திக்விஜயம்

ஐ.வி எனப்படும் 'இண்டஸ்ட்ரீயல் விசிட்'டுக்காக கேண்டி இன்று ஹைதரபாத் செல்கிறாள். நான்கைந்து நிறுவனங்களைப் பார்வையிடுவதாகத் திட்டம். நவீன யுகத்தில் ஐ.வி ஒரு அனுமதிக்கப்பட்ட சுற்றுலாவாகக் கொண்டாடப்படுகிறது. எங்களுடைய நிறுவனத்திற்கு ஐ.வி வரும் கல்லூரி மாணவர்களில் 99% பேர் அடி முட்டாள்தனமான கேள்விகளை கேட்பார்கள். கேண்டிக்கு கீழ்க்கண்ட டிப்ஸ்களை வழங்கினேன்.

1) ஒரு நிறுவனத்திற்குள் நுழைவதற்கு முன் அந்நிறுவனம் பற்றிய குறைந்தபட்ச தகவல்களை இணையத்தின் மூலமாகத் தேடித் தெரிந்து கொள்ளுதல். கீழ்க்கண்ட தகவல்கள் அவசியம்

அ) நிறுவனம் எப்போது, யாரால், எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது?

ஆ) நிறுவனத்தின் தயாரிப்புகள் எவை எவை? அதன் கிளை நிறுவனங்கள், உபதொழில்கள் என்னென்ன?

இ) சந்தையில் நிறுவனத் தயாரிப்புகளுக்கான இடம் என்ன? அதன் போட்டியாளர்கள் யார்?

ஈ) தன் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் 'மார்க்கட்டிங் ஸ்டர்ஜி' என்ன?

உ) நிறுவனத்தின் 'கார்ப்பொரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி' செயல்பாடுகள் எத்தகையது?

ஊ) நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

எ) நிதி நிர்வாகம், மனிதவள நிர்வாகம் எப்படி செயல்படுகிறது?

ஏ) நிறுவனம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிற சவால்கள்

2) ஐ.வி என்பது சுற்றுலா அல்ல. சாமான்யர்கள் எளிதில் நுழைய அனுமதி கிடைக்காத தொழிற்கூடங்களில் கல்லூரி மாணவர்கள் என்ற ஓரே காரணத்தினால் பார்வையிட கிடைத்திருக்கும் வாய்ப்பு அது. வெற்றுக் காமெண்டுகளை அடித்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பினைத் தவறவிடாதீர்கள்.

3) தொழிற்சாலை அதிகாரிகளை எரிச்சலடைய வைக்கும் கேள்விகளைக் கேட்காதீர். (உ.ம்) மொத்த டர்ண் ஓவர் எவ்வளவு? ஒழுங்கா 'டாக்ஸ்' கட்டறீங்களா? பங்குச்சந்தையில உங்க பங்குகள் வீழ்ச்சியாமே...? உங்க சம்பளம் எவ்வளவு?

4) ஐ.வி சென்று திரும்பியதும் நீங்கள் பார்த்தவற்றையும், தெரிந்து கொண்டவைகளையும் ஒரு ரிப்போர்ட்டாக தயார் செய்து உங்களை அழைத்துச் சென்ற ஆசிரியரிடம் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள்.

5) உங்களை அனுமதித்த தொழிற்சாலை நிர்வாகிகளின் ஈ-மெயில் ஐ.டியைப் பெற்று நன்றி தெரிவித்து மெயில் அனுப்புங்கள். முடிந்தால் நீங்கள் எடுத்த புகைப்படங்களோடும் மேற்கண்ட ரிப்போட்டுடனும். உங்களைக் குறித்தும், உங்கள் கல்லூரி குறித்தும் நல் அபிப்ராயம் ஏற்பட உதவும்.

6) நீங்கள் போக இருக்கும் ஊரின் பாரம்பரிய சிறப்புகளையும் தெரிந்து வைத்துக்கொண்டு சக மாணவர்களை அசத்தலாம். (உ.ம்: ஹைதரபாத் என்பது கார்க்கி போன்ற சிந்தனையாளர்களும், வா. மணிகண்டன் போன்ற பெருங்கவிஞர்களும் வாழும் ஊர்... சானியாமிர்ஸா அவதரித்த திருத்தலம், நிஜாம்கள், ராமலிங்கராஜூக்கள், ரோஜா, சிரஞ்சீவி...)

7) ஐ.விக்களில் அறிவார்த்தமான கேள்விகளைக் கேட்ட பல பேருக்கு 'ஆன் தி ஸ்பாட் - அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்' கிடைத்த வரலாறு இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்.

அவளிடம் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டது "ஐ மிஸ் யூ" :(

Comments

//உ.ம்: ஹைதரபாத் என்பது கார்க்கி போன்ற சிந்தனையாளர்களும் //

அண்ணே! என்ன விளையாட்டு இது??????????
Anonymous said…
Dear selva, you are not mentioning the date in your posts. why? If you mention date, it will be easy for us to follow propoerly.
ஹைதரபாத் என்பது கார்க்கி போன்ற சிந்தனையாளர்களும்,

:)))
படிக்கும் போது இதெல்லாம் தோணாது சகா.. அடுத்த வர்றவங்களுக்கு சொல்லத்தான் தோணும்.. கேண்டி அப்படின்னு சொல்லல. கார்க்கி அப்படித்தான்னு சொல்றேன்..
செல்வேந்திரன்!

டிப்ஸ் ரொம்ப அருமையாக இருந்தது.
கேண்டிக்குச் சொல்வதாய் எல்லோருக்கும் சொல்ல்விட்டீர்கள்.
முடித்த இடம் மிக அருமை.
Anonymous said…
நல்ல, தேவையான அறிவுரைகள் செல்வா.
Karthikeyan G said…
பாவம் கேன்டி :(
விசிட்டுக்காக கேண்டி
(ஒற்றுப் பிழை)

கேள்விகளை கேட்பார்கள்
(ஒற்றுப் பிழை)

கேண்டிக்கு கீழ்க்கண்ட
(ஒற்றுப் பிழை)

குறைந்தபட்ச தகவல்களை
(ஒற்றுப் பிழை)

அதன் போட்டியாளர்கள் யார்
(அந்நிறுவனத்தாரின் போட்டியாளர்கள் யார்/ அந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் யாவை)

செயல்பாடுகள் எத்தகையது
(செயல்பாடுகள் எத்தகையன)

எப்படி செயல்படுகிறது
(ஒற்றுப் பிழை)

பார்வையிட கிடைத்திருக்கும்
(ஒற்றுப் பிழை)

அடித்து கற்றுக்கொள்ளும்
(ஒற்றுப் பிழை)

ரிப்போர்ட்டாக தயாரித்து
(ஒற்றுப் பிழை)

கொடுத்து படிக்க
(ஒற்றுப் பிழை)

பாரம்பரிய சிறப்புக்களை
(ஒற்றுப் பிழை)


ஒருமையில் அழைக்க ஆரம்பித்து முடித்த பதிவின் இடையில் பன்மையில் அறிவுரை பகன்றது போன்ற டெக்னிகல் பிழைகள் தனி.
Thamira said…
படிக்கும் போதே இந்த மாதிரி உருப்படியா சிந்திச்சு, நடந்துகொண்டிருந்தா உருப்பட்டிருக்கலாமேன்னு தோணுது. பெருமூச்சு விட்டுக்கிறேன்.. பயபுள்ளைய கேக்கமாட்டானுவளே..
Anonymous said…
செல்வா,

உங்கள் கேமிராவை கேண்டியிடன் கொடுத்து அனுப்பித்தீர்களோ? இல்லை.......
கடைசி வரி.. கவிதை!
ICANAVENUE said…
கலக்கல். இத காலேஜ் படிக்கற பசங்களுக்கு எப்பிடி கொண்டு பொய் சேதுறது தெரியல்லியே செல்வேந்திரன்!!
கலக்குறிங்க...

லேபிள் சூப்பரு...:)
ஹைதரபாத் என்பது கார்க்கி போன்ற சிந்தனையாளர்களும், //

கார்க்கி மேல் ஏன் இம்புட்டு கோவம் என்று தனிமடலில் தெரிவிக்க முடியுமா?

முகவரி
வால்பையன்
c/o லதானந்த(பாரஸ்ட் ஆப்பிஸர்)
10-ஆம் நம்பர் முருங்கை மரம்
அமேஸான் காடு
துபாய்.

தனிமடல் என்றால் மெயில் மட்டுமல்ல!
செல்வேந்திரன் தங்கள் வருகைக்கு நன்றி!

உபயோகமான பதிவு!

வாழ்த்துக்கள்!
Kumky said…
நல்ல வழிகாட்டுதல்கள்.
selventhiran said…
அப்துல்லா அண்ணே எனக்கும் 'அண்ணே' தானா?!

அணானி சரி செய்து விடுகிறேன்.

ஸ்ரீதர்கண்ணன், கார்க்கி, மாதவராஜ், அண்ணாச்சி, கார்த்திக்கேயன், பரிசல், ஐகேன், தமிழன் கருப்பி, விக்கினேஸ்வரன், மண்குதிரை, கும்க்கீ வருகைக்கு நன்றி!

லதானந்த் சார், என் பிழைகளைச் சுட்டியதற்கு நன்றி. பிழைகளற்று ஒரு பத்தி கூட எழுதத் தெரியாத நிலை பெருத்த அவமானத்தை ஏற்படுகிறது. ஒரு ஆசிரிய உள்ளத்துடன் என்னைக் கண்டிப்பதற்கும், திருத்துவதற்கும் நன்றி. பிழைகளற்ற பதிவோடு விரைவில் உங்கள் பாராட்டைப் பெறும் முயற்சியில் உள்ளேன். (இந்த பாராவில் ஏதாவது பிழைகள் இருக்கிறதா..?!)

தாமிரா, நாமெல்லாம் பிறவி ஞானிகள். இதற்கெல்லாம் கலங்கக் கூடாது.

வெயிலான், பரிசல் அண்ணாவின் காமெராவை இரவல் வாங்கிக் கொடுத்தனுப்பினேன். அதைக் குட்டையன் கடை புரோட்டா மாதிரி அவள் பிசைந்து கொண்டிருப்பதாகத் தகவல்...

யோவ் வால், துப்பாக்கியைக் கண்டு உமக்கு வேணும்னா பயம் இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு பயம் நெம்ப உண்டு.
SK said…
செல்வேந்திரன்,

ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது பதிவை பாத்து. என்னை மாதிரியே நீங்களும் நிறைய பேருக்கு ஆலோசனையா சொல்லி கெட்ட பேரு வாங்குவீங்கலோன்னு ஒரு பயம் தனி.

சரி விடயத்துக்கு வருவோம்.

௧. இதுபோன்ற சுற்றுலாக்களில் ஆசிரியரும் மிகவும் ஆர்வத்துடன் இருப்பது இல்லை. அப்படி இருந்தால் மாணவர்கள் ஆர்வம் அதிகம் ஆக வாய்ப்பு உண்டு.

இது போல கேள்விகள் கேட்கும் போது, சக மாணவர்களால் ரொம்பவே நையாண்டி செய்ய படுகிறார்கள். அதை தவிர்க்கணும். அடுத்த முறை அதையும் சேர்த்து கூறவும்.

அதே போல இது போன்ற கேள்விகளுக்கு நிறுவனமும் தயாராக உளதா என்று தெரியவில்லை.

என்னுடைய முக்கியமான வேண்டுகோள் :

பதிவில் ஆங்கில வார்த்தைகள் கலக்கலாம். சில இடத்தில் முடிந்த அதற்குக் இணையான தமிழ் வார்த்தைகளை அடைப்புகுறியில் கொடுத்தால் இரு முறை படிக்கும் பொது நினைவில் இருக்க வாய்ப்பு உண்டு.
SK said…
ithu athukku :)
செல்வா!
அணானி அல்ல. அனானி.

இந்த பாரா அல்ல.
இந்தப் பாரா!
Anonymous said…
அடடே, கேண்டி எங்க ஊருக்கு வந்தாங்களா!!! சொல்லிருக்கலாமே... அமர்க்களமா வரவேற்பு குடுத்துருப்போமே...
Anonymous said…
//
(உ.ம்: ஹைதரபாத் என்பது கார்க்கி போன்ற சிந்தனையாளர்களும், வா. மணிகண்டன் போன்ற பெருங்கவிஞர்களும் வாழும் ஊர்... சானியாமிர்ஸா அவதரித்த திருத்தலம், நிஜாம்கள், ராமலிங்கராஜூக்கள், ரோஜா, சிரஞ்சீவி...)
//

விஜய்கோபால்சாமி: என்ன பிள்ளேய், நம்மள மறந்துட்டீயளே...

செல்வேந்திரர்: சாமி, நீ இந்த ஒலகத்துக்கே சொந்தம், உன்னப் போயி ஹைதராபாத்காரன்னு எழுதலாமா!!!
செல்வேந்திரன்

டிப்ஸ் ரொம்ப அருமையாக இருந்தது
பிற்சேர்க்கை

ஒரு ஆசிரிய உள்ளம் அல்ல. ஓர் ஆசிரிய உள்ளம்
selventhiran said…
எஸ்.கே வாங்க... நீங்களும் நம்மள மாதிரி ரோசனை சொல்ற ஆளா...

விஜய், முதலில் எல்லா நண்பர்களது தொலைபேசி எண்களையும் கொடுத்து அவர்களையும் என் சார்பில் சந்தித்துவிட்டு வா என்றுதான் சொன்னேன். கல்லூரி நிர்வாகம் பயணத்தில் உறவினர்கள், நண்பர்களைச் சந்திப்பதைக் கட்டாயம் தவிர்க்கும்படி அறிவுறுத்தி இருந்ததால் விட்டு விட்டேன். கேண்டி ஹைதரபாத் குறித்துச் சொன்ன தகவல்கள் ஊர் சுற்றும் என் ஆவலைத் துண்டியிருக்கிறது. விரைவில் ஒரு பதிவர் சந்திப்பிற்கு நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டி வரும்...

முரளிகண்ணன் வருகைக்கு நன்றி.

லதானந்த் சார், பிழைகளைச் சுட்டியதற்கு நன்றி.
uvaraj said…
ஹைதரபாத் பத்தி சொல்லும் போது என்னை மறந்துடிங்களே வாத்தியாரே ?