Wednesday, April 1, 2009

லேடீஸ் ஹாஸ்டல்

காலை ஐந்து மணி. கேண்டி அழைத்திருந்தாள்.

"சொல்லுமா"

"எங்க இருக்க"

"ராம்நகர்ல டோர் கால்ஸ் பார்த்துகிட்டு இருக்கேன்... ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு...? ஏதாவது பிரச்சனையா...?!"

"கைய அறுத்துக்கிட்டேன்"

"ஐய்யய்யோ ஏன்... என்னாச்சி"

"பழம் வெட்டறப்போ கையில வெட்டிக்கிட்டேன். ரத்தம் கொட்டுது. நிப்பாட்ட முடியல..."

"ஐய்யய்யோ...பக்கத்துல யாராவது இருக்காங்களா?!"

"யாரும் இல்ல"

"அடக்கடவுளே... பாத்து வெட்டக்கூடாதா?! எதிர்த்தாப்ல இருக்கிற க்ளினிக் திறந்திருக்கா"

"இல்ல... ஆ... அம்மா தலைசுத்துதே..."

லைன் கட்டாகி விட்டது. திரும்ப அழைத்தால் போன் சுவிட்ச் ஆஃப். அடக்கடவுளே இந்த நேரத்திலா 'லோ பேட்டரி'. அடித்துப்பிடித்து எதிர்வரும் நபர்களை இடித்து வளைத்துத் திருப்பி அவளது ஹாஸ்டலுக்கு விரைந்தேன். லேடீஸ் ஹாஸ்டலுக்குள் எப்படி நுழைவது? வாசலில் நின்று 'வாட்ச்மேன்...வாட்ச்மேன்...' பதிலில்லை. சரி யாராவது கேண்டியின் தோழிகள் வந்தால் தகவல் சொல்லி ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய்விடலாம் என்று வெளியே காத்திருந்தேன். பத்து நிமிடங்கள் கழிந்தும் மனித சஞ்சாரமே இல்லாததால் என் பதட்டம் அதிகரிக்கத் துவங்கியது. சரி இதற்கு மேல் பொறுக்க முடியாது என கதவைத் திறந்து கொண்டு நுழைய முற்பட்டால் "யாருப்பா அது பொண்ணுங்க ஹாஸ்டலுக்குள்ள நுழையுறது...?!' கேலியாகச் சிரித்தபடி கதவின் மறைவில் இருந்து வெளிப்பட்டாள் கேண்டி.

"நல்லா ஏமாந்தியா.... ஏப்ரல் ஃபூல்!"

எனக்கு வந்த ஆத்திரத்தில் சிரித்துவிட்டேன்.

29 comments:

மண்குதிரை said...

(-:

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஓஹ் இன்னைக்கு ஏப்ரல் 1 ல்ல.

வித்யாசமாய் பதிவிட்டு ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள்.

rameshkumar said...

அடித்திருக்க வேண்டும்

கார்க்கி said...

/எனக்கு வந்த ஆத்திரத்தில் சிரித்துவிட்டேன்//

இப்பவேவா சகா.. நல்லா பழகிட்டீங்க.. எதிர்காலத்துல ஒன்னும் பிரச்சனை இருக்காது..

வால்பையன் said...

லேபிள் சூப்பர்!

ரமேஷ் வைத்யா said...

எனக்கு வரும் வெறியில் உன்னைப் பாராட்டுகிறேன்.

உமாஷக்தி said...

ச்சோ...சோ..ஐய்யோ பாவம் செல்வா...ஆனா நல்லா வேணும். கேண்டியை கேட்டதாகச் சொல்லு...சொல்ல மறந்துட்டேனே...ஹேப்பி ஃபூல்ஸ் டே 

selva kumar said...

பிரியமானவர்கள் ஏமாற்றினால் கோபம் வராது, சிரிக்கத்தான் வேண்டும்.

வெயிலான் said...

// இப்படித்தான் கிழிகிறது டவுசர் //

:))))

SK said...

ஒண்ணுமே பண்ண முடியாது :)

ச்சின்னப் பையன் said...

ஆத்திரத்திலே நீங்க கேண்டி கையை வெட்டிடலியே???

Anonymous said...

ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும். அப்புறம் பழகிடும்.

பாலராஜன்கீதா said...

ஏதேனும் ஒரு வணிக இதழின் ஒரு / அரைப்பக்க கதைபோல் இருக்கிறது.
:-)

இரா.சிவக்குமரன் said...

///எனக்கு வந்த ஆத்திரத்தில் சிரித்துவிட்டேன்.///

எனக்கு ரொம்ப பிடித்த விஷயம், கோவம் வந்தா சிரிக்கிறது.

தமிழன்-கறுப்பி... said...

ஆமால்ல...

உண்மைல நீங்க வைக்கிற லேபிள் பெயர் கூட சூப்பராத்தான் இருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

கார்க்கி said...
/எனக்கு வந்த ஆத்திரத்தில் சிரித்துவிட்டேன்//

இப்பவேவா சகா.. நல்லா பழகிட்டீங்க.. எதிர்காலத்துல ஒன்னும் பிரச்சனை இருக்காது..
\\

:))

ஆதிமூலகிருஷ்ணன் said...

எனக்கு வந்த ஆத்திரத்தில் சிரித்துவிட்டேன்//

வெளங்கிரும்..

Anonymous said...

:) நல்லா இருந்ததுங்க! நல்ல திருப்பம்!

சென்ஷி said...

:-))))


லேபிள் சூப்பர்

Anonymous said...

விசிறிச் சிதறும் மழையில்
நனைவது சுகம்தான்
வசிப்பதன்று...

இது எங்க பேராசிரியர் ஒருத்தர் எழுதின கவிதை. ராயப்பேட்டைல ஒரு மேன்சன்ல அல்லோல கல்லோலப் பட்ட காலத்துல எப்படியாச்சும் ஒரு தனி போர்ஷன் பாத்து குடிபோயிறனும்னு அலையா அலைஞ்சேன். அப்படி ஒரு வீடும் அமைஞ்சுது. ஆனா வில்லங்கமே அந்த வீட்டுக்கு எதிர்ல இருந்த லேடீஸ் ஹாஸ்டலாலதான்.

அங்க இருக்கற பொண்ணுங்க கிட்ட கடல வறுக்க வந்தவன் ஜொள்ளுவிட வந்தவன் இப்படி போனவன் வந்தவனால எல்லாம் என் நிம்மதி கெட்டது தான் மிச்சம்.

VIKNESHWARAN said...

லேபில் நல்லா இருக்கு...

வெங்கட்ராமன் said...

இந்த மாதிரி பதிவு ஏற்கனவே போட்ருக்கீங்களோ. . .

(எப்போதோ படிச்ச மாதிரி இருக்கு)

மங்களூர் சிவா said...

லேபில் சூப்பர்!!!

செல்வேந்திரன் said...

வாங்க மண்குதிரை

அம்ரிதவர்ஷிணி அம்மா வாங்கம்மா

ரமேஷ்குமார், பெண்களிடத்தில் மன்னிக்கவும் சக மனிதகளிடத்தில் வன்முறை கூடாது.

கார்க்கி சகா, நீங்களும் என்னை மாதிரி மாறிக்கனும்.

'வால்' ஆட்டியதற்கு நன்றி.

ரமேஷ் அண்ணா, வண்ணதாசன் கடிதங்கள் தொகுப்பில் ரமேஷூக்கு கடிதங்கள்னு எழுதி இருக்காரே... உங்களுக்குத்தானா?!

உமா, அவளும் உங்களை ரொம்ப கேட்டதா சொல்லச் சொன்னாள்.

செல்வகுமார் வருகைக்கு நன்றி.

வெயிலான் எப்ப ஊருக்கு கிளம்பறீங்க?

எஸ்கே அனுபவஸ்தர்.

ச்சின்னப்பையன் அப்புறம் அவ என் கழுத்தையே வெட்டிடுவா?

வடகரை வேலன் அனுபவஸ்தர் - 2.

அடடா பாலராஜன் முன்னூறு ரூபா ரெமுனரேஷன் போச்சே :)

இரா. சிவக்குமரன் அனுபவஸ்தர் 3.

தமிழன் - கறுப்பி வருகைக்கு நன்றி.

ஆமூகி, ஆமா வெளங்கிரும்.

ஷீ-நீசி வருகைக்கு நன்றி.

சென்ஷி வாங்க.

விஜய், கவிதை அருமையா இருக்கே.

வாங்க விக்கி.

வெங்கட்ராமன், பிரச்சனை பண்ணாதீங்க.

மங்களூரார் மெயில் அனுப்பலைன்னா... ஸ்ரீராம் சேனாவுக்கு போன போட்டுடுவேன்.

sriram said...

கடைசி வரியைப் படிக்கும்போது எனக்கு விருமாண்டில ஒரு சீன் ஞாபகம் வருது. கமல் பசுபதி கும்பலோட பேசிட்டு இருக்கும்போது ஹீரோயின் (பேரு ஞாபகம் வரல்ல) " கொஞ்சம் உள்ள வாரியளா" னு கூப்டுவாங்க. அதுக்கு கமல் , " பேசிட்டு இருக்கோம்ல"னு சொல்லிட்டு , கும்பல்கிட்டே, " எனக்கு வர கோபத்துக்கு......... போயி என்னனு கேட்டுட்டு வந்திர்றேன்"னு சொல்லிட்டு போவார். நல்லா எழுதி இருக்கீங்க.:)

மங்களூர் சிவா said...

மெயில் அனுப்பி ரெண்டு நாள் ஆச்சு/ வெயிட்டிங் ஃபார் ரிப்ளை

பிரேம்குமார் said...

//எனக்கு வந்த ஆத்திரத்தில் சிரித்துவிட்டேன்.//

ஆம்பிளையா இருந்தா அடிச்சு தொவைச்சிருப்பீரு! பொம்பளை புள்ளங்கிறதால சிரிச்சு வச்சிட்ட :-)

நல்லா இருங்கடே

அபி அப்பா said...

;-))

விக்னேஷ்வரி said...

எனக்கு வந்த ஆத்திரத்தில் சிரித்துவிட்டேன். //

Nice ending.
பொம்பளப் புள்ளனா, சிரிக்குறியா.... நல்லா இருலே.