சந்திப்பு

திறந்தவெளிப் பல்கலைத் திட்டத்தில்தான் பட்டம் பெற்றேன். மாணவர்களின் பயன்பாட்டிற்காக 'பிசிபி' எனப்படும் 'பெர்சனல் காண்டாக்ட் புரொக்ராம்' நடத்துவார்கள். படிப்பின் மீதிருந்த ஆர்வத்தால் தவறாது கலந்துகொள்வேன். அப்படிப்பட்ட ஒரு வகுப்பில் பாடம் எடுக்க வந்தவர் "லால் பகதூர் சாஸ்திரி" குறித்து தவறான ஒரு தகவலைச் சொல்ல, அதை நான் கடுமையாக மறுத்தேன். "தம்பி... நான் இந்த அரசியல் அறிவியல் துறையின் தலைவர். அமெரிக்கத் தேர்தல்களுக்கு சிறப்புப் பார்வையாளனாக அழைக்கப்படுபவன். ஹில்லாரி கிளிண்டன் வீட்டில்தான் சாப்பிடுவேன். ஐம்பதிற்கும் மேற்பட்ட அரசியல் விளக்கப் புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். என்னிடம் விவாதம் பண்ணாதே... உட்காரு..." என்றார். அவமானத்தோடு அமர்ந்தேன்.

மதிய உணவு இடைவேளைக்குப் பின் வகுப்பு துவங்கியது. வேறொரு ஆசிரியர் குறிப்புகளை வழங்கிக்கொண்டிருந்தார். 'செல்வேந்திரனை ஹெச்.ஓ.டி கூப்பிடுறார்' என்றொரு தகவல் வந்தது. என்னடா இது வம்பு எனப் பயந்துகொண்டே அவரது அறைக்குச் சென்றேன்.

"தம்பி, நீங்க சொன்னதுதான் கரெக்ட். இப்பத்தான் ரெஃபர் பண்ணினேன். உனக்கு எப்படிப்பா இந்தத் தகவல் தெரியும்...?"

"புக்ல... படிச்சுருக்கேன்..."

"அரசியல்னா அவ்வளவு ஆர்வமா...?!"

"இல்ல சார்... புத்தகம்னா ஆர்வம்..."

"என்ன மாதிரி புக்ஸ் படிப்பீங்க...?"

"கையில எது கிடைச்சாலும் படிப்பேன் சார்"

"அட... சரி... சாயங்காலம் என்னைப் பாத்துட்டுப் போ"

"ஓ.கே சார்"

மாலையில் எனக்கு சில புத்தகங்களையும், தேர்வில் நிச்சயம் இடம் பெறும் என சில கேள்விகளையும் ஒரு தாளில் எழுதிக்கொடுத்தார். புத்தகங்களை வாங்கிக்கொண்டு கேள்விகள் எழுதிய பேப்பரை அவரிடமே திருப்பிக்கொடுத்துவிட்டுச் சொன்னேன் "இதெல்லாம் இல்லாமலே எனது அவரேஜ் 70%. என்னுடைய உழைப்பில் கிடைக்கும் மார்க்குகள் எனக்குப் போதும்"

மேற்படி சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது. மேற்படி பேராசிரியரை வேறொரு புகழ் மிக்க பல்கலைக்கழகத்தின் இயக்குனராக நேற்று சந்திக்க நேர்நது. பெயரைக் கேட்டதுமே நேற்று நடந்தது போல அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தார். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். விடைபெறுகையில் சொன்னார் "தம்பி நீங்க ஒரு லெக்சரராகவோ, ஐ.ஏ.எஸ் ஆபிஸராவோ வருவீங்கன்னு நெனச்சேன்...ஆனா அதையெல்லாம் விட நல்ல இடத்துலதான் இருக்கீங்க... என்றார் மதுரைத் தமிழில்..."

வாழ்க்கை ஒரு விசித்திர வட்டம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?!

Comments

சில் பேருக்குச் சிலரைப் பார்த்ததும் பழகியதுமே "A man with a difference" என்பது தெரிந்துவிடும். உங்களைப் பார்த்துப் பேசிய உங்கள் ப்ரஃபசருக்கும் தெரிந்திருக்கிறது - உங்களிப் பற்றி - எனக்குத் தெரிந்த மாதிரியே!

ஆங்கிலம் மற்றும் தமிழில் கடுமையன பயிற்சி எடுக்க வேண்டும். நீங்கள் கடக்க உள்ள பிழைகள் நிரம்ப உள. அதன் பிறகு மிக உயர்ந்த சாதனை நீங்கள் புரிவீர்கள். ஆனால் என்ன... பின்புறம் சொறிந்துவிடுபவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.

எங்கூர்ல ஒரு பளமொளி தாத்தி அடிக்கடி சொல்லும்.
“மேயற மாட்ட நக்குற மாடு கெடுத்தாப்புல” அப்படினு!
:)).. அவர் சொன்னதையேத்தான் நாங்களும் சொல்கிறோம்
Anonymous said…
ஒரு சில குறிப்பிட்ட ஐ.பி.களை மட்டும் மட்டுறுத்தும் வசதி உள்ளதா? என கேட்டாராய்ந்து செயல்படுத்தவும்.
சபாஷ் செல்வா!!

@ லதானந்த்

//எங்கூர்ல ஒரு பளமொளி தாத்தி அடிக்கடி சொல்லும்.
“மேயற மாட்ட நக்குற மாடு கெடுத்தாப்புல” அப்படினு!//

அங்கிள்... உங்களுக்குச் சொல்ல வேண்டியதைத்தான் சொல்லியிருக்காங்க!!!
Anonymous said…
சந்திப்புன்னு பாத்த உடனே செல்வபெருமாள் வெவகாரமோன்னு வந்தேன். நல்ல வேள இது வேற விஷயம்.

//
ஆனா அதையெல்லாம் விட நல்ல இடத்துலதான் இருக்கீங்க... என்றார் மதுரைத் தமிழில்..."
//

ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க...
selventhiran said…
அடடா, வழக்கம்போல பச்சப்புள்ளத்தனமா பின்னூட்டங்களைப் பார்த்த உடன் பதிவிட்டதில் இங்கே ஒரு மகா யுத்தம் நடந்துகிட்டு இருக்கிறதைக் கவனிக்காம விட்டுட்டேனே...

உள் குத்து, கும்மாங்குத்து, குனிய வச்சி குத்துன்னு ஆளாளுக்கு அடி பின்றீங்களே...

சமாதானமாப் போயிருவமப்பு... :(