கடற்கரை குறிப்புகள்

ரமேஷ் குமார் இப்போது இருக்கும் வீட்டில் இதற்கு முன்பு வாடகைக்கு இருந்தவர் ரமேஷ் வைத்யா. அந்த வீட்டின் கொடுப்பினையோ என்னவோ வைத்யா புத்தகங்களைக் குவித்து வைத்திருந்த அறைகளிலெல்லாம் இப்போது ரமேஷ் குமார் புத்தகங்களைக் குவித்து வைத்திருக்கிறார். நா. முத்துக்குமார் 'பால காண்டத்தில்' தன் வீட்டில் ஒரு லட்சம் புத்தகங்கள் இருந்தன என்று குறிப்பிட்டிருந்தது அனைத்தும் சத்தியம். அனைவரும் பலன் பெறட்டும் என அவரது அப்பா 'அன்னை நூலகம்' என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் இலவச நூலகம் நடத்தியவராம். செய்த புண்ணியம் சும்மா போகுமா?!

***

அட்டகாசமான இண்டீரியரில் அமெரிக்கன் கம்பெனி போல மாறி இருக்கிறது ஆனந்த விகடன் அலுவலகம். விகடன் என் தாய் வீடு. எடிட்டோரியலில் இருக்கும் அத்தனை பேரும் அடியேனின் அண்ணன்மார்கள். முதலில் குரு வணக்கம் செய்து விட்டு, கேபின் கேபினாக சென்று எல்லோரையும் சந்தித்துவிட்டு வந்தேன். சொந்தக்காரனைப் போன்ற பரிவோடு குசல விசாரிப்புகள், உபசரிப்புகள். நிர்வாக ஆசிரியர் ரா. கண்ணனையும், பசுமை விகடன் பொறுப்பாசிரியர் அறிவழகனையும் சந்திக்க முடியாமல் போய்விட்டதில் எனக்கு வருத்தம்.

***

அண்ணாச்சியை முதன் முதலில் சந்தித்தேன். பள்ளி நாட்களிலிருந்தே அவரது ரசிகன் என்பதால் ரொம்பவும் எக்ஸைட்மெண்ட். கொண்டாட்டத்தை மதமாகவும், நகைச்சுவையை மொழியாகவும் கொண்ட இயல்பான ஈர மனுஷன். 'நான் ஒரு ஆணியவாதி'யெனப் பிரகடனப்படுத்தும் துணிச்சல் கொண்டவர். ஆனால் தமிழ்நாட்டில் அய்யனாரின் பெயரை ரிப்பேராக்கியேத் தீருவேன் என ஏன் கங்கனம் கட்டிக்கொண்டு அலைந்தார் என்பதுதான் புரியவில்லை.

அண்ணாச்சி ரசிகர்கள் அளவிற்கு எதிரிகளையும் சம்பாதித்து வைத்திருக்கிறார். 'அவர் ஒரு மனுஷன்னு அவர பாக்கறதுக்குப் போறீயேன்னு' கேட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். எப்போதும் நெகட்டிவாகவே எழுதுவதுதான் காரணம் என்பது புரிந்தது. சாத்தான்குளத்துக்காரன் வேற எப்புடிடே எழுதுவான்? அப்படிங்கிறார்.

***

உள்ளதை நல்லபடி காட்டும் காமிரா தாமிராவினுடையது. அண்ணாச்சியைக் கூட அழகாக படம் பிடிக்க முடியும் என்பது அவரது சமீபத்திய சாதனை. என்னைப் போன்ற ஒரு வீணாப்போனவனோடு சேர்ந்து அழகான ஞாயிறுகளுள் ஒன்றை இழந்தார்.

தாமிராவின் காமிராக் கண்களின் வழியே மட்டுமே என்னைப் பார்த்திருந்த பல நண்பர்கள் 'நேரில் பரதேசியைப் போல இருக்கிறீர்கள்' என்று பகிரங்கமாகச் சொன்னதைக் கேட்டு தற்கொலை முடிவிற்கே வந்தேன் நான். லக்கியைப் பார்த்ததும்தான் மனசு மாறினேன்.

***

லக்கி தன் நிகர எடைக்குச் சமமான ஒரு லேப்டாப்பைச் சுமந்து அல்லது இழுத்து வந்தார். என்னதான் கோட்டிக்காரத் தனமாக எழுதினாலும் தமிழில் அதிகம் பேர் படிக்கும் வலைஞர் என்ற புகழ் அவருக்குத்தான். அதற்கான அவரது உழைப்பு சாதாரணமானது அல்ல. வாழ்த்தலாம் என்று நினைத்தால் நெருங்க முடியவில்லை. அத்தனைக் கூட்டம் மொய்க்கிறது அவரை. லக்கி செலிபிரட்டி ஆகிவிட்டார். சில பிராண்டுகளின் கொ.ப. செ. வாக இருப்பதைத் தவிர்த்தால் இவரை இன்னும் இன்னும் நேசிக்கலாம்.

***

கார்க்கிக்கும் எனக்கும் கண்ணுக்குத் தெரியாத நட்பின் முறுக்கேறிய இழைகள் இருக்கின்றன. செல்வேந்திரனைப் பார்ப்பதற்காக வந்தேன் என்று அவர் சொன்னதில் நெஞ்சுக்குள் பெய்தது மாமழை. லக்கி மற்றும் அவரது ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவர்களோடு சாரு குறித்த காரசார விவாதத்தில் தனியனாய் அனைவரையும் பந்தாடிக் கொண்டிருந்தார். நான் கூட்டத்தில் இருந்து அவரைத் தனியே பிரித்து வந்து அவர் காதில் ஒரு ரகசியம் சொன்னேன். அமைதியாகி விட்டார். நண்பா உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!

***

வால், பதிவர்களில் ரொம்பவும் யூனிக். நிறைய்ய விஷயங்களில் அறுதியான முடிவுகளை வைத்துக் கொண்டு முறைப்பானக் குரலில் வாதாடுவதில் இவர் கும்கீக்கு நிகர். ஆனால், மூத்தவரோ, இளையவரோ வஞ்சகம் இல்லாமல் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் களப்பணியில் வாலை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. கருத்து ரீதியாக அவரோடு எனக்கு பல முரண்கள் இருப்பினும் வாலின் இருப்பு சுவாரஸ்யம் கூட்டியது.

***

ரமேஷ் அண்ணா முன்னெப்போதும் விடவும் மிகுந்த கவலையளிக்கும் தோற்றத்தில் இருக்கிறார். அவரது அருமையையும், அன்பையும் உணர முடியாத மனிதர்களோடே வாழத் தலைப்பட்டு விட்ட தலைவிதி அவருடையது. சென்னைவாழ் அன்பர்கள் நர்சிம், அப்துல்லா, சுந்தர் போன்றோரது நட்பினால் அவருக்கு நல்ல துணை கிடைத்து மகிழ்வாக இருக்கிறார் என்ற என் கற்பனையில் மண் விழுந்தது. கேபிள் சங்கர் ரமேஷை இழுத்துப் போய் இரண்டு இட்லியும், வடையும் சாப்பிட வைத்தேன் என்றார். என்னளவில் இது சாதனை. கடந்த ஐந்தாண்டுகளில் ரமேஷ் அதிகம் சாப்பிட்ட உணவு அனேகமாக இதுவாகத்தான் இருக்கும். இந்த வரிகளை எழுதுகையில் ரமேஷின் பழைய கவிதையொன்றில் காதலி கேட்பதாக வரும் வரிகள் நினைவுக்கு வருகிறது.

"ரமேஷ், வயதானாலும்...இன்னும் நீ குழந்தைதானே..." (மணல் புத்தகம்)

சென்னை நண்பர்களே... இந்தக் குழந்தையைக் கொஞ்சம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

***
செல்லமுத்து குப்புசாமி என்கிற பெயர் நாணயம் விகடன் துவங்கப்பட்ட காலத்திலிருந்து அறிமுகம். மனதில் இருந்த பிம்பம் அனைத்தையும் அடித்து நொறுக்குமளவிற்கு எளிமையாக இருந்தார். இனிமையாகப் பேசினார். நடந்து முடிந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தடை செய்யப்பட்ட ஓரே புத்தகம் இவர் எழுதிய 'பிரபாகரன்'தான்.

***

இரண்டு வருடங்களாய் பதிவனாய் கோல் போட்டாலும் 'தல' எனும் பாலபாரதியைச் சந்தித்து ஆசி பெற்றாலொழிய முழுப்பதிவன் ஆக முடியாது என்பதால் அவரிடம் 'ஞானஸ்நானம்' பெற்றேன். வெறும் அண்ணாச்சியை சன் டி.வி புகழ் அண்ணாச்சி ஆக்கி ஊரையே சிரிக்க வைத்திருக்கிறார். மடத்தின் மூலம் அவ்வப்போது சிறு அரசியல்களில் ஈடுபட்டு வந்த அண்ணாச்சி சன் டிவியில் தோன்றிய பின் மடத்தை மூடிவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடலாமா என யோசிக்க துவங்கி இருக்கிறார்.

***

நந்தா கிடைத்தபோதெல்லாம் அண்ணாச்சியை சிக்ஸராக்கிக் கொண்டிருந்தார். கண்கள் பனிக்க அவரது கும்மிகளை அண்ணாச்சி வாங்கிக் கட்டிக்கொண்டது கண்கொள்ளாக் காட்சி. நந்தா மாதிரி ஆட்கள் இல்லாவிட்டால் அண்ணாச்சி அடங்க மாட்டார்.

***

என்னதான் புனைப்பெயர் என்றாலும் சிவராமன் அண்ணாவைப் போய் பைத்தியக்காரன் என்று விளிப்பது எத்தனைச் சிரமமாய் இருக்கிறது பார்த்தீர்களா?! எல்லோரையும் நேசிக்கும் குணத்தை 'கோபி கிருஷ்ணன்' இவரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்திருப்பாரோ?!

சிவராமனும், ஜ்யோவ்ராம் சுந்தரும் சேர்ந்து 'கோபி கிருஷ்ணனின் ' நூல்களை வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கும் அரும்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு செட் நூல்களின் விலையே ரூபாய் நூறைத் தாண்டுகிறது. தபால் செலவு வேறு இருக்கிறது. இதுவரை நூல்களைக் கேட்டு வந்த மின்னஞ்சல்களில் அதிகம் பேர் இணையத்தில் எழுதுகிறவர்கள் அல்லர் என்கின்ற தகவல் ஆச்சர்யமூட்டியது. இணையத்தின் 'ரீச்' அதிகரித்திருப்பதின் ஆரம்ப அடையாளமாக இதனைக் கொள்கிறேன்.

சிவராமன் அண்ணாவிற்கு என் முத்தங்கள்.

***

ஜ்யோவ்ராம் நவீனத் தமிழிலக்கியத்தில் அப்-டூ டேட் ஆசாமி. அவரது வாசிப்பும், பேச்சும் பிரமிப்பைத் தருகிறது. 'உங்களோட கட்டுரைகள் சுமார் நாற்பது, ஐம்பது படித்திருப்பேன். அப்படியொன்றும் சுவாரஸ்யமில்லை. எனக்குப் பிடிக்கவுமில்லை' என்ற முகத்திலடிக்கிற விமர்சன நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது. எதிர்காலத்தில் அவரை ஈர்க்கும்படியான எழுத்துக்களை எழுதுவதற்காக உழைப்பை அதிகப்படுத்தியாக வேண்டும்.

***

நான் மிகவும் ரசித்த இணைய எழுத்துக்கள் இளவஞ்சியினுடையதுதான். எழுத்துக்களைத் தவிர்த்து காமிராவை வைத்துக்கொண்டு கவிதை எழுதுகிறவர். புதுவை இளவேனில், தேனி ஈஸ்வர் போன்றோருக்கு இணையான புகைப்படங்கள் இவருடையது. இளவஞ்சி தொடர்ந்து எழுதாதது தனிப்பட்ட வாசகனாக எனக்கு பெரும் இழப்பு. சென்னைப் பதிவர் சந்திப்பில் எதிர்பாராமல் கிடைத்த இன்ப அதிர்ச்சி இவரைச் சந்தித்ததுதான்.

***

நர்சிம், அப்துல்லா இருவருமே பொதுவான குணாம்சங்களில் இரட்டையர்கள். அந்தப் பட்டியலை பிற்பாடு தருகிறேன். சென்னையின் அழகிய பதிவர் நர்சிம், இளகிய பதிவர் அப்துல்லா. காரணங்களை விளக்க வேண்டியதில்லை. மதுரைக்காரரும், புதுக்கோட்டைக்காரரும் விருந்தோம்பலில் பச்சைத் தமிழர்கள்!

***

வெயிலான் வந்திருந்தது என் 'ஹோம் -சிக்கை'ப் போக்க உதவியது. திருப்பூரில் நாளுக்கொரு பதிவர்கள் உருவாகி வருகிறார்கள். வெயிலான் அவர்களுக்கு முன்னோடி. சீக்கிரத்தில் திருப்பூரில் ஒரு பதிவர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்வார் என்று நம்புகிறேன்.

***

எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத அக்னிப்பார்வை, ஊர் சுற்றி, வசந்த் ஆதிமூலம், டோண்டு ராகவன், டாக்டர் புரூனோ, தமிழ்க்குரல், நந்தா, சிவஞானம்ஜி, இராமகி ஐயா, அதிஷா, தண்டோரா, காவேரி கணேஷ், ஹசன், ஜாக்கி சேகர், ரெளத்திரன், ஸ்ரீ, ஆனந்தக்குமார் ஆகிய பதிவர்களைச் சந்திக்க பெரும் வாய்ப்பாக இருந்தது அண்ணாச்சியின் வருகையும் அதனையொட்டிய பதிவர் சந்திப்பும்.

***

இரண்டு நாள் பிரயாணத்திற்கான பயணப்பை வாங்குகையில் கேண்டி சொன்னாள் 'இதெல்லாம் உங்களுக்குப் பத்தாதுங்க... வெறுமனே போவீங்க... புத்தக மூட்டையோட வருவீங்க...' அவள் வாய்க்குச் சக்கரைதான். நண்பர்கள் எக்கச்சக்கமான புத்தகங்களை, டிவிடிக்களை பரிசளித்தார்கள். புத்தக மூட்டைகளோடு ஊர் வந்து சேர்ந்தால் ஆபிஸில் 'புக் கிளப்'பிற்காக நான்கு புத்தகங்களைக் கொடுத்து படிப்பதற்கு லீவும் கொடுத்திருக்கிறார்கள்.

***

'முடிந்தவரை நண்பர்களைச் சந்திப்பது' என்பதைத் தவிர வேறெந்த அறுதியான திட்டங்களும் இல்லாமல்தான் சென்னைக்குச் சென்றேன். என் வருகையையொட்டி சென்னையில் வெயில் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. வெயிலே இல்லாவிட்டாலும் சென்னை கசகசப்பாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. நெருக்கடியும், பரபரப்பும்தான் புழுக்கம் தருகிறதோ என்னவோ?!

***

ரமேஷ் அண்ணா வீட்டிற்கு போகாததற்கும், உமா ஷக்தியை சந்திக்க முடியாததற்கும், ஹார்லி டேவிட்ஸன் ஹெல்மெட் வாங்க முடியாமல் போனதற்கும் வைகுண்ட ஏகாதசிக்கு பிரியாணி சாப்பிட்டதுதான் காரணமாய் இருக்க முடியும்.

Comments

அட இப்படியெல்லாம் சொன்னா நான் என்னன்னு பின்னூட்டம் போடுவது? :)))

ரமேஷ் அண்ணா பற்றி, எனக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது. அந்த உடம்புக்கு அந்த தாடி ஏதோ ஒரு இனம் புரியாத வருத்தத்தை தந்தது. அவரிடம் அது பற்றி கேட்கும் தைரியமோ, ஏன் இப்படி செய்றீங்கன்னு கேட்கிற நெருக்கமோ எனக்கு வரவில்லை என நினைக்கிரேன். ஹைதையா சைதையான்னு அலைபேசியில் கேட்கும் குரல் அங்கில்லை.

பின்னிட்டடா ராஸ்கல்ன்னு இனிமேல அவர் சொன்னா நான் கேட்கறதா இல்ல. அவர் மட்டும் கேட்கிறாரா?
// திருப்பூரில் ஒரு பதிவர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்வார் என்று நம்புகிறேன்.//

சந்திப்பு விரைவில். நீங்கள் தான் சிறப்பு விருந்தினர்.
anujanya said…
செல்வா,

மிக சுவாரஸ்யமான பதிவு. ஜ்யோவைப் பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். அவர் அப்படித்தான் :)

கார்க்கி காதில் அப்படி என்ன ரகசியம்? சபையில் சொல்றது!

என்னது? வை.ஏகாதசி அன்று பிரியாணியா? இதற்கு ஒரே விமோசனம் உங்கள் கையால் கதிரவனுக்கு 'சிறந்த கவிஞர்' பட்டம் கொடுப்பதுதான் :)

அனுஜன்யா
Karthikeyan G said…
//போனதற்கும் வைகுண்ட ஏகாதசிக்கு பிரியாணி சாப்பிட்டதுதான் காரணமாய் இருக்க முடியும்.
//
"வைகுண்ட ஏகாதசி" -அப்டினா இன்னா?
அருமையான பயண குறிப்புகள்.
உன்பெரிய மனசுக்கு தாங்க்ஸ்பா... சோக்கா ஊரு போயி செர்ந்துகினியா..? அடுத்த தபா டைம் இருக்கசொல நம்ம வீட்டாண்டையும் வா கண்ணு... அண்ணாச்சி , நந்தா அப்பால செல்வா - எல்லோரும் நல்லா இருங்கடே...
selventhiran said…
ரமேஷ் அண்ணா, "Me too"

கார்க்கி, வன்மையாக கண்டித்துப் பலனில்லையென்றால், கொஞ்சம் வன்முறையாகவாவது கண்டியுங்கள். வார இறுதியில் எங்கேயாவது இழுத்துப் போய் கொஞ்சம் கருங்குரங்கு ரத்தம் புகட்டுங்கள் அவருக்கு.

வெயிலான், சாப்பிடறதுக்கு எப்பவுமே விருந்தினரா வருவேன். விழா விருந்தினரா சுப்ரபாரதிமணியனையோ, மகுடேஸ்வரனையோ கூப்பிடலாம்.

அனுஜன்யா அண்ணே, கார்க்கி காதில் சொன்னதை சபையில சொன்னா லக்கி பாயைப் பிறாண்ட ஆரம்பிச்சுருவாரு... ஏற்கனவே பத்தமடையில தயாராகிற பாயை எல்லாம் அவரே பிறாண்டிடுறார்னு ஒரு புகார் இருக்குது.

கார்த்திக்கேயன் ஜி, வைகுண்ட ஏகாதசின்னா ஒரு நா முச்சூடும் பிளாக் எழுதாம, ஸ்கேண்டல் பாக்காம, கவுச்சி துன்னாம, அடுத்தவங் கொரவளையக் கடிக்காம 'ஏசப்பா காப்பாத்துன்னு' ராவெல்லாம் சொல்லிக்கீனே இருக்குற நாளு...

சங்கர் அண்ணே, வாங்க வருகைக்கு நன்றி.

வசந்த அண்ணே, வந்திருந்து எல்லோரையும் கவுரவப்படுத்தினதுக்கு உங்களுக்குத்தாம்னே பெரிய மனசு.
Sanjai Gandhi said…
ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க. சுருக்கமான அழகான பதிவு.

//இரண்டு நாள் பிரயாணத்திற்கான பயணப்பை வாங்குகையில் கேண்டி சொன்னாள் 'இதெல்லாம் உங்களுக்குப் பத்தாதுங்க... வெறுமனே போவீங்க... புத்தக மூட்டையோட வருவீங்க...' அவள் வாய்க்குச் சக்கரைதான். நண்பர்கள் எக்கச்சக்கமான புத்தகங்களை, டிவிடிக்களை பரிசளித்தார்கள். புத்தக மூட்டைகளோடு ஊர் வந்து சேர்ந்தால் ஆபிஸில் 'புக் கிளப்'பிற்காக நான்கு புத்தகங்களைக் கொடுத்து படிப்பதற்கு லீவும் கொடுத்திருக்கிறார்கள்.//

வயித்தெரிச்சலை கிளபபம எல்லாத்தையும் குடுத்துட்டு போங்க. :)

நா.முத்துகுமார் கவிதைகள் 70% முடிச்சிட்டேன் செல்வா. பழய நினைவுகளை கிளறி விட்டது. அதைப் பற்றி எழுதுகிறேன்.
//தமிழ்நாட்டில் அய்யனாரின் பெயரை ரிப்பேராக்கியேத் தீருவேன் என ஏன் கங்கனம் கட்டிக்கொண்டு அலைந்தார் என்பதுதான் புரியவில்லை. //

அதான் எனக்கும் புரியலை!

அய்யனார் கொலைவெறி ரசிகர் படை
//வாலின் இருப்பு சுவாரஸ்யம் கூட்டியது.//

அண்ணே நிஜமாத்தான் சொல்றிங்களா?

நான் அம்புட்டு வொர்த்தா!
அருமையான பயண குறிப்புகள்
Thamiz Priyan said…
சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க... ஸ்கிப் செய்யாம படிக்க முடிந்தது.
selventhiran said…
சஞ்ஜெய் அண்ணே, உங்களுக்கு இல்லாததா?! நோஸ்டால்ஜியாவைக் கிளப்பிவிட்டதா பட்டாம்பூச்சி விற்பவன்?! எழுதுங்க... எழுதுங்க...

வால், சின்னப்பையன், தமிழ்பிரியன் வருகைக்கு நன்றி!
Thamira said…
உண்மையில் சூப்பரான தொகுப்பு செல்வா.! சுவாரசியம், அன்பு, நட்பு வழிந்திருக்கிறது. (யாரும் சந்திப்பு பற்றி எழுதவில்லையே என நான் அவசரத்தில் எழுதியது பத்திரிகைச்செய்தியை விடவும் கேவலமான ஒரு விதமாக வந்திருந்தது.)
Kumky said…
அவ்வ்வ்வ்வ்...
ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
Thamira said…
எல்லோரையும் அழகழகாக பாராட்டிவிட்டு என்னை மட்டும் வெறும் போட்டோக்காரன் என்பது போல சொன்னதற்கு கண்டனங்கள். (அடுத்ததாக கருத்துக்கேட்க ரெண்டு கதைகள் அனுப்பலாம் என்றிருக்கிறேன்..)
//சென்னை நண்பர்களே... இந்தக் குழந்தையைக் கொஞ்சம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
//

வேறென்ன வேலை எங்களுக்கு??

சில நேரங்களில் நாங்களும் அவரிடம் குழந்தையாகி விடுகின்றோம்.அதுதான் பிரச்சனை :)
செல்வா, சந்திப்பில் கலந்து கொண்ட திருப்தி மற்றும் சந்திப்பை தவறவிட்ட வருத்தம் இரண்டையுமே கொடுத்துவிட்டது இந்தப் பதிவு. நன்றி
Sukumar said…
இதமான எழுத்து. சுவரஸ்யமான பதிவு
என்ன இன்னும் குறிப்புகள் வரவில்லையேன்னு நினைச்சேன் வந்துடுச்சி...கலக்கல் குறிப்புகள்.

அண்ணன்கள், ஆசான்கள், தல'கள், சகாகள், என்று நான் காண விரும்பும் அனைவரையும் பார்த்துயிருக்கிங்க வயிற்றெறிச்சலுடன்..நல்லாயிருடே ;)


\\சிவராமன் அண்ணாவிற்கு என் முத்தங்கள்.\\\

முத்தங்கள் கொடுத்தால் பி.ந.வாதியாம்!!?...அப்போ நீங்களும் பி.ந.வாதியா? ;)
Anonymous said…
சென்னையையும் மெரீனா கடற்கரையையும் ரொம்ப மிஸ் பண்றேன். மெரீனாவ விட்டு தூரமா போயிறக் கூடாதேன்னு தான் சென்னைல இருந்த நாலு வருஷமும் சாந்தோம், பட்டிணப் பாக்கம்னு மெரினாவுக்குப் பக்கமாகவே குடியிருந்தேன். ஒவ்வொரு பதிவர் சந்திப்பும் அந்த நினைவுகளைக் கிளறிவிட்டுவிடுகிறது.
selventhiran said…
ஆமூகி அண்ணே, உங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி!

கும்க்கி அண்ணே, இருக்கியளா?! லக்கி தேடுனாப்பல...

ஆமூகி - 2, நீங்க ஒரு மாபெரும் எழுத்தாளருன்னுது ஏற்கனவே தெரியுமே அதாங் உங்க ஒளி ஓவியங்களை புரொமொட் பண்றேன்.

அப்துல்லாண்ணே, "அளவா அடிப்போம், அதிகமா சாப்பிடுவோம்"னு புதுப்பாலிசியை உடனே இம்ளிமெண்ட் பண்ணுங்க.

வாங்க தமிழன் - கறுப்பி.

யோவ் பிரேம், தலைமறைவா இருந்துகிட்டு கமெண்ட் வேற போடுறீயா நீயி... அண்ணாச்சி 'பிரேமெனும் பாலகன்'னு ஒரு கவுஜ எழுதி வச்சிருக்காரு... தொலைஞ்சே!

நன்றி சுகுமார்.

கோபிநாத், முத்தம் கொடுக்கிறவங்கள்லாம் பி.ந.வா என்றால் ஸ்ரேயா, த்ரிஷா, அசின், நமீதா, நயன் எல்லோரும் பி.ந.வா?!

விஜய்கோபால்ஸ்வாமி, இப்ப என்ன கெட்டுப் போச்சி... நம்ம தே.மு.தி.க மட்டும் ஜெயிக்கட்டும். மெரீனாவை ஹைதரபாத்துக்கு கொண்டு போயிடலாம்.
உங்களுடன் செலவிட்ட கணங்கள் மகிழ்ச்சியானவை... மறுபடியும் சந்திப்போம்.
கடற்கரைக் குறிப்புகள்
கடற்கரைக் குறிப்புகள்
கடற்கரைக் குறிப்புகள்
கடற்கரைக் குறிப்புகள்
கடற்கரைக் குறிப்புகள்
கடற்கரைக் குறிப்புகள்
கடற்கரைக் குறிப்புகள்
கடற்கரைக் குறிப்புகள்
கடற்கரைக் குறிப்புகள்
கடற்கரைக் குறிப்புகள்
கடற்கரைக் குறிப்புகள்
கடற்கரைக் குறிப்புகள்
கடற்கரைக் குறிப்புகள்
கடற்கரைக் குறிப்புகள்
கடற்கரைக் குறிப்புகள்
கடற்கரைக் குறிப்புகள்
இதுவரை இல்லாட்டி என்ன.. இனிமே பரிச்சயப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

இப்போகூட உங்களோட பிரபலமான கவிதைக்கு எதிர் உரையாடல்-ன்னு சொல்லி ஒரு இடுகையிட்டிருக்கிறேன்.
Ganesan said…
அருமையான, அழகான, நாகரிகமான பதிவு.செல்வா , எழுத்துலகில் நிச்சயம் உயரம் தொடுவாய் செல்வா.

வாழ்த்துக்கள்
நடந்து முடிந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தடை செய்யப்பட்ட ஓரே புத்தகம் இவர் எழுதிய 'பிரபாகரன்'தான்
புத்தக கண்காட்சியில், அல்கொய்தா மற்றும் தாலிபான் பற்றிய புத்தகம் விற்பனைக்கு இருந்தது.

காலக் கொடுமடா சாமி. . . .
//யோவ் பிரேம், தலைமறைவா இருந்துகிட்டு கமெண்ட் வேற போடுறீயா நீயி... அண்ணாச்சி 'பிரேமெனும் பாலகன்'னு ஒரு கவுஜ எழுதி வச்சிருக்காரு... தொலைஞ்சே!//

அடடே, அதை சீக்கிரமே கேக்கனுமே?!!!!
அண்ணாச்சி, எங்க இருக்கீங்க???????
Unknown said…
Missed You Selva
முக்கிய வலைப்பதிவர்கள் பற்றி அழகாய் சொல்லி,பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டியது உங்களின் ஒவ்வொருவரையும் பற்றிய வரிகள்!

:)