Tuesday, April 28, 2009

இரு கடிதங்கள்

அன்பு செல்வாவிற்கு ,

ப்ரிய வணக்கங்கள்.

' சுண்ணாம்பு தடவப்பட்ட வலைப்பதிவர்கள் ' என்ற தலைப்பில் லக்கியின் பதிவை படித்தவுடன் ஏற்பட்ட எனது உணர்ச்சியை லக்கிக்கு ஒரு கடிதமாகப் பதிவு செய்திருக்கிறேன். லக்கியின் பதிவிற்கு அனுப்பப்பட்ட 64 பின்னுட்டங்களிலும் பெரும்பான்மையோர் அவரது கருத்திற்கு எதிர் கருத்து கூறாத நிலையில், புதிய வலைப்பதிவர் என்ற முறையில் எனது பதிவை , எனது எண்ணத்தைப் பலரும் அறிய முடியாத சூழலில் அவரது கருத்திற்கு சரியான எதிர்கருத்தாக எனது பதிவு இருக்கிறது என்று நீங்கள் எண்ணினால் அதை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்ப்பது உங்கள் பொறுப்பு.

அண்ணாச்சிக்கு எனது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவியுங்கள் .

தோழமையுடன் ,
வசந்த் ஆதிமூலம்.

அன்பின் வசந்த்,
சமீப காலமாய் லக்கியின் எழுத்துப்போக்கு சரியான பாதையில் இல்லை. எழுத்தாளனுக்கு அறச்சீற்றம் முக்கியம். எழுத்தாளனாகும் நப்பாசையில் இருக்கும் லக்கி முகாம்களுக்குள் இருந்து கொண்டு 'ஜிங்-ஜக்' பாணி எழுத்துக்களை எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார். வாசகர் வட்டம் பெருத்தல் ஆரோக்கியமானதுதான். ஆனால், அவர் ரசிகக் கண்மணிகளையல்லவா திரட்டிக்கொண்டுத் திரிகிறார். இது திராவிடக்குஞ்சுகளின் ஆதி புத்தி. தடுக்க முடியாது. தவிர்க்கலாம்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

பின்குறிப்பு:
உங்களது ஆத்திரம் நியாயமானது. ஆனால், 'லக்கி தண்ணியடித்துவிட்டு எழுதுகிறார்' என்பது போன்ற தனிமனித தாக்குதல்களைத் தவிர்த்திருக்கலாம். அப்புறம், லக்கிக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?!

24 comments:

ராஜ நடராஜன் said...

//லக்கியின் பதிவிற்கு அனுப்பப்பட்ட 64 பின்னுட்டங்களிலும் பெரும்பான்மையோர் அவரது கருத்திற்கு எதிர் கருத்து கூறாத நிலையில்,//

பதிவுகளுக்குப் போகும் வாசகர்கள் எழுத்தின் தரத்தையும் கணித்தே பின்னூட்டம் போடுவார்கள் என நினைக்கிறேன்.அல்லது தவிர்ப்போமே என்ற பார்வையில் எதுவும் சொல்லாமலும் பேசாமடந்தைகளாகவும் வருவதுண்டு.

வால்பையன் said...

இங்கே வரும் பின்னூட்ட விவாதங்களை அறியும் பொருட்டு இந்த பின்னூட்டம்!

வசந்த் ஆதிமூலம் said...

//'லக்கி தண்ணியடித்துவிட்டு எழுதுகிறார்' என்பது போன்ற தனிமனித தாக்குதல்களைத் தவிர்த்திருக்கலாம். //

லக்கியினுடைய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அந்த கருத்தை எழுதியுள்ளேன். நான் குறிப்பிட்ட பதிவிற்கு அடுத்த பதிவை அவர் அந்த நிலையிலேயே பதிவு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மணிகண்டன் said...

***
சமீப காலமாய் லக்கியின் எழுத்துப்போக்கு சரியான பாதையில் இல்லை
***

செல்வேந்திரன், உங்களுடைய பதிவுகளை கடந்த ஆறு மாதங்களாக படித்து வருகிறேன். ஒரு சில பதிவுகள் பிடித்தும் இருக்கின்றன. பின்னூட்டமும் இட்டு இருக்கிறேன். உண்மையில் சொல்ல போனால் உங்களது எழுத்து போக்கும் சரியான திசையில் இல்லை. லக்கியை நோண்டுவதாகவே மாறி வருகிறது. அவருடைய எழுத்து முன்னேற வேண்டும் என்ற நல்லெண்ணமாக இருந்தால் அவரிடம் தனியாக பேசலாம். அதை விட்டு, அவர் பதிவில் போட மறுத்த கமெண்ட் முதற்கொண்டு பிரசுரம் செய்து, எழுதியவருக்கு ஒரு அட்வைஸ் வேறு. நீங்கள், லக்கி மற்றும் பலரும் எழுத / அதை பலரும் படிக்க வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. ஒருவரை ஒருவர் சீண்டி கொண்டே தான் இருக்கவேண்டும் என்பது அல்ல. என்னை போன்று எழுத தெரியாதவர்கள் வேண்டும் என்றால் பிறரை கவருவதற்கு சீண்டும் வகையில் கமெண்ட் எழுதி / அதை படித்த ஒரு சிலர் நம் பக்கம் வருவதை பார்த்து புளகாங்கிதம் அடையலாம். உங்களுக்கு தேவை இல்லை என்பது என் கருத்து. விலகி செல்லுங்கள்.

VIKNESHWARAN said...

//இங்கே வரும் பின்னூட்ட விவாதங்களை அறியும் பொருட்டு இந்த பின்னூட்டம்!//

அதே ரிப்பீட்டிக்கிறேன்.

Karthikeyan G said...

//வாசகர் வட்டம் பெருத்தல் ஆரோக்கியமானதுதான். ஆனால், அவர் ரசிகக் கண்மணிகளையல்லவா திரட்டிக்கொண்டுத் திரிகிறார். இது திராவிடக்குஞ்சுகளின் ஆதி புத்தி.
//

அப்டியே தன்னைவிட புகழ் பெற்றவரை இழிப்பது யாருடைய புத்தி என்பதையும் சொல்லிவிடுங்கள்.

Anonymous said...

////லக்கியின் பதிவிற்கு அனுப்பப்பட்ட 64 பின்னுட்டங்களிலும் பெரும்பான்மையோர் அவரது கருத்திற்கு எதிர் கருத்து கூறாத நிலையில்,//

பதிவுகளுக்குப் போகும் வாசகர்கள் எழுத்தின் தரத்தையும் கணித்தே பின்னூட்டம் போடுவார்கள் என நினைக்கிறேன்.அல்லது தவிர்ப்போமே என்ற பார்வையில் எதுவும் சொல்லாமலும் பேசாமடந்தைகளாகவும் வருவதுண்டு.//

உங்கள் இருவர் கருத்தும் தவறு. லக்கியின் பதிவுகளுக்கு வரும் மொத்த கமெண்டுகளில் 20% தான் ஜால்ராக்கள் கமெண்ட். மற்ற 80% மாற்றுக் கருத்து கொண்ட பின்னூட்டங்களை அவர் வெளியிடுவதில்லை. அதனால் யாரும் எதிர்கருத்து சொல்லாமல் ஒதுங்கி செல்வது போல் தெரிகிறது. கிழக்குப் பதிப்பகம் மற்றும் சாரு நிவேதிதாவை ஜால்றா அடிப்பதே பெரும் கடமையாய்க் கொண்டுள்ளார். புத்தகம் போட்டவர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டாமா?.

வெறும் பரபரப்புக்காக பதிவெழுதிக் கொண்டிருக்கிறார். செல்வேந்திரன், லக்கியை பொருட்படுத்தி உங்கள் தரத்தைத் தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்பதே என் ஆலோசனை.

இந்த பின்னூட்டம் வெளியிடப் படும் என்று நம்புகிறேன். நன்றி.

வெங்கிராஜா said...

பனிப்போர் இப்போ இப்படி ஆகிப்போச்சா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

லக்கியுடனான வார்த்தைச்சண்டை உங்கள் இருவரின் தகுதிக்குமே அழகானதல்ல..

எழுத்து பிடிக்கவில்லையாயின், நாகரீகமான முறையில் விமர்சிக்கலாம். அல்லது விலகிப்போகலாம். அதை விடுத்து வெற்றி பெற்றவரை தாக்குவது 'சீப் பப்ளிசிடிக்கான' முயற்சியாக உங்கள் மீதான தவறான தோற்றத்தை உருவாக்கும்.

மங்களூர் சிவா said...

/
இங்கே வரும் பின்னூட்ட விவாதங்களை அறியும் பொருட்டு இந்த பின்னூட்டம்!
/

ரிப்பீட்டு

என்.இனியவன் said...

முன்பு இப்படித்தான், வால் என்பவர் தமிழச்சியை வம்புக்கு இழுத்து பதிவெழுதினார்.
பாவம் சில பதிவர்கள் அரசியல் தெரியாமல் வாலுக்கு support பண்ணி பின்னூட்டம் போட்டார்கள்.
அடுத்த பதிவில் வால் சொன்னார்."தானும் தமிழச்சியும் சேர்ந்து செய்த setup தானாம் .
மற்ற பதிவர்கள் பற்றிய தங்கள் ஊகம் சரியா என பார்க்க தான் அந்த பதிவாம்"என்றார்.
சில பிரபல பதிவர்கள் (உங்களது நட்பு வட்டாரம்) பின்னூட்டம் இடுவதை தவிர்த்தார்கள்.
ஒருவேளை அதுவும் setup தானோ?

இப்ப நீங்கள் லக்கியை இழுக்கிறீர்கள். இது நீங்கள் இருவரும் எடுத்த முடிவோ,
அல்லது நட்பு வட்டாரம் எடுத்த முடிவோ.

இடையில் பரிசல், கார்க்கி சேர்ந்து ஒன்று.அவர்களை மன்னிக்கலாம்.
அவர்கள் அடுத்தவர்களை பாதிக்காததால்.

பாவம் இப்ப தான் சிலர் தடக்கி தடக்கி பதிவெழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.
அவர்களை திருப்பி ஓட வைத்திடாதீர்கள்.

அய்யா, அம்மாவின் அரசியலை விட இது பெரிதாகி விட்டது.

வால்பையன் said...

அண்ணே நான் தமிழச்சியை வம்புக்கு எல்லாம் இழுக்கவில்லை!

சாட்டில் பேசியதை ஜொள்ளியதை போல மாற்றி வெளியிட்டேன்!

தமிழச்சியின் அனுமதியோடு!

என்.இனியவன் said...

//அண்ணே நான் தமிழச்சியை வம்புக்கு எல்லாம் இழுக்கவில்லை!

சாட்டில் பேசியதை ஜொள்ளியதை போல மாற்றி வெளியிட்டேன்!//

To வால்பையன் .
ஜொள்ளியதை என்ற வார்த்தை எனக்கு நினைவில் வரவில்லை.
அது தான் அப்படி எழுதிவிட்டேன்.
நீங்களும் தமிழச்சியும் நல்ல நண்பர்கள் என்பதை அந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேலுள்ள பின்னூட்டத்தை நான் கோவமாக‌ ஒன்றும் எழுதவில்லை.
நக்கலாக தான் எழுதினேன்.
உங்களை புண்படுத்தியிருந்தால் பெயர் சம்பந்தபட்டவர்களிடம் மன்னிக்க வேண்டுகிறேன்.
முக்கியமாக வால்பையனிடம்.

வால்பையன் said...

அண்ணே நேரில் அடித்தாலே புண்படாத உடல் என்னுடயது!

இந்த பின்னூட்டத்திலா புண்பட போகிறேன்!

அந்த பதிவில் தமிழச்சி ஒரு வார்த்தை கூட தவறாக பேசியிருப்பது போல் இருக்காது! காரணம் என் விளம்பரத்திற்கு அவர்களது இமேஜை காயப்படுத்திவிட கூடாது என்பதற்காக!

அதை போல பல பதிவர்களை கிண்டல் செய்து பதிவெழுதியுள்ளேன்!

அடுத்த பதிவில் செல்வேந்திரன் கூட வருவார்!

Anonymous said...

அன்பின் செல்வா,

இப்பதிவைக் குறித்து உங்களை விமர்சிக்க எதுவுமில்லை. ஆனால் நண்பர் வசந்த் ஆதிமூலம் உங்களை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று மட்டும் புலப்படுகிறது.

ஆற்றை ஆழம் பார்க்க அடுத்த வீட்டுப் பிள்ளையை இறக்கிவிட்டுள்ளார். வாழ்க.

BEST FUNDS ARUN said...

அன்பு செல்வா,
நடிகையை உங்களுக்கு ஏற்பாடு பண்ண கேட்ட விசயத்தை அந்த நடிகைக்கு தெரிந்தவர் மூலம் நேரடியாக சொல்லலாம். நீங்கள் மீடியாவில் இருப்பதால் முடியும். அட்சி விடுத்தது அந்த நடிகை பெயரை போட்டு உங்களுக்கு செஅப் புப்ளிசிட்டி தேடி கொண்டீர்கள். இது குறித்து வலைஉலக மாமனிதர் லதானந்த் உங்களை கண்டித்திருப்பார் என நினைக்கிறன்.

செல்வேந்திரன், உங்களுடைய பதிவுகளை கடந்த ஆறு மாதங்களாக படித்து வருகிறேன். ஒரு சில பதிவுகள் பிடித்தும் இருக்கின்றன. பின்னூட்டமும் இட்டு இருக்கிறேன். உண்மையில் சொல்ல போனால் உங்களது எழுத்து போக்கும் சரியான திசையில் இல்லை. லக்கியை நோண்டுவதாகவே மாறி வருகிறது. அவருடைய எழுத்து முன்னேற வேண்டும் என்ற நல்லெண்ணமாக இருந்தால் அவரிடம் தனியாக பேசலாம். அதை விட்டு, அவர் பதிவில் போட மறுத்த கமெண்ட் முதற்கொண்டு பிரசுரம் செய்து, எழுதியவருக்கு ஒரு அட்வைஸ் வேறு. நீங்கள், லக்கி மற்றும் பலரும் எழுத / அதை பலரும் படிக்க வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.

வெறும் பரபரப்புக்காக பதிவெழுதிக் கொண்டிருக்கிறார். செல்வேந்திரன், லக்கியை பொருட்படுத்தி உங்கள் தரத்தைத் தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்பதே என் ஆலோசனை.

இந்த நடிகை மேட்டர் கூட நிங்கள் தேடிய செஅப் புப்ளிசிட்டி அல்லது பரபரப்பு.


ஒன்று லக்கி உடன் நேரடியாக பேசுங்கள். அல்லது ஒதுங்கி செல்லுங்கள். அதை வித்து தனி நபர் விமர்சனம் வேண்டம்.
லக்கி மற்றும் நீங்கள் இருவருமே நல்ல திறமைசாலிகள். சோ பொறாமை வேண்டாம்.

என்ன கணிபுஉபடி லக்கி பதிவுலக மாஸ் ஹீரோ. விரைவில் மிக பெரியாஆபட்ட எழுதலரக வருவார்.


செல்வா,
என்னுடைய பிநூடம் உங்களை குறை சொல்ல இல்ல, நான் உங்களை குறை சொல்ல உரிமை உண்டு. நான் சங்கரன்கொயில் காரன்.

Anonymous said...

மீண்டும் அந்த நடிகையின் பெயர் அடிபடுகிறது. இது குறித்த எனது புரிதலை இங்கே சொல்ல விரும்புகிறேன். ஏற்பாடு செய்து தருகிறேன் என்று அந்த ஓரினச்சேர்க்கையாளன் சொன்னதை ஏன் நேரடியாக நடிகையிடமே சொல்லியிருக்கக் கூடாது என்று கேட்பவர்களே, நடிகை விஷயம் செல்வாவுக்குப் போடப்பட்ட தூண்டில். அந்த நடிகைக்கும் அவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாமலிருக்கவும் வாய்ப்பு உண்டு. நேரடியாக இதை அந்த நடிகை வரை கொண்டு சென்றிருந்தால் செல்வா அசிங்கப்பட்டிருக்கவும் கூடும்.

என் டைரியில் எழுதக் கூடியதைத்தான் என் ப்ளாகில் எழுதிவருகிறேன் என்று சொல்லுகிற நியாயமும் உரிமையும் லக்கிக்கு எவ்வளவு உண்டோ அவ்வளவு செல்வாவுக்கும் உண்டு. இங்கே வந்து சீப் பப்ளிசிட்டி சீப் பப்ளிசிட்டி என்று கூப்பாடு போடுகிறவர்கள் “இது நான் எழுதும் நூறாவது பதிவு”, “ட்வீட்டரில் என்னை இருநூறு பேர் பாலோ பண்ணுகிறார்கள்” என்றேல்லாம் பதிவுபோடுகிறவர்களிடம் ஏன் சீப் பப்ளிசிட்டி என்று சொல்லுவதில்லை.

சவம், இதச் சொல்லுறதுக்கு உரிமை எனக்கும் இருக்குல்ல. நானும் நாங்குனேரிக்காரன்தான்.

Kanna said...

நானும் லக்கிக்கு சில மாற்று கருத்துக்களை தெரிவித்து பின்னூட்டம் போட்டேன்.. பப்ளிஷ் பண்ணவில்லை...

இங்கு அவரை ஆதரித்து சில கருத்துகளை தெரிவித்த சிலருக்கு இந்த கேள்வி...

அவர் வலையுலகின் மிக பிரபலமான பதிவர்.சக பதிவர்களை கீழ்தரமாக விமர்சிக்கும் பாணியை அவரே தொடர்ந்தால்.....புதியதாக வருபவர்களின் நிலை...


சகபதிவர்களை திட்டிதான் ஹிட் பெறவேண்டும் என்று நினைத்திருந்தால்... அது மிக வருத்தமான விஷயம்...

ஏன் இங்கு அவருக்கு பரிந்து பேசும் சகபதிவர்கள் எல்லாரும் அங்கு அவரின் தலைப்புக்கு கண்டங்கள் தெரிவிக்கவில்லை...

அவரை ஆதரியுங்கள்...தப்பில்லை...கண்மூடிதனமாக ஆதரிக்காதீர்கள்.....

Anonymous said...

என்ன நடக்குது இங்க? ஏன் எல்லாரும் சிரிப்பு சிரிப்பா கமெண்ட் போடறாங்க? :))

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

சீரியஸ் பதிவில் கும்மி அடிகக்த் துடிக்கும் வால்பையனை வன்மையாகக் கண்ணடிக்கிறேன்.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

ஃப்ரீயா விடுங்க பாஸ்.. :)

BEST FUNDS ARUN said...

அந்த நடிகை விசயம்

செல்வா இதை அந்த நடிகை கவனதிருக்கு கொண்டு செண்ட்ரால் அந்த நடிகை அந்த மாமா நபரை கடிதிருப்பர்.

அது மட்டும் தாஅன் என் என்னம்.
செல்வா எஅன் அதை செய்யல


மட்ர்ர படி செல்வா கருத்துக்கல் ok
தவரு இல்லை

வசந்த் ஆதிமூலம் said...

கருத்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. திரு.லக்கி அவர்கள் எதை வேண்டுமானாலும் எழுதி விட்டு போகட்டும். அவரது கருத்திற்கு எல்லாம் மறுகருத்து அளித்து கொண்டிருப்பது எனது வேலை அல்ல. அதன் மூலம் சுய விளம்பரம் செய்துகொள்ளும் அவசியமும் எனக்கு இல்லை. வலைப்பதிவர்கள் என்ற தலைப்பில் உங்களையும் (ஒட்டுமொத்த பதிவர்களையும்),உங்களில் ஒருவனான என்னையும் பற்றி அவர் தவறான கருத்துகளை கூறியிருப்பதால் மட்டுமே மறுகருத்து கூற வேண்டியதாயிற்று. திரு.லக்கி யை தவிர மற்ற நண்பர்களின் மனம் இதனால் புண்பட்டிருந்தால் மன்னித்துகொள்ளுங்கள்.

aravind said...

செல்வேந்திரன்

இந்த பதிவையும் கடிதமாக வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்