Thursday, April 23, 2009

சோத்துக்கு அலைஞ்சேன்!

கனஜோராய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது பந்த். போலீஸ் காவலுடன் பஸ்கள் ஓடும் என பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்து விட்டு 'பஸ்களை இயக்காதே' என அதிகாரிகளுக்கு உத்தரவிடும் திராவிடக் குஞ்சுகளின் அக்மார்க் 'டச்'சோடு. பந்தினை முன்னின்று நடத்தும் திருக்குவளை கருணாநிதி முன்னேற்ற கழகத்தின் குடும்பச் சொத்துக்களான சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் மூன்று நிமிடத்திற்கு ஒரு விளம்பர இடைவேளை கொடுத்து கோடிகளைக் குவித்துக்கொண்டிருந்த பொழுதில் என்னைப் போல பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் சோற்றுக்கு அலைந்து கொண்டிருந்தோம்.

விஜிராம், சிவக்குமார் போன்ற அன்பின் பேருருவங்கள் சாப்பிட வரச்சொல்லி அழைத்தது நெகிழ்ச்சியாக இருந்தது. அண்ணன் சஞ்செய் தன் கையாலே சமைத்து என் பசியாற்றினார். என்ன தவம் செய்தனை?!

***

உள்ளூர் சேனல் ஒன்று நேரலை ஒளிபரப்பில் கிரிக்கெட் தொடர் நடத்த இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அடியேன் ஆடி வரும் அமெச்சூர் கிரிக்கெட் அணியின் பெயரை 'ஆண்டி-வார்' என மாற்றி, சிங்கள இளைஞனொருவரை அணியின் தலைவராக நியமனம் செய்து போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்திருக்கிறோம். போட்டித் தொடர் முழுவதும் 'ஸ்டாப் - வார்' கறுப்பு நிற டி-சர்ட்டை அணியத் திட்டம். விசாரித்ததில் சென்னையில் மட்டுமே கிடைப்பதாகக் கேள்வி. எங்கே கிடைக்கும், என்ன விலை என்பதை யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

***

அன்பின் விஜி,

பெண்ணை அச்சமுறும் வகையில் பார்ப்பது கூட 'ஹராஸ்மெண்ட்'தான் என்பது என் உறுதியான எண்ணம். 'பாலியல் வல்லுறவு' எந்த தளத்தில், எந்த அளவில் நிகழ்ந்தாலும் கண்டனத்திற்குறியது. அதே சமயத்தில் ஆணும், பெண்ணும் ஒத்திசைந்து உறவு கொள்வதை நாம் விமர்சிக்க வேண்டிய முகாந்திரம் ஏதுமில்லை.

வாரியார் சொல்வார் "காமன் எல்லோருக்கும் காமன்" என்று. ஒரு குறிப்பிட்ட துறையில் பணியாற்றுபவர்கள் அனைவரும் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள் எனும் பொருள்படும்படியான வரிகளைத்தான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

***

'லக்கி எழுதுவதில் சாருவைக் காப்பியடிக்கிறார் பார்த்தீர்களா?!' என நண்பரொருவர் சாட்டினார். 'சவம் என்னத்த காப்பியடிச்சா என்னவே... பிடிச்சா படியும், பிடிக்கலன்னா ஓழியும்'னேன். பின்ன புதுசா என்னத்தையோ கண்டு பிடிச்ச மாதிரி சொன்னா கோவம் வருமா? வராதா?!

21 comments:

இரா.சிவக்குமரன் said...

///வாரியார் சொல்வார் "காமன் எல்லோருக்கும் காமன்" என்று.///

வாரியாரோட "trade mark"(தமிழ்ல என்ன) சொலவடை.

ஆ.முத்துராமலிங்கம் said...

//'லக்கி எழுதுவதில் சாருவைக் காப்பியடிக்கிறார் பார்த்தீர்களா?!' என நண்பரொருவர் சாட்டினார். 'சவம் என்னத்த காப்பியடிச்சா என்னவே... பிடிச்சா படியும், பிடிக்கலன்னா ஓழியும்'னேன். பின்ன புதுசா என்னத்தையோ கண்டு பிடிச்ச மாதிரி சொன்னா கோவம் வருமா? வராதா?!//

நெத்தியிடின்னே..!!!

அறிவே தெய்வம் said...

\\பாலியல் வல்லுறவு' எந்த தளத்தில், எந்த அளவில் நிகழ்ந்தாலும் கண்டனத்திற்குறியது. அதே சமயத்தில் ஆணும், பெண்ணும் ஒத்திசைந்து உறவு கொள்வதை நாம் விமர்சிக்க வேண்டிய முகாந்திரம் ஏதுமில்லை.\\

சரியான கருத்து..

வாழ்த்துக்கள்...

ஸ்ரீதர் said...

nalla pathivu :-)))

வால்பையன் said...

நானும் சோத்துக்கு அலைஞ்சேன்!

உணவகம் மூடியிருந்தது!
டாஸ்மாக் திறந்திருந்தது!

:(

மாண்புமிகு பொதுஜனம் said...

அதென்னமோதெரியவில்லை.மொக்கைக்கும்,நையாண்டிக்கும்,ஜோசியத்துக்கும்வரிசையில் நின்று பின்னூட்டம் போடும் பதிவர்கள் தமிழக அரசு,நடுவணரசுகளின் கையாலாகாதத்தனத்தைக் கண்டித்து பின்னூட்டமே போடுவதில்லை.நமக்கேன் வம்பு?என்று நழுவுகிறார்களோ!

செத்துக்கொண்டிருப்பது நம் இனமய்யா.
‌ ‌

Karthikeyan G said...

//'லக்கி எழுதுவதில் சாருவைக் காப்பியடிக்கிறார் பார்த்தீர்களா?!' //

அப்படியெல்லாம் இல்லையே..

வாசகன் said...

\\வாரியாரோட "trade mark"(தமிழ்ல என்ன) சொலவடை.
\\

முத்திரை வாசகம்?????

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனைத்துப் பகுதிகளுமே சிறப்பானவை.!

இன்று மாலை 8 மணி வரை நான் நிஜ‌மாகவே பட்டினி செல்வா.. உணவின்றி, நீரின்றி கிடக்கும் தமிழர்களை எண்ணி மனம்வருந்தினேன்/ தேற்றிக்கொண்டேன்.

SK said...

வாழ்க சனநாயகம் :( :( :(

பிரேம்குமார் said...

//ஒரு குறிப்பிட்ட துறையில் பணியாற்றுபவர்கள் அனைவரும் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள் எனும் பொருள்படும்படியான வரிகளைத்தான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
//

அது எந்த பதிவு செல்வா? அதையும் குறிப்பிடலாமே.... நாங்களும் கண்டிப்போம்ல ;)

பிரேம்குமார் said...

//அணியின் பெயரை 'ஆண்டி-வார்' என மாற்றி, சிங்கள இளைஞனொருவரை அணியின் தலைவராக நியமனம் செய்து போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்திருக்கிறோம். போட்டித் தொடர் முழுவதும் 'ஸ்டாப் - வார்' கறுப்பு நிற டி-சர்ட்டை அணியத் திட்டம்//

நல்ல திட்டம். வாழ்த்துகள் செல்வா

STOP WAR TSHIRT கருப்பு நிறத்தில் இருக்கிறதா? வெள்ளை நிறத்தில் ஒன்றை தான் நாங்கள் போராட்டத்தின் போது அணிந்திருந்தோம். அதை தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்றால் தனிமடல் இடுங்கள்.

Anonymous said...

அன்பின் செல்வா,

விகடனில் உங்கள் கவிதைக்கு எதிராக வந்த கவிதையைக் குறித்ததே இந்தப் பின்னூட்டம். கேண்டியின் கோபம் நியாயமானதுதான். ஆனால் அந்தக் குறைமதியோன் எழுதியிருந்தது ஐடி துறை ஆண் ஊழியர்கள் மட்டும் தான் பாலியல் பிறழ்வுகளோடு இருக்கின்றனர் என்பது போல இருக்கிறது. அந்தக் கவிதை பெண் ஊழியர்களின் வக்கிரங்களை எல்லாம் மூடி மறைக்கிறது.

பெண்கள் மட்டுமே விபச்சாரிகளாக (விபச்சாரம் முற்றாக ஒழிய வேண்டும் என்பதே என் விருப்பம்) இருந்த காலம் மாறி இன்று ஆண் விபச்சாரிகள் உருவாகியிருக்கிறார்கள் என்றால் என்ன காரணம்? இப்போது அதற்கான சந்தை உருவாகியிருக்கிறது. அதில் ஐடி துறையின் கவர்ச்சிகரமான வருமானமும் முக்கியமான பங்குவகிக்கிறது.

இதற்கு முன்பு கள்ளக் காதல் இருந்தது. ஆனால் இப்போது பெண்களும் ஓரிரவுத் தேவைக்கு ஆண்களை உபயோகித்துக் கொள்ளும் பழக்கம் வளர ஆரம்பித்துள்ளது.

“ஆண்களை சானிடரி நாப்கின் போல பயன்படுத்தினீர்கள்” என்று எழுதினால் கூட நியாயம் என்று நினைக்கக் கூடிய சூழல் நிலவிவருகிறது. உண்மை இப்படியிருக்க அந்தக் குறைமதியோன் “கன்னிகளைக் கணிணிகளைப் போல் பயன்படுத்தினீர்கள்” என்று எழுதுகிறார்.

பெண்களுக்காகக் கோபப் பட கேண்டி போல் பலர் இருக்காங்க. ஆனா ஆண்களுக்காகக் கோபப்பட நான் ஒருவன் தானா?

எம்.எம்.அப்துல்லா said...

// வால்பையன் said...
நானும் சோத்துக்கு அலைஞ்சேன்!

உணவகம் மூடியிருந்தது!
டாஸ்மாக் திறந்திருந்தது!

:(

//

டாஸ்மார்க் திறந்து இருந்துச்சுல்ல...அப்புறமென்ன உங்களுக்கு??

:))))

விக்னேஷ்வரி said...

போலீஸ் காவலுடன் பஸ்கள் ஓடும் என பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்து விட்டு 'பஸ்களை இயக்காதே' என அதிகாரிகளுக்கு உத்தரவிடும் திராவிடக் குஞ்சுகளின் அக்மார்க் 'டச்'சோடு //

இதற்கெல்லாம் நாம் என்ன செய்யப் போகிறோம். :(

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

என்னாது அண்ணனா? அடிங்க.. அந்த சுவையான அல்வாவுக்காக அமைதி காக்கிறேன். :))

ரொம்ப நல்லா இருந்தது செல்வா. மேல் வீட்டுக் குழந்தைகளுக்கும் கொடுத்தேன். நன்றாக இருந்ததாக சொன்னார்கள்.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அட.. UTV கிரிக்கெட்ல கலந்துக்கறிங்களா? உங்கள் அணி விளையாடும் நாட்களை சொல்லுங்க. வந்த பார்க்கிறேன். இதைப் பற்றி கொஞம் விரிவாக எழுத நினைக்கிறேன். மேலும் கொஞ்சம் தகவல்கள் வேண்டும். இது இரண்டாவது ஆண்டு. லட்ச ரூபாய் பரிசு. உண்மையில் அற்புதமான முயற்சி. கால்பத்து போன்ற விளையாட்டுகளுக்கும் இபப்டி ஒரு போட்டி வைத்தால் நன்றாக இருக்கும்.

SK said...

செல்வா என்ன எங்க போனாலும் அல்வா கொடுக்கறீங்க ??

நல்ல இருங்கடே :) :)

செல்வேந்திரன் said...

இரா. சிவக்குமரன், ஆ. முத்துராமலிங்கம், அறிவே தெய்வம், ஸ்ரீதர், வால், பொது ஜனம், வாசகன், அண்ணன் ஆமுகி, எஸ்கே, கார்த்திகேயன் வருகைக்கு நன்றி!

பிரேம், அது பி.ஜி. கதிரவனின் எதிர்க்கவிதை வரிகளில் வருகிறது. டி-சர்ட்டை கோவையிலேயே தயாரித்துத் தருவதாக அன்பின் விஜிராம் உறுதியளித்திருக்கிறார்.

விஜய்கோபால்சாமி, தங்களது கோணமும் சிந்தனைக்குரியது.

அப்துல்லாண்ணே, 'நச்' பின்னூட்டம்.

விக்கி, இதற்கெல்லாம் என்ன செய்ய வேண்டுமா?! பீட்ஸா சென்டருக்குப் போனதைப் பற்றியெல்லாம் எழுதி முடித்துவிட்டு, நேரம் கிடைத்தால் யோசிக்கவும்.

சஞ்செய் அண்ணே, இதுக்குத்தான் பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல்னு பெயரா? கொடுத்ததே காக்காக்கடி. அதையும் பகிர்ந்தீர்கள் பார்த்தீர்களா... அங்கே நிற்கிறீர்கள். ஜெய்ஹோ!

யூ டிவிக்குத்தான் முயற்சி செய்தோம். புக்கிங் முடிந்து விட்டதாம். இது டீ டிவி.

சங்கணேசன் said...

இளவஞ்சியை கண்டு கொண்டேன்.... காட்டிக் கொடுத்ததற்கு நன்றி...

Karthik said...

//என்னைப் போல பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் சோற்றுக்கு அலைந்து கொண்டிருந்தோம்.

நேத்து என்னோட ஸ்டேட்டஸ் மெஸேஜே இதுதாங்க. ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கும் போக முடியல. உட்கார்ந்து மேட்ச் பார்த்தா அதுலயும் ஆப்பு. தமிழ் சேனல் தாவினா 'அய்யாத்தொரை.. அய்யாத்தொரை'னு கூவல். ஒன்னும் முடியல!