புத்தகப் பட்டியல் - போட்டி முடிவுகள்

அன்பின் பைத்தியக்காரனுக்கு,

ஜெயமோகனுக்கும் முத்துலிங்கத்திற்கும் இடையே நிகழ்ந்ததென சொல்லப்படும் உரையாடல் உயிர்மையில் பிரசுரமாகி இருந்தது. அதில் அ.மு குறிப்பிட்டிருந்த நூல்களையும், எழுத்தாளர்களையும், சிறுகதைகளையும் பெரும் மிரட்சியோடு வாசித்து விட்டு, ஒரு மனிதனால் இத்தனை பேரைத் தேடித்தேடி வாசித்தல் இயலுமா என்று நிலைகுத்திய பார்வையோடு யோசித்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கு ஏற்பட்ட பிரமிப்பைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகி விட்டது எனக்கு.
உங்களைப் போன்ற மனிதர்கள் ஆபத்தானவர்கள். என் கொள்முதல் 'எலியிடம் கிடைத்த மஞ்சள் துண்டு' என்பதைச் சொல்லாமல் சொல்லி தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட்டுவிட்டது. இந்த வரிகளைத் தட்டச்சு செய்யும் கணத்தில் எனது மேஜையெங்கும் இரைந்து கிடக்கிற புத்தகங்கள் அத்தனையும் குப்பைதானோ என்றொரு சந்தேகம் கிளம்பி தலைக்கு மேலே வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. பல்சுவையளிக்கும் பாக்கெட் நாவல்களை வாரந்தவறாமல் வாங்கிப்படிப்பவனையொத்த வாசிப்பனுவத்தை வைத்துக்கொண்டா இந்த இலக்கிய உலகத்தில் காலம் தள்ள முன் வந்தாய் என ஒவ்வொரு வரியிலும் என்னை நீங்கள் கேலி செய்கிறீர்கள்.

ஆ... விட்டேனா பார் என்று இதைக்காட்டிலும் அதிகமாய் வாசித்துத் தள்ளுகிறேனெனக் கிளம்பி உடலெங்கும் சூடுபட்டுத் திரும்ப விருப்பமில்லை. ஏனெனில் சுஜாதா எழுதுவதே பல நேரங்களில் புரிவதில்லை எனக்கு. இதில் மேநாட்டு எழுத்தாளர்களையும் அவர்களது யுத்திகளையும், கருத்துக்களையும் படித்து, புரிந்து... வெளங்கிடும்.

ஒவ்வொரு வீட்டிலும் இருந்தாக வேண்டிய பத்து புத்தகங்கள் என்று கேட்டால் திருக்குறள், பகவத் கீதை, சத்திய சோதனை என்றுதான் பதில்கள் வரும் என்ற என் எண்ணத்தில் அத்தனைப் பேரும் மண் அள்ளிப் போட்டீர்கள். ஏன் காமசாஸ்திரத்தை எவரும் குறிப்பிடவில்லை. வீட்டைக் கட்டமைத்ததே காமம்தானே என்று அதிசயித்திருந்தேன். அப்போதுதான் உங்களது பட்டியல் வந்து சேர்ந்திருந்தது காமசூத்திரத்தோடு. பிரமாதம்.

இந்தச் சில்லறைப் போட்டியினால் பலனடைந்தது நான்தான். கேள்வியுற்றிராத சுமார் ஆயிரம் புத்தகங்கள், நானூறு எழுத்தாளர்கள் அட பெயர்களையாவது தெரிந்து கொள்ள முடிந்தது பார்த்தீர்களா?! ஒவ்வொருவரது பட்டியலும் ஒரு விதம். அவரவர் ஆளுமையையும், சித்தாந்தங்களையும் தீர்மானிப்பது அவரவர் வாசிப்பே என்று நானே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.

அவரவர் கருத்தில், தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கை முறையில் அவரவர் பட்டியல் சிறந்தது. இதில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து இதுதான் சிறந்தது என்று ஏனையோரை சங்கடப்படுத்த வேண்டுமா என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் உங்களது அழைப்பு வந்தது. யாரையும் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்ற உங்களது வேண்டுகோள் என் யோசனையைப் பலப்படுத்தியது. சரி எல்லோருக்கும் பரிசளித்து விடலாம் என யோசித்தேன். வேண்டாம் ஈரவெங்காயம் காய்ந்த வெங்காயமாகி விடுவார்.

எனவே போட்டியில் கலந்துகொண்டதன் நினைவாக அவரவர் செலவில் உள்ளூரில் ஒரு புத்தகம் வாங்கிக்கொள்ளும்படி அறிவித்துவிடலாம். என்ன கொஞ்சம் பேர் திட்டுவார்கள். தேர்தல் வாக்குறுதிகளைப் போலவே பின்னாட்களில் மறந்துவிடுவார்கள் என்று நம்புவோமாக...!

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

Comments

Thamiz Priyan said…
முடிவு! ஜெமோவின் கதை போட்டி முடிவுக்கு இது பரவாயில்லை.
அட அரசியல்வாதியவிட மோசமால இருக்கு... இதிலும் லேபில் சூப்பர் பாஸ்...
ICANAVENUE said…
நல்ல முடிவு. அதிகமாக பட்டியல் இடப்பட்ட இருபது புத்தகங்களின் பெயர்களை வெளியிட முடியுமா? வாசிப்பை விஸ்தரிக்க மிகவும் உதவியாக இருக்கும். நன்றி
Anonymous said…
அதனால் என்ன செல்வா, உங்களால் ஒரு உருப்படியான காரியம் ஆச்சு இல்ல. எவ்வளவு எழுத்தாளர்கள், பதிவுகள்...நல்ல முயற்சி..

( ஆனா ஒரு தடவை போன போகுதுன்னு மன்னிச்சுட்டோம், இன்னொரு தடவை பண்ணினே, எல்லார் சார்பா நேரில் வந்து கவனிசுடுவேன், உள்ளுர்தானே )
SK said…
அப்படியே உங்களுக்கு வந்த எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பதிவாக கொடுத்தால் மிக அழகாக இருக்கும் :)
அதிலை said…
இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தால் கொஞ்சம் டைமிங்கா இருந்திருக்கும்....
"மோகமுள்" புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.. யாரவது ஓசியில் ஒரு லிங்க் கொடுத்தால் அதையே பரிசாக ஏத்துக்கிறேன்.
//ஈர வெங்காயம் காய்ந்த வெங்காயமாகிவிடுவார்//

போகிற போக்கில் அடிச்சுவிடும் இந்த வகையான நகைச்சுவையை அவரிடம்தானே கற்றீர்கள்?

(அவருக்குத் தன்னடக்கம் சாஸ்தி!)
Anonymous said…
செல்வா, கலந்துகொண்ட அனைவருக்கும் பதிப்புரிமைப் பிரச்சனை இல்லாத ஏதாவது ஒரு நூலை, பிழைகளின்றி தட்டச்சு செய்து நேர்த்தியாக வடிவமைத்து மின்னஞ்சலில் அனுப்பலாம். வடிவமைப்பு தட்டச்சு வேலை ஆகியவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். யாருக்கும் ஏமாற்றம் இருக்கக் கூடாது!
தலைவா... புத்தகங்களின் பட்டியலையும் வெளியிட்டால் என்னை மாதிரி வருஷத்துக்கொரு முறை படிக்கிறவங்களுக்கு உதவியா இருக்கும்!
Unknown said…
பரிசுகளில் என்ன இருக்கிறது செல்வா? நல்ல முயற்சி. புத்தகங்களின் பட்டியலைப் பார்த்து சோர்வடையவேண்டாம், வாசிப்பு உன்னை முன்னகர்த்தும்.தொடர்ந்து வாசி..நிறைய யோசி..எழுத்தை உயிருக்கு நிகராக நேசி (அப்பாடா இன்னிக்கு ஜோலி முடிஞ்சுதுல்ல:))
//எனவே போட்டியில் கலந்துகொண்டதன் நினைவாக அவரவர் செலவில் உள்ளூரில் ஒரு புத்தகம் வாங்கிக்கொள்ளும்படி அறிவித்துவிடலாம்//

வெவரம்டே :)
எல்லோரையும் புத்தகங்களை பட்டியலிட செய்ததற்கு உன்ன பாராட்டிதான்யா ஆகனும் :)
திரு. எஸ். கே.. வை வழிமொழிகிறேன்.

மிக அழகாக மட்டுமல்லாமல் பயனுள்ளதாகவும் இருக்கும்.
Saminathan said…
நல்லாதானே போயிட்டு இருந்தது...
நடுவுல நம்மள அரிஞ்சு ஆம்லேட் போடறீங்களே..

லதானந்த் சார்..நீங்களும் தான்...
உண்மை தான். நிறைய நல்ல புத்தகங்களை அறிய முடிந்தது, உன்னுடைய இந்த போட்டியால்.
போட்டி வச்சல்ல, அப்படியே ரெண்டு புக்கையும் வாங்கி அன்பளிப்பா அனுப்பி வை. ;)
/
பிரேம்குமார் said...

//எனவே போட்டியில் கலந்துகொண்டதன் நினைவாக அவரவர் செலவில் உள்ளூரில் ஒரு புத்தகம் வாங்கிக்கொள்ளும்படி அறிவித்துவிடலாம்//

வெவரம்டே :)
/

ரிப்பீட்டு
/
பிரேம்குமார் said...

எல்லோரையும் புத்தகங்களை பட்டியலிட செய்ததற்கு உன்ன பாராட்டிதான்யா ஆகனும் :)
/

ரிப்பீட்டு