Thursday, April 16, 2009

விஷம் குடிப்பேன்

ஜி. நாகராஜனின் ஆக்கங்கள் முழுத்தொகுதி படித்துக்கொண்டிருக்கிறேன். நாகராஜன் சிற்றிதழ்களுக்கு எழுதிய வாசகர் கடிதங்களும் அத்தொகுதியில் இருக்கிறது. 1972ல் ஞானரதம் இதழில் வெளியான கலாப்ரியாவின் கவிதைகளைக் குறிப்பிட்டு எழுதிய கடிதத்தைப் படித்ததும் கலாப்ரியாவின் கவிதை மொழியின் வயது பிரமிப்பை அளித்தது. பதினாறு வயதில் அவரது முதல் கவிதை பிரசுரமாகி இருக்கிறது. நாற்பதாண்டு காலமாய் தமிழ்க்கவிதைச் சூழலில் உயிர்ப்போடும் வீரியத்தோடும் இயங்கி வருகிறார் என்பதை அறிந்து ஆச்சர்யம் கொண்டேன். அவர் இன்னும் பல கவிதைகள் எழுதி என்னையும் தமிழ் வாசகர்களையும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.

***

"விஜயை மீட் பண்ணனுமா?! கோக் குடிங்க"ன்னு ஊர் முழுக்க விளம்பரப் படுத்தி இருக்கிறார்கள். "அதுக்கு நான் விஷத்தையே குடிப்பேன்" என்று சொல்லிச் சிரித்தாள் கேண்டி. விஜய டி.ஆரின் குறள் டி.வி போஸ்டரைப் பார்த்துவிட்டு ஒரு அட்டகாசமான கேப்ஷன் சொன்னாள். "குரல்வளையைக் குறி வைத்து..."

***
பொதுவாக மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு கணித ஆற்றல் அவசியம். உள்ளும் புறமுமான கணக்கீடுகளில் மேகத்தை துரத்துபவர்கள். 13 * 13 எவ்வளவு என்றால் எனக்கு குறைந்தபட்சம் ஒரு கால்குலேட்டர் தேவை. லாப சதவீதம் காண்பது எப்படி என்பது கூட தெரியாது. எல்லாம் உத்தேசம்தான். பள்ளிக்காலத்தில் கணக்கோடு பெரும் பிணக்கு. சைன் டீட்டா, காஸ்ட் டீட்டா, லாக் புக், அல்ஜீப்ரா போன்றவை சாத்தானின் ஆயுதங்களென பள்ளி வாசல் வரை என்னை விடாமல் துரத்தியது.

ஆனால் பாருங்கள் இந்த நவீன யுகத்தில் ஒருவன் எண்களைப் புறக்கணித்துவிடவே முடியவில்லை. மொபைல் நம்பர், வங்கிக் கணக்கு எண், நிரந்தர கணக்கு எண், ஏடிஎம் கார்டு பாஸ்வேர்டு, இண்டர்நெட் பாங்கிங் எண்கள், வண்டி நம்பர், எம்ப்ளாயி கோட், இண்டர்நெட் லாக்கிங் எண்கள், லைப்ரரி கார்டு எண்கள், பிராவிடண்ட் பண்ட் அக்கவுண்ட் நம்பர் என நாள் முழுதும் எண்கள் நம்மைத் துரத்தத்தான் செய்கிறது. நான் இன்னமும் எனது மொபைல் எண்களை அட்டையில் எழுதி சட்டைப்பையில் வைத்திருக்கிறேன். திடீர்னு கேட்டா சொல்லத் தெரியனும்ல.

***

'கற்றதனால் ஆன பயன்' கவிதை வடிவத்தில் தோற்றிருந்தாலும் கருத்து ரீதியாக பெருவெற்றி கண்டிருக்கிறது. உலகெங்கிலும் இருந்து பாராட்டுதல்களும், கடும் எதிர்வினைகளும் கலந்து கட்டி வந்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு ஆதரவான முதல் குரல் உங்களுடையது என்று அறிந்த, அறியாத மென்பொருள் நண்பர்கள் பலரும், பல இடங்களிலிருந்து அழைத்துப் பேசுகிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது. திங்கள் சத்யா போன்ற கலாச்சாரக் காவலர்கள் எனக்கு துடைப்பங்களை அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. குறைந்தபட்சம் ஒரு துடைப்பமாவது அனுப்பி வையுங்கப்பா... ரூம் ரொம்ப குப்பையாக் கிடக்குது...

18 comments:

பிரேம்குமார் said...

//அதுக்கு நான் விஷத்தையே குடிப்பேன்" என்று சொல்லிச் சிரித்தாள் கேண்டி//

கேண்டிக்கு என் வாழ்த்தை சொல்லிவிடு செல்வா :)

பிரேம்குமார் said...

//எங்களுக்கு ஆதரவான முதல் குரல் உங்களுடையது என்று அறிந்த, அறியாத மென்பொருள் நண்பர்கள் பலரும், பல இடங்களிலிருந்து அழைத்துப் பேசுகிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது.//

இதையே நாங்க எழுதியிருந்தா சுயபச்சாதப்பத்தை தேடிக்கொள்கிறோம் என்று சொல்லிவிடுவார்கள். உனக்கு நன்றி சொன்னாலும் இந்த உலகம் என்ன பேசுமோ என்று தெரியவில்லை

இதில் கலாச்சார காவலர்களுக்கு என்ன கேடு வந்தது என்று தெரியவில்லை. எனினும் அந்த கவிதையை பார்த்து பொங்கியவர்களுக்கு அண்ணாச்சியில் பாணியில் வாழ்த்துகளை சொல்லிடறது தான் எளிது

“நல்லா இருங்கடே”

மண்குதிரை said...

ரசித்தேன் நண்பா.

பைத்தியக்காரன் said...

செல்வா,

நடை ரொம்ப நல்லா இருக்கு.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வால்பையன் said...

//நான் இன்னமும் எனது மொபைல் எண்களை அட்டையில் எழுதி சட்டைப்பையில் வைத்திருக்கிறேன். //

இத சொல்றதுக்கும் ஒரு தைரியம் வேணும்!

பெரும்பாலும் நண்பர்களின் நம்பர்களை மனதில் வைத்து கொள்ளவேண்டும் என்பது தான் எனது ஆசையும்! மூளை சோம்பேறியாகிவிட்டதே!

கோபிநாத் said...

\\நான் இன்னமும் எனது மொபைல் எண்களை அட்டையில் எழுதி சட்டைப்பையில் வைத்திருக்கிறேன். திடீர்னு கேட்டா சொல்லத் தெரியனும்ல.
\\

நமக்கும் அதே நிலைமை தான் ;-))

அனுஜன்யா said...

ஜி.நாகராஜன் படித்ததும், விரிவான பதிவு எழுதுங்கள்.

எண்கள் ... நானும் பல நாட்கள் முன் ஒரு கவிதை போன்ற ஒன்றை எழுதினேன் :))(http://anujanya.blogspot.com/2008/06/blog-post_15.html)

'கற்றதனால்' - நான் உங்க கட்சிதான்.

Deepa said...

ரசித்தேன். கேண்டியையும் அவரை ரசித்து நீங்கள் எழுதிய பதிவையும்.

உங்கள் கவிதையை அன்றே படித்துப் பலரிட்மும் ப்கிர்ந்து கொண்டேன். வாழ்த்துக்கள்

கும்க்கி said...

'கற்றதனால் ஆன பயன்' கவிதை வடிவத்தில் தோற்றிருந்தாலும் கருத்து ரீதியாக பெருவெற்றி கண்டிருக்கிறது.

அப்படியா?
எனக்கு ரொம்ப வருத்தம்.

கும்க்கி said...

உங்களிடமிருந்து இப்படி ஒரு கவிதையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை செல்வா.சங்கடத்திலும் ஆத்திரத்திலும் மனம் கோணிக்கிடக்கிறேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அது விஜயை சந்திக்க கோக் என்ன விஷத்தையே குடிக்கலாம் என்ற அர்த்தமா? அல்லது பார்ப்பதை விட சாகலாம்.. என்ற அர்த்தமா? ஹிஹி நா ரெண்டாவது வகை.!

எண்கள் பற்றிய பகுதி எனது பாஸ்வேர்ட் உலகம் என்ற பதிவை நினைவூட்டியது. போன் நம்பர் குறித்த விஷயத்தில் உங்கள் தோழந்தான் நானும்.

அப்புறம் 'கற்றதனால்..' மிகுந்த கமர்ஷியல் வீச்சு கொண்ட ஒன்று. அது இந்த அளவு எதிர்வினைகளை தராமலிருந்தால்தான் ஆச்சரியம்..

சென்ஷி said...

கேண்டியின் கேப்ஷன் சூப்பர் :-)

//'கற்றதனால் ஆன பயன்' கவிதை வடிவத்தில் தோற்றிருந்தாலும்//

என்னது அதுவும் கவிதையா :-))

நா.இரமேஷ் குமார் said...

//கேண்டிக்கு என் வாழ்த்தை சொல்லிவிடு செல்வா :)//
ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

இந்த வாரம் விகடன் கவிதையை படித்துப் பார்க்கவும்.

ICANAVENUE said...

செல்வேந்திரன், என் அறியாமையை மன்னித்து கொள்ளுங்கள்! 'கற்றதனால் ஆன பயன்' - எங்கு உள்ளது இது?

ஆசிப் மீரான் said...

செல்வா

நீதான் விஷம் குடிக்கப் போறியோன்னு ஆவலா வந்தா... ப்ச்ச்

ரொம்ப மோசண்டே நீ!!

மங்களூர் சிவா said...

/
குறைந்தபட்சம் ஒரு துடைப்பமாவது அனுப்பி வையுங்கப்பா... ரூம் ரொம்ப குப்பையாக் கிடக்குது...
/

:)))

/
ஆதிமூலகிருஷ்ணன் said...

அது விஜயை சந்திக்க கோக் என்ன விஷத்தையே குடிக்கலாம் என்ற அர்த்தமா? அல்லது பார்ப்பதை விட சாகலாம்.. என்ற அர்த்தமா? ஹிஹி நா ரெண்டாவது வகை.!
/

ரிப்பீட்டு

uvaraj said...

விஜயை மீட் பண்ணனுமா?! கோக் குடிங்க"ன்னு ஊர் முழுக்க விளம்பரப் படுத்தி இருக்கிறார்கள். "அதுக்கு நான் விஷத்தையே குடிப்பேன்" என்று சொல்லிச் சிரித்தாள் கேண்டி. விஜய டி.ஆரின் குறள் டி.வி போஸ்டரைப் பார்த்துவிட்டு ஒரு அட்டகாசமான கேப்ஷன் சொன்னாள். "குரல்வளையைக் குறி வைத்து...

First Class.....
Keep it Up...........

டக்ளஸ்....... said...

அந்த கவிதையை ஆனந்த விகடன்ல படித்தேன்..!
அருமை சகா...!