Monday, February 23, 2009

கிளைத் தலைவன்

சித்தப்பா முப்பது வருடங்களுக்கு முன்பே மும்பைக்குப் பெயர்ந்தவர். தமிழர்களும், இஸ்லாமியர்களும் பெருமளவில் வாழும் 'காந்தி வல்லி' பகுதியில் குடியிருக்கிறார். மகேந்திரா டிராக்டர்ஸ் தொழிற்சாலை அங்குதான் இருக்கிறது.

இன்று காலை என்னை தொலைபேசியில் அழைத்தவர் "லேய்... நம்ம அருளுக்கு சிவசேனாக் கச்சியோட காந்தி வல்லிப்பகுதி கிளைத் தலைவர் போஸ்டிங் கிடைச்சிருக்குப்பா... இந்தப் பதவி வகிக்கிற முதல் தலைவன் உங்க அண்ணம்டே... எனக்க ரொம்ப பெருமையாட்டு இருக்கு..." என்றார். அவர் குரலில் பெருமிதம் பிரவாகமிட்டுக் கொண்டிருந்தது.

நான் மெதுவான குரலில் அவரிடம் "சித்தப்பா... ஆரம்ப காலம் தொட்டு சிவசேனாவின் கொள்கைகளுள் ஒன்று மதராஸிக்களை உதைப்பது. கால வெள்ளம் சமூக மேடு பள்ளங்களை நிறைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்திலும் 'அம்ச மாட்டி' (மராத்தி நமதே!) கூச்சல்களோடு உத்தரபிரதேசத்துக்காரர்களை உதைத்துக்கொண்டிருக்கும் காட்டுமிராண்டிக் கூட்டம் சிவசேனா. 'மஹாடா' எனப்படும் மஹாராஷ்டிர ஹவுசிங் நிர்மாணின் அத்தனை வீடுகளும் மராத்திக்காரர்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் கோட்டிக்காரக் கட்சியின் தலைவரானதற்கு வெட்கப்படுவதற்குப் பதில் பெருமையா?!"

டொய்ங்..............

***

கல்லைப் பிழிந்து நீரெடுத்து
காற்றைப் பிழிந்து சாறெடுத்து
எரிமலைக்குச் சரிமலையாய்
எழுந்து நிற்கும் மக்கள் தலைவா!

மேற்படி கவிதை வாசன் மூப்பனாரின் பிறந்த நாளுக்காகத் தொண்டர்களால் ஜூனியர் விகடனில் கொடுக்கப்பட்ட வாழ்த்து. நம் சஞ்செய் இதுமாதிரிக் கவிதைகள் எழுதுவாறா?! என்று விசாரிக்க வேண்டும்.

***

விஜயா பதிப்பகம் போகின்ற சமயங்களில் 'உயிர் எழுத்து' வாங்குவது உண்டு. இருக்கிற தீவிர இலக்கியப் பத்திரிகைகளில் ரொம்பவும் தீவிரமாகச் சாவடிக்கிறார்கள். உதாரணம்...

"மருதுவின் காண்பிய மொழியானது பலவகையான காட்சிப் பண்பாடுகளின் கலப்பினால் விளைந்ததொன்றாகும்... பரந்துபட்ட காட்சி மூலங்களிலிருந்தும் வெளிப்பாட்டு முறைகளினதும் எதேச்சையானதும் இயல்பானதுமான கலப்பினால் விளைந்த பன்னலத்திரட்டான மொழியை மருது கொண்டுள்ளா."

இதுமாதிரி கிர்ர்...ரடிக்கும் மொழியில் என்பது பக்கங்களுக்கு எழுதுகிறார்கள். எழுத்து மொழியில் மாற்றமும், படைப்புகளைத் தேர்வு செய்வதில் கறார் போக்கினையும் கடைபிடித்தால் ஒழிய 'உயிர் எழுத்து' உருப்படாது என்பது என் அபிப்ராயம்.

***

இவர்களும் அரசு ஊழியர்கள்தான். ஆனால் நாளொன்றுக்குக் குறைந்த பட்சம் மூவாயிரம் ரூபாயும், மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் சம்பாதிக்கிறார்கள். இவர்களுக்கு புரொபஷனல் வரி, வருமான வரி என எந்தக் கெடுபிடியும் கிடையாது. யாரென்று கணிக்க முடிகிறதா பாருங்கள். நாளை எழுதுகிறேன் விரிவாக...

20 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//விஜயா பதிப்பகம் போகின்ற சமயங்களில் 'உயிர் எழுத்து' வாங்குவது உண்டு. இருக்கிற தீவிர இலக்கியப் பத்திரிகைகளில் ரொம்பவும் தீவிரமாகச் சாவடிக்கிறார்கள். உதாரணம்...

"மருதுவின் காண்பிய மொழியானது பலவகையான காட்சிப் பண்பாடுகளின் கலப்பினால் விளைந்ததொன்றாகும்... பரந்துபட்ட காட்சி மூலங்களிலிருந்தும் வெளிப்பாட்டு முறைகளினதும் எதேச்சையானதும் இயல்பானதுமான கலப்பினால் விளைந்த பன்னலத்திரட்டான மொழியை மருது கொண்டுள்ளா."

//


சேராத இடம்தன்னில் சேர வேண்டாம் :)

கார்க்கி said...

//கல்லைப் பிழிந்து நீரெடுத்து
காற்றைப் பிழிந்து சாறெடுத்து
எரிமலைக்குச் சரிமலையாய்
எழுந்து நிற்கும் மக்கள் தலைவா//

நீர் வாழ்க பல்லாண்டு

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நானும் உயிர் எழுத்து வாசிப்பவன்தான். இம்மாதிரியான மொழிநடையுள்ள கதைகள் மட்டும்தான் உங்களுக்குக் கிடைக்கிறதா அதில்? இப்படி நெகடிவ்வான விஷயம் மட்டுமே சொல்லி காட்டடியாக புறந்தள்ளுதலில் எனக்கு உடன்பாடில்லை (காலச்சுவடு சிறப்பிதழில் வந்ததை சுஜாதா அப்படித்தான் செய்திருந்தார் - அமைப்பியல் பற்றிய கட்டுரையை. ஆனால் அது இப்போது மிகச் சுலபமாகப் புரியும் விஷயமாகிவிட்டது!).

ICANAVENUE said...

தாசில்தார் அலுவலகத்தில வேலை பார்ப்போர் சங்கத்தின் சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறோம்!

வழக்கம் போலவே அசத்தல்!

ICANAVENUE said...

தாசில்தார் அலுவலகத்தில வேலை பார்ப்போர் சங்கத்தின் சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறோம்!

வழக்கம் போலவே அசத்தல்!

சென்ஷி said...

//இவர்களும் அரசு ஊழியர்கள்தான். ஆனால் நாளொன்றுக்குக் குறைந்த பட்சம் மூவாயிரம் ரூபாயும், மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் சம்பாதிக்கிறார்கள். இவர்களுக்கு புரொபஷனல் வரி, வருமான வரி என எந்தக் கெடுபிடியும் கிடையாது. யாரென்று கணிக்க முடிகிறதா பாருங்கள். நாளை எழுதுகிறேன் விரிவாக...//

???????????

ச.முத்துவேல் said...

இம்மாத உயிர் எழுத்தின் 80 பக்கங்களில் என்னுடையதும் ஒன்று என்பதால் அல்ல.எனக்கென்னவோ படைப்புகள் மிகவும் பிடித்திருக்கிறது.(உங்கக் குற்றச்சாட்டுல நானும் உண்டா?
சும்மா சொல்லுங்க..)

செல்வேந்திரன் said...

ஹா... ஹா அப்துல்லா அண்ணே... ஜூப்பர்.

கார்க்கி, சஞ்செய் எதுனா வச்சிருக்காரான்னு கேட்டீங்களா?!

ஜ்யோவ், மருதுவின் அட்டைப் படத்தோடு வந்திருக்கும் நடப்பிதழில் கவிதைகளைத் தவிர்த்த பக்கங்கள் முழுவதையும் படித்துவிட்டேன். இப்படித்தான் 'ஹூப்ரு' மொழியில் இருக்கிறது.

ஐகேன், சிக்கலை உண்டு பண்ணாதீங்க.... தாசிலெல்லாம் சின்னப் பசங்க... இவுங்க 'படா ஆளுங்க...'

முத்துவேல், உங்கள் கவிதைகள் குறித்த என் அபிப்ராயத்தைச் சொன்னால், நீங்கள் ஒரு கொலைகாரர் ஆக நேரிடும்.

சென்ஷி, நாளை இதைவிட கேள்விக்குறிகள் போட வேண்டி இருக்கும்.

ச.முத்துவேல் said...

/முத்துவேல், உங்கள் கவிதைகள் குறித்த என் அபிப்ராயத்தைச் சொன்னால், நீங்கள் ஒரு கொலைகாரர் ஆக நேரிடும்./


ஹா..ஹா. ஹா
ரசித்தேன்.வரவேற்கிறேன். நன்றி.(ஆனா,இன்னும் தெளிவா சொல்லலாமில்ல. நீங்களும் அதே மாதிரி சொன்னா என் சிற்றறிவுக்கு அவ்வளவாப் புரியல.)

கே.ரவிஷங்கர் said...

ஒரு(இரண்டு வருடம் முன்பு?) காலச் சுவடு இதழில் பிரசன்னா ராமசாமி என்ற் விமர்சகர் சஞ்சய் சுப்ரமணியம் என்னும் வயலின் கலைஞனைப் பற்றி
இப்படித்தான் புரியாத மொழியில் எழுதி
இருந்தார்.ப்யந்துப் போய் தாய்த்துக் கட்டிக் கொண்டேன்.

Deepa J said...

LIC agents??

Anonymous said...

செல்வா,

உயிர் எழுத்தின் தொடர் வாசகன் நான். ஒரு சில கட்டுரைகள் அவ்வாறு இருக்குமெனினும் எல்லாக் கட்டுரைகளும் அவ்வாறல்ல.

சென்ற இதழில் வந்த கண்ணனின் (காலச்சுவடு ஆசிரியர்) நேர்காணல் படித்துப் பாருங்கள். உங்களைப் போன்றபத்திரிக்கை உலக அலுவலர்களுக்கு மிக முக்கியம்.

நேரில் விவாதிப்போம்.

தமிழினியில் ராஜ சுந்தர்ராஜன் நடைக்கு என்ன சொல்லுவீர்கள். படித்திருக்கிறீர்களா?

மாதவராஜ் said...

//கால வெள்ளம் சமூக மேடு பள்ளங்களை நிறைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்திலும் //

நிறைத்தபடி ஒடுகிறதா... நிறைத்து ஓட எத்தனிக்கிறதா?

............
இப்படி தொண்டர்கள் எழுதும் கவிதைகளைப் பார்த்த தலைவர்களுக்குள் என்ன ஒடிக்கொண்டு இருக்கும் செல்வேந்திரன்?

Karthikeyan G said...

//இவர்களும் அரசு ஊழியர்கள்தான். ஆனால் நாளொன்றுக்குக் குறைந்த பட்சம் மூவாயிரம் ரூபாயும், மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் சம்பாதிக்கிறார்கள். இவர்களுக்கு புரொபஷனல் வரி, வருமான வரி என எந்தக் கெடுபிடியும் கிடையாது. யாரென்று கணிக்க முடிகிறதா பாருங்கள். நாளை எழுதுகிறேன் விரிவாக.//

RTO office?

ஸ்ரீதர்கண்ணன் said...

//இவர்களும் அரசு ஊழியர்கள்தான். ஆனால் நாளொன்றுக்குக் குறைந்த பட்சம் மூவாயிரம் ரூபாயும், மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் சம்பாதிக்கிறார்கள். இவர்களுக்கு புரொபஷனல் வரி, வருமான வரி என எந்தக் கெடுபிடியும் கிடையாது. யாரென்று கணிக்க முடிகிறதா பாருங்கள். நாளை எழுதுகிறேன் விரிவாக.//

TASMAC ??????????

பாபு said...

நாளைக்கு சொல்றேன்னு சொன்னீங்களே, அந்த நாளை இன்னும் வரலையா?

மண்குதிரை said...

//"மருதுவின் காண்பிய மொழியானது பலவகையான காட்சிப் பண்பாடுகளின்''//

வந்தேன்! வாசித்தேன் ! வழிமொழிகிறேன் !

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதுமாதிரி கிர்ர்...ரடிக்கும் மொழியில் என்பது பக்கங்களுக்கு எழுதுகிறார்கள்

என்பு அது பக்கமா, எண்பது பக்கமா

யாரென்று கணிக்க முடிகிறதா பாருங்கள்
ஆர்டிஓ ஆபிஸ் இல்லனா தாசில்தார் ஆபிஸ்
எது சரிங்க.

கிளைத்தலைவர் வாழ்க. ஆமாங்க
//ஆரம்ப காலம் தொட்டு சிவசேனாவின் கொள்கைகளுள் ஒன்று மதராஸிக்களை உதைப்பது.//
இந்தக்கட்சியிலேயே கிளைத்தலைவர் பதவி கெடைச்சிருக்குன்னா உங்க அண்ணனை வாழ்த்தனும்தானே.

//உதைக்கப்பட்ட இடத்திலிருந்தே உள்ளிருந்து மேலெழுவது... //
பெரிய விஷயந்தானே.

தாமிரா said...

அனைத்தும் ரசனைக்குரியதாக இருந்தது.! குறிப்பாக இலக்கியப் பத்திரிகைகளின் இலக்கிய நடை.!

chinna kannan said...

ஏல தம்பி பின்னிட போ..,,
ஸ்ரீவை அண்ணன்.
பட்டைய கிளபிர தம்பிங்கண்ணா. .
திருப்பூர் அண்ணன்.