இரண்டு புத்தகங்களை ரசித்துப் படித்திருக்கிறேன்! இவரையும் க.சீ.சிவகுமாரையும் இரட்டை எழுத்தாளர்கள் எனச் சொல்லலாம்!(இருவரும் இந்தியா டுடேயின் சிறுகதைத் தொகுப்பின் தொட்டடுத்தப் பக்கங்களில் அறிமுகமானதாக க.சீ.சிவகுமார், 'பழுப்பு நிறப் புகைப்பட'த்தின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்!)
இவரது சில படைப்புகளை (கீற்று, தீம்தரிகிட, விகடன்) pdf கோப்பாக சேமித்துள்ளேன்! நிச்சயம் இவரைப் புதிதாக வாசிப்பவர்களுக்கு உவப்பாயிருக்கும் என நம்பலாம்!
போனஸ் - சிவக்குமாரின் படைப்புகளும் மற்றும் ஆதிமங்கலமும்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
வந்தனம் நண்பா !
உண்மைதான் அவருடைய ''பழுப்பு நிறப்புகைப் படம்'' மிக முக்கியமான படைப்பு.
பல புல்லுக்கு இரைத்த நீர் இந்த நெல்லுக்கு பாய்ந்ததில் சந்தோசம்தான்.
பாஸ்கர் சக்திக்கு கலைமாமணி கொடுத்தது வரவேற்கத்தக்க, மகிழ்ச்சியான செய்தி.ஆனால்,பொருத்தமில்லாத,பலர் இப்பட்டியலில் இடம்பெற்றிருப்பதைப்பற்றி, உங்களீன் வழக்கமான சீற்றத்தை எதிர்பார்த்துவந்தேன். அவ்வகையில் ஏமாற்றம்.கௌரவிக்கப்படவேண்டியவர்
கள்,திரைத்துறை
மற்றும் பலர் இன்னும் காலங்கடந்து இருக்கிறார்களே.
nayantharavai pathi eluthama baskar shakthi pathi eluthina unnota nalla manasukke(?!) oru kalaimamani kodukkalam :-)
அத்திபூத்தார் போல அல்ல
அத்தி பூத்தாற்போல
அடிக்கடிச் சொல்லும் அல்ல அடிக்கடி சொல்லும்
(தேவையற்ற இடத்தில் ஒ
ற்றிடுவதும் பிழையே!)
சத்தானச் சிறுகதைகள் அல்ல
சத்தான சிறுகதைகள்
தேவையற்ற இடத்தில் ஒ
ற்றிடுவதும் பிழையே!)
ஒரு உந்துசக்தியாக அல்ல
ஓர் உந்து சக்தியாக
(உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் சொல்லுக்கு முன்னர் ஓர் எனவும் உயிர்மெய் எழுத்தில் ஆரம்பிக்கும் சொல்லுக்கு முன்னர் ஒரு எனவும் எழுதுக)
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றீ செல்வா!
(நன்றீ அல்ல நன்றி!)
அண்ணாருக்கு வாழ்த்துக்கள்!
(நீங்க எப்போ வாங்க போறீங்க)
மிக்க மகிழ்கிறேன் செல்வேந்திரா!
வாழ்த்தும் மனதிற்கு வாழ்த்துக்கள் செல்வா! பாஸ்கர் இந்த பதிவை படிச்சு சந்தோஷப்படுவார், அவர் உன்னோட ப்ளாக்கை தொடர்ந்து வாசிக்கறவர். இன்னும் நிறைய விருதுகளையும் வெற்றிகளையும் அவர் அடைய வாழ்த்துவோம்!
பாஸ்கர் சக்தி அவர்களுக்கு வாழ்த்துகள். மெட்டி ஒலி அவரது பேச்சுரைக்காகவே விரும்பி பார்க்கப் பட்டது என்றால் அது மிகையல்ல. அவரது பேச்சுரை எழுத்து ஈர்த்த பலரில் நானும் ஒருவன்.
மிக்க மகிழ்ச்சியான செய்தி, பாராட்டுகள் செல்வேந்திரன்
அழகர்சாமியின் குதிரை - நானும் படித்துள்ளேன். பாஸ்கர் சக்திக்கு வாழ்த்துகள்.
PDF தொகுப்பு மிக அருமை - ரொம்ப நன்றி.
rajini ponnu dancera sir?saroja devikkum kotukkaranuvo,nayantharavukkum kotukkuranuva.paarapatcham illaatha payaluva.Basakar sakthikku en vaazhththai theriviyunkal.nantri.
மகிழ்ச்சி...
பகிர்வுக்கு நன்றி...!
மகிழ்ச்சி, பாஸ்கர் சக்திக்கு வாழ்த்துகள்.!
Post a Comment