நொதுமம்
இயன் வழுப்புள்ளி
நொதுமம்
பேரொளிர் முகில்
வெள்ளை குறளி
மேற்படி வார்த்தைகளை நீங்கள் என்றாவது எதிர் கொண்டிருக்கிறீர்களா? அவை முறையே சிங்குலாரிட்டி, நியூட்ரான், சூப்பர் நோவா, ஓயிட் ட்வார்ப் போன்ற அறிவியல் வார்த்தைகளின் நேரடி மொழியாக்கமாம்.
ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பற்றிய குறிப்பொன்றினைப் படித்துவிட்டு ஹாக்கின்ஸ் எழுதிய 'ஏ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்' நூலையும் படித்தாக வேண்டும் என கடைகடையாய் தேடி அலைந்தேன். இன்ப அதிர்ச்சியாக, அதன் தமிழ் மொழியாக்கமான 'காலம் ஒரு வரலாற்று சுருக்கம்' கிடைத்தது. ஆஹா! ஆங்கிலத்தில் படித்து மண்டையைச் சொறிவதைவிட தமிழிலே கிடைத்துவிட்டது என ஆனந்தமாக புத்தகத்தை வாங்கினேன். என் மொத்த ஆர்வத்தையும் வடித்துவிட்டது அதன் மொழிநடை. மொழிபெயர்ப்பாளர் வார்த்தைகள் முழுக்க முழுக்க தமிழில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தானே பல புதிய கலைச்சொற்களை உருவாக்கி எந்த பச்சைத்தமிழனும் புரிந்து கொள்ள முடியாத ஒரு தேவபாஷையை புத்தகம் முழுவதும் விதைத்திருக்கிறார்.
'மொழிபெயர்ப்பில் எது நழுவிப்போய்விடுகிறதோ அதற்கு கவிதையென்று பெயர்' என மொழிபெயர்ப்பு குறித்த ஒரு நகைச்சுவை சொல்லாடல் உண்டு. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதை விட எழுத்தாளன் சொல்ல வரும் கருத்தை தத்தம் தாய்மொழியில் மேம்படுத்தி வெளிப்படுத்துவதுதான் நல்ல மொழிபெயர்ப்பாய் இருக்க முடியும்.
ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எழுதிய முன்னுரை ஒன்றை மொழிபெயர்க்கையில் 'நியூயார்க்' என்பதை புதுயார்க் என மொழிபெயர்த்துள்ளார் நமது தமிழ்குஞ்சு. இவர் தமிழ்த்தொண்டு செய்யவேண்டும் என்பதற்காக தம்முடைய மருத்துவ பணியை துறந்ததாக சொல்கிறார். அடக்கடவுளே!
இந்நூலை ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எழுதும்போது பதிப்பாளரிடம் 'அடித்தட்டு மக்களுக்கும் அறிவியலை கொண்டு சேர்க்க விரும்புகிறேன்' என்றாராம். 'அப்படியானால் அதிக சமன்பாடுகளை பயன்படுத்தாமல் எளிய வார்த்தைகள் மூலம் உங்கள் கருத்தை விளக்குங்கள். ஏனென்றால் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சமன்பாடும் புத்தகத்தின் விற்பனையைப் பாதியாக குறைத்துவிடும்' என்றாராம் பதிப்பாளர். அதற்கேற்ப தம்மால் முடிந்தவரை ஹாக்கின்ஸ் எளிமைப்படுத்தி எழுதிய புத்தகத்தை தமிழ்படுத்துகிறேன் பேர்வழி என கைமா செய்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்.
'க,நா.சு மொழி பெயர்த்த உலக இலக்கியம்' (சந்தியா பதிப்பகம்) என்ற நூலில் 'மனுஷ்ய நாடகம்' என்ற நாவலை மொழிபெயர்த்திருப்பார் க.நா.சு. கதை நிகழும் தேசத்தின் குளிர் வாசிப்பவனை நடுங்கச் செய்யும் அதி உன்னத மொழி பெயர்ப்பு. என் அபிப்ராயத்தில் மொழிபெயர்ப்பு க.நா.சு காலத்தோடு நின்றுவிட்டது.
Comments
பெயர்ச்சொல்லை மொழி பெயர்ப்பது முட்டாள்தனம். இங்கே இன்னும் சிலர் அதை செய்துக் கொண்டிருக்கிறார்கள்
சொர்க்கத்தில் மிதப்பதை
காண்கிறேன்.
சாத்தானை ஆசிர்வதித்து
தேவதையை சபித்து
கடவுளாகிறே///
அட்டகாசமான வரிகள் ,கற்பனைகள்
உண்மை..
அருமையான பதிவு.. :))
இயன் வழுப்புள்ளி
நொதுமம்
பேரொளிர் முகில்
வெள்ளை குறளி
போன்ற சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களை அடைப்புக்குறிக்குள்ளோ நூலின் இறுதியில் பட்டியலாகவோ தந்திருக்கவில்லையா? தந்திருந்தால் நூலாசிரியரைப் பெரிதாக குறை சொல்ல இயலாது.
//மொழிபெயர்ப்பாளர் வார்த்தைகள் முழுக்க முழுக்க தமிழில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தானே பல புதிய கலைச்சொற்களை உருவாக்கி எந்த பச்சைத்தமிழனும் புரிந்து கொள்ள முடியாத ஒரு தேவபாஷையை புத்தகம் முழுவதும் விதைத்திருக்கிறார்.
//
singularity, white dwarf, super nova போன்ற சொற்கள் எத்தனை பச்சைத் தமிழர்களுக்குப் புரியும்?
//'நியூயார்க்' என்பதை புதுயார்க் என மொழிபெயர்த்துள்ளார் //
நியூயார்க் குறித்த ஆங்கில விக்கி கட்டுரையில் பிற மொழிக் கட்டுரைகளுக்கான இணைப்புகள் உண்டு. அவற்றில் எத்தனை மொழிகளில் new என்பதற்குப் பதில் அம்மொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
நம்மூரில் உள்ள செங்குன்றத்தை நாமே RedHills என்று மொழிபெயர்த்து எழுதும்போது, வேறொரு நாட்டில் உள்ள ஊரின் பேரை ஏன் தமிழில் தரக் கூடாது?
இயன்றால் பெயர்ச்சொல் தமிழாக்கம் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.
நன்றி: ரவிசங்கர்
//
singularity, white dwarf, super nova போன்றவை அறிவியல் கலைச்சொற்கள். அவற்றை Firefox போன்ற வணிகப்பெயர்களோடு ஒப்பிடுவது சரியாகாது.
சரியான பார்வை.
//
அடா அடா.. இதயே இப்பிடி பண்ணிருக்கார்னா உள்ளே இன்னாமேரி பண்ணிருப்பார்..
சரிதான்.நான் ரஷ்ய கதைகளின் மொழிபெயர்ப்புகளைப் படித்திருக்கிறேன்.எளிமையாக இருக்கும்.அப்படி இருந்தால்தான் என்னைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
திசை எட்டும் போன்ற பத்திரிகை எல்லாம் வாசிக்கறீங்களா?
எப்படிங்க இந்த மாதிரி அசால்ட்டான கருத்து விடறீங்க ;)
என்ன படிச்சீங்க, எப்ப எழுதியது என்றெல்லாம் கொஞ்சமாவது பின்னணி தராமல், axiom இடுவது ஜோசியக்காரர் மாதிரி ஆக்குது :P
நூலாசிரியர்: நலங்கிள்ளி
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சிக்காகோ.