பின் நவீனத்துவ ஆலயம்!
கவி பாடி அமீரகத்தில் கொசுக்களை ஒழித்தவரும், கவி'மட'த்தலைவனுமாகிய ஆசிப் அண்ணாச்சி தலைமையில் சென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு நாளை மாலை (25/04/09) மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே நிகழ இருக்கிறது. தமிழின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க உள்ளார். சென்னைவாழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்போடு அழைக்கிறோம்.
நேரம்: மாலை ஐந்து மணி;
பின்குறிப்பு:
நேரம் தவறி வருபவர்களுக்கு வறுகடலை வழங்கப்பட மாட்டாது.
பின் நவீனத்துவம் பற்றி பேச கண்டிப்பாக அனுமதி இல்லை.
'நள்ளிரவு நயாகரா' நிதானத்துடன் வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்.
***
அலங்கார் ஹோட்டலுக்கு முன் பக்கம் உள்ள சாக்கடை அடைத்துக்கொண்டு விட்டது. துப்புரவுப் பணியாளர்கள் வந்து தூர் வாரியதில் எக்கச்சக்கமாய் காண்டங்கள் வெளிவந்திருக்கிறது. நல்ல வேளை சுற்றிலும் இருபது கிலோமீட்டர் சுற்றளவிற்கு எந்த சாஃப்ட்வேர் கம்பெனியும் இல்லை. தப்பித்தார்கள்.
***
சென்ற மாதத்தில் ஒரு நாள், உயிர் நண்பனொருவனின் செல்லிடப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தேன். எக்கச்சக்கமாய் குஜால் வீடியோ வைத்திருந்தான். ஒரு வீடியோவில் ஓங்கு தாங்காய் வளர்ந்த வேட்டை நாயொன்று பெண்ணைப் புணர்வதைப் போன்ற காட்சி. 'உவ்வே...' என்று வாந்தியெடுத்து, போனைத் தூக்கி ஏறிந்தேன். 'ச்சீய்... எத்தனை வக்கிரம்?! இதையெல்லாம் வச்சிக்கிட்டு அலையுறீயே... கேவலமா இல்ல..' நண்பன் மவுனமாய் நகர்ந்து விட்டான்.
சுசீந்திரம் கோவில் பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டிருந்தேன். பிரகாரத் துண்களில் இருந்த சிற்பமொன்றில் நிர்வாண பெண்ணொருத்தி தன் கால்களை வான் நோக்கி நீட்டியபடி இருக்க, முன்னும் பின்னுமாக இரண்டு புராண காலத்து மிருகங்கள் அவளைப் புணரும் முயற்சியில் இருந்தன. இந்தக் கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்கிறார்கள். சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், பிற்காலத்திய நாயக்கர்களும் அதன் திருப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். எப்படி யோசித்துப்பார்த்தாலும் விலங்குகளோடு உறவு கொள்ளும் சமாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது போலிருக்கிறது. நண்பனை அவசரப்பட்டு திட்டிவிட்டேனோ என்று தோன்றுகிறது.
பிரகாரத் துண்களில் மற்றொரு ஆச்சர்யம் ரிஷிகள், முனிவர்களின் சிற்பங்கள். அவர்களது குறிகள் 'ஸீரோ டிகிரியில்' வரும் காட்டு வாழைப்பழ வர்ணனையை ஒத்திருக்கிறது. அதிலும் ஒரு முனிவரின் ஆண்குறியை அவரே சுவைக்கிறார். முனிவர்கள் காமத்தை ஜெயித்ததாகவும், புனிதர்களாகவும்தான் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தச் சிற்பங்கள் அந்த கட்டமைப்பை உடைப்பதால் 'சுசீந்திரம் - ஒரு பின்நவீனத்துவ ஆலயம்'னு சொல்லிடலாமா?!
Comments
2. நல்ல பகடி நண்பா.
3. no comment
சாப்ட்வேர் கம்பேனி இல்லாவிட்டால் என்ன!
அருகிலேயே எதாவது ”ஆசிரமம்” இருக்கும் பாருங்கள்
:))
அட..அட..என்னா ஒரு ரசனை?.. கலக்கறிங்க போங்க.. :))
போன பதிவர் சந்திப்பின் போது
நானும் வர பிரியப்பட்டேன் ஆனால்
ஏனோ வர ஒரு மாதிரியா இருந்து வரவில்லை. நிச்சயம் அடுத்த சந்திப்புக்கு போயிடனும்னு நினைத்திருந்தேன்... அதுவும் சனிக்கிழமையில வைச்சிருக்கீங்க.
இப்பவும் வர முடியாது. சரி அடுத்த சந்திப்பிலாவது கூடுமா பார்ப்போம்.
கூத்தநல்லூரான், டைமெல்லாம் சும்மா லுலாயிக்கு... நீங்க பத்து மணிக்குள்ள எப்ப வேணா வரலாம்.
வால், ம்...ம்... இருந்த ஒரு சாமியாரும் மலையேறிட்டார்னு தெரியாதா?!
மயில், அதற்காகப் போகவில்லை. அந்தக் கோவிலில் நிறைய முரண்பாடுகள்.
விக்கி வருகைக்கு நன்றி.
சஞ்செய்ணே எனக்குப் புகழ்ச்சி பிடிக்காதுன்னு தெரியாதா?!
:-))
//
செல்வா, சூப்பரு போ :)
அது சரி, ஐ.டி காரங்க மட்டுந்தான் அந்த ஓட்டலுக்கு போவாங்க.. அதுனால தான் இப்படி ஆயிடுச்சுன்னு யாரும் சொல்ல மாட்டங்களா என்ன?? ;-))))
பெரியவங்க கூடுற இடத்துல நமக்கு வேலை இல்ல..
நான் கட்டாயம் வருவேன்.
ஆசிரமத்தைக் குறைகூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனது ஆசிரமத்தில் அதைப் பயன்படுத்துவதில்லை! தெரிஞ்சுக்கோங்க!
ஆசிரமத்தைக் குறைகூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனது ஆசிரமத்தில் அதைப் பயன்படுத்துவதில்லை! தெரிஞ்சுக்கோங்க! //
அங்கிள் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்!
எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்னு சொல்லமுடியாது!
அருகிலேயே எதாவது ”ஆசிரமம்” இருக்கும் பாருங்கள்///
வால், வால்பையன்ங்கற பேரு உங்களுக்கு சூப்பரா மேட்ச்சாகுது...
மாம்ஸ், செல்வேந்திரன் சொன்ன இருபது கிலோ மீட்டர்ல உங்க ஆசிரமம் இல்லைல்ல. அப்புறம் ஏன் டென்ஷனாகறீங்க.
அதுக்கெல்லாம் தனியா போவோனுஞ்சாமி.. :)
தூர் வாரியதில் எக்கச்சக்கமாய் காண்டங்கள் வெளிவந்திருக்கிறது. நல்ல வேளை சுற்றிலும் இருபது கிலோமீட்டர் சுற்றளவிற்கு எந்த சாஃப்ட்வேர் கம்பெனியும் இல்லை.
/
/
இந்தச் சிற்பங்கள் அந்த கட்டமைப்பை உடைப்பதால் 'சுசீந்திரம் - ஒரு பின்நவீனத்துவ ஆலயம்'னு சொல்லிடலாமா?!
/
:))))))))
இந்த சாமியார்களே இப்படித்தான் போலிருக்கே .