அதிர்ஷ்டசாலிகள்

மும்பை தீவிரவாதத் தாக்குதலின் போது தங்கள் இன்னுயிரை நீத்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியளிப்பதாக முறையே மாநில, மத்திய அரசுகளும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் அறிவித்திருந்தன. நாளது தேதி வரை சல்லி நயாப் பைசா வழங்கப்படவில்லையென்று சி.என்.என் தொலைக்காட்சியில் கிழி, கிழியென்று கிழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒளிவெள்ளத்திற்கு முன் அத்தனை லட்சம், இத்தனை லட்சம் என்று அறிவிக்கிறார்கள். அத்தகவல் கோடிக்கணக்கான ஜனங்களை சென்றடைந்து விடுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் போய்ச் சேரவில்லையென்பது எத்தனை பேருக்கு தெரியவருகிறது?

***

"உலகமே ஒப்புக்கொண்ட உன்னத எழுத்தாளனாயினும் அவனது படைப்புகளை விமர்சனம் செய்ய அல்லது நிராகரிக்க ஒவ்வொரு வாசகனுக்கும் உரிமை இருக்கிறது" - 'நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' நூலில் ஜெயமோகன்.

விமர்சன வெப்பத்தைத் தாங்க முடியாதவன் எப்படி தன்னை எழுத்தாளனென கற்பிதம் செய்துகொள்கிறான் என்பது புரியவில்லை. நான் என்ன எழுதினாலும் ரசி. தப்பித்தவறி விமர்சனம் செய்தால் மவனே நாறிடுவ லெவலில் ஒரு தெருப்பொறுக்கி எழுத்தாளன். அவனுக்கு ஒரு அடிப்பொடி. அந்த அடிப்பொடிக்கு ஒரு அரைப்பொடியென பதிவுலகில் நிகழ்ந்து வரும் கோமாளித்தனங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது.

விக்ரமன் இவர்கள் கதையைப் படமாக எடுத்தால் 'லா லா' நிறைய்ய்ய போடலாம்.

***

லக்கி 'சாரு-ஈழம்' என்ற பதிவில் "முட்டாப்பய நாயக்கன்; முரட்டுப்பய துளுக்கன்" என்ற பதத்தில் யாரைத் தாக்குகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தும் வாளாவிருக்கிறோம். பதிவர்களுக்குள் விமர்சனங்கள் இருந்தாலும் ஜாதி, மத அடையாள பிரிவினைகள் இருந்ததில்லை. மணி கட்டப்படாத பூனைகளின் கதி தெரியுமில்லையா?

***

நடுக்காட்டில் சிங்கத்தை எதிர்கொண்டவனைப் போல மருளும் விழிகளோடு அடியேன் 'நீயா? நானா?' நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்டு உளறியதை வரும் ஞாயிறு (31/05/09) இரவு இந்திய நேரப்படி 9 முதல் 10:30க்குள் காட்ட இருக்கிறார்கள். நண்பர்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

***

என்னுடைய நூறாவது பாஃலோயர் எனும் பெருமையை 'சென்சேஷனல்' சென்ஷி தட்டிச் செல்கிறார். நேற்று சாட்டில் தொடர்பு கொண்டவர் 'இது என் வாழ்நாள் பெருமை' என்று உணர்ச்சி வசப்பட்டார். என்னதான் கோடிக்கணக்கான வாசகர்கள் கூகிள் ரீடரில் படித்தாலும் பாஃலோயர்ஸ் 100ஐ தொட்ட உற்சாகத்தில் கம்ப்யூட்டர் மானிட்டரைத் தூக்கி 'பேட்-அப்' செய்துகொள்கிறேன்.

***

கனிமொழிக்கு அமைச்சர் பதவி கிடைக்காததை பட்டாசு வெடித்து கொண்டாடினேன். ஏனெனில், ஈழப்போராட்டத்தை முன்வைத்து நிகழ்ந்த நாடகத்தில் "தேதி குறிப்பிடாத ராஜினாமா கடிதம் எழுதி அப்பாவிடம் கொடுக்கிற காட்சியில்" பிரமாதமாகப் பிண்ணியெடுத்த நடிகையர் திலகம் எங்கே டெல்லிக்குப் போய் அமைச்சகப் பணிகளில் மூழ்கி கலைச்சேவை செய்யாமல் இருந்து விடுவாரோ என்கிற அச்சம்தான். தமிழ்மக்கள் அதிர்ஷ்டசாலிகள்!

Comments

iniyavan said…
சகா,

31/05/06?????
Mohandoss said…
//"முட்டாப்பய நாயக்கன்; முரட்டுப்பய துளுக்கன்"//

இந்த வழமையே கூட தவறுன்னு நினைக்கிறேன், உண்மையில் அது முட்டாள் துலுக்கன் முரட்டு நாயக்கன் என்று தான் இருக்கணும். நீங்கள் சொல்லும் உள்குத்திற்கு வெளியே இதைச் சொல்லிக் கொள்கிறேன்.

ஒரு உதாரணம், அரசூர் வம்சத்தில் இரா. முருகன் எழுதியிருப்பார் இப்படி.

“நீ ஆனாலும் புத்திசாலித் துருக்கண்டா கருத்தா.”

“அப்ப, சாது நாயக்கனாப் பாத்து ஆள் அமர்த்திக்கட்டா?”

இப்படிப் போகும் உரையாடல் கொண்டு நான் மேற்சொன்னதை புரிஞ்சிக்கலாம். இது just FYI.
Anonymous said…
நான் நாயக்கர் இனத்தை சேர்ந்தவன். யுவ கிருஷ்ணா / லக்கி லூக்கை, வன்மையாக கண்டிக்கிறேன்! தி.மு.க ஆளும் கட்சி ஆள் என அடையாளம் கட்டிக்கொள்வதால் வரும் தெனாவெட்டு போல?
வந்து சொல்றேன்....
//என்னுடைய நூறாவது பாஃலோயர் எனும் பெருமையை 'சென்சேஷனல்' சென்ஷி தட்டிச் செல்கிறார். நேற்று சாட்டில் தொடர்பு கொண்டவர் 'இது என் வாழ்நாள் பெருமை' என்று உணர்ச்சி வசப்பட்டா//

ஆனால் 100வது ஃபாலோயராய் சேர்ந்ததும் உங்கள் முகவரிக்கு நிச்சயம் அனுப்பி வைப்பேன் என்று சொன்ன அந்த பத்து பவுன் தங்கச்சங்கிலி விசயங்கள் இங்கு மறைத்து எழுதாமல் விட்டது ஏனோ???
V.செல்வகுமார், அன்னூர் said…
31.05.09 அன்று இரவு 9 முதல் 10.30 வரை cellphone களை off செய்துவிட்டு வீடுகளுக்குள் பதுங்கிவிடுகிறோம். வாழ்த்துக்கள்.
(பி.கு.ஒளிபரப்பாகும் தேதி 31.05.06 அல்ல, 31.05.09)
மிக்க அன்புடன்,
V.செல்வகுமார்
Anonymous said…
//’முட்டா நாயக்கன், முரட்டுத் துளுக்கன்’ என்றொரு பழமொழி எங்கள் ஊரில் சொல்வார்கள். தமிழ் வலையுலகில் இருக்கும் பெரும்பாலோனோர் இந்த ரகம்தான். ஈழப்போராளிகளின் போராட்ட பின்னடைவுக்கு ஓவர் செண்டிமெண்டு தமிழகத் தமிழர்களும், வெட்டி பந்தா புலம்பெயர் தமிழர்களும் முக்கியக்காரணம். ஈழம்பற்றி உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக வெளியிலோ, இணையத்திலோ நான் யாரிடமும் பேசியதாக நினைவில்லை. என்னிடமும் யாரும் பேசியதில்லை. உசுப்பேத்தி, உசுப்பேத்தியே முன்னெப்போதும் இல்லாத மோசமான சூழல் இன்று அங்கே அமைந்திருக்கிறது.///


தயவு செய்து யாரை குறிப்பிடுகிறார் என்று யாரேனும் கூறவும்............
/*
என்னுடைய நூறாவது பாஃலோயர் எனும் பெருமையை 'சென்சேஷனல்' சென்ஷி தட்டிச் செல்கிறார். நேற்று சாட்டில் தொடர்பு கொண்டவர் 'இது என் வாழ்நாள் பெருமை' என்று உணர்ச்சி வசப்பட்டார். என்னதான் கோடிக்கணக்கான வாசகர்கள் கூகிள் ரீடரில் படித்தாலும் பாஃலோயர்ஸ் 100ஐ தொட்ட உற்சாகத்தில் கம்ப்யூட்டர் மானிட்டரைத் தூக்கி 'பேட்-அப்' செய்துகொள்கிறேன்.
*/

என்னா தான் நூறா இருந்தாலும் நூத்தி ஒண்ணுக்குத்தான் சபையிலே மதிப்பு மொய் என்ற பெயரிலே... பயந்துராதீங்க நான்தான் நூத்தி ஒன்னு... பாலோயர் லிஸ்ட்லே

(அடச்சே.. இந்த வெளம்பர உலகத்திலே எப்படில்லாம் வெளம்பரம் பண்ணிக்க வேண்டி இருக்கு...!!!)
Sanjai Gandhi said…
செல்வா, சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என பலமுறை சொல்லி ஆயிற்று. கேட்பதாக உத்தேசம் இல்லையா?

100வது பாலோயர் பெற்றதற்கு வாழ்த்துகள். அண்ணாச்சி கணக்குத் தீர்த்துட்டார்.. அடுத்து உங்களோடது 2 ட்ரீட் பாக்கி இருக்கு.. இன்னைக்கு நான் அரிசியும் ஊறவைக்கலை.. பருப்பும் ஊறவைக்கலை.. எந்த ஹோட்டல் போகலாம்? ;))
//
உலகமே ஒப்புக்கொண்ட உன்னத எழுத்தாளனாயினும் அவனது படைப்புகளை விமர்சனம் செய்ய அல்லது நிராகரிக்க ஒவ்வொரு வாசகனுக்கும் உரிமை இருக்கிறது" –
//

உண்மை…அப்படியே ஏற்று கொள்கிறேன்… இப்போது இங்கு பிரச்சினை என்னவென்றால் எழுத்தாளரின் எழுத்துகளுக்காக அதை படிப்பவர்களை விட அந்த எழுத்தாளருக்காக படிப்பவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்…

இவர்களுக்கு அவரின் எழுத்துக்களை அப்படியே ஏற்று கொள்ளும் மனநிலை வாய்த்திருக்கிறது…இதை அவர் எழுதுவதற்கு முன்பு இவர் பிரபாகரன் என் மாமா என்றும் அதை பற்றி யாராவது பேசினாலே…கடும் சொற்களை பிரயோகித்தும் வந்தார்… இப்போது என்னவென்றால் அவருக்கு பிடிக்கின்ற எழுத்தாளருக்காக அவரின் "பேனாவை விபச்சாரம்" செய்ய வைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாது சகபதிவர்கள் குறித்த ஜாதி, மத ரீதியிலான விமர்சனம் வேறு…
அவருக்கு பரிந்தும் உங்களை தாக்கியும் இன்று இன்னொருவர் ஒரு பதிவும் அதில் சென்னையில் உள்ள பதிவுலக பிரபலங்களும் பின்னூட்டம் இடுகிறார்கள்…அவர்கள் யாரும் ஏன் ஜாதி, மத ரீதியிலான விமர்சனங்களை கண்டிக்கவில்லை……அது குறித்து எதிர் பதிவுகளையும் ஏன் எழுதவில்லை….


பதிவுலக தீவிரவாதம்....!!!!
Anonymous said…
//தயவு செய்து யாரை குறிப்பிடுகிறார் என்று யாரேனும் கூறவும்............//

சாருவைத் திட்டி பதிவு போட்டிருக்கும் ஆசிப் மீரானைத் தான். சரியா செல்வேந்திரன்? ;)
//ஒரு தெருப்பொறுக்கி எழுத்தாளன். அவனுக்கு ஒரு அடிப்பொடி. அந்த அடிப்பொடிக்கு ஒரு அரைப்பொடியென பதிவுலகில் நிகழ்ந்து வரும் கோமாளித்தனங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது//

super.:-))))
mathi - india said…
லக்கி கட்சிகாரங்கதான் ஜாதியை ”ஒளிச்சுச்சாங்களே”? அப்புறம் எப்படி உங்களை ஜாதியை சொல்லி திட்டமுடியமாம்?
//மும்பை தீவிரவாதத் தாக்குதலின் போது தங்கள் இன்னுயிரை நீத்த காவலர்களின் //

எப்போ நம்ம சிஸ்டம் கரெக்டா வொர்க் பண்ண போவுதோ.... :(

பதிவுலகில் ஜாதி மற்றும் மத பிரிவினைகளை தவிர்ப்பது அனைவர்க்கும் நல்லது....இப்பவே நம்ம நாடு அந்த விசயத்தில் ரொம்ப அழகா இருக்கு.. :(

//தமிழ்மக்கள் அதிர்ஷ்டசாலிகள்!//
கரெக்டா சொன்னீங்க செல்வேந்திரன்..
selventhiran said…
தேதி தவறினைச் சுட்டிய நண்பர்களுக்கு நன்றி! மாற்றியாகிவிட்டது.

மோகன்தாஸ், நீங்கள் குறிப்பிடுவதுதான் சரி! நண்பர்களிடமும் கேட்டு உறுதிபடுத்திக்கொண்டேன்.

சென்ஷி, முகவரி ப்ளீஸ்!

நை நை நன்றி!

சஞ்ஜெய், இனி கூடுமானவரை தவிர்க்கிறேன். பயத்தினால் அல்ல,

1) அடிக்கடி ரத்தம் கொதிக்கிறது.

2) எழுதுவதும், படிப்பதும் தடைபடுகிறது.

3) விமர்சனங்களைத் தாங்குமளவிற்கு எதிராளிகளுக்குப் போதவில்லை.

கண்ணா, ஸ்ரீதர் வருகைக்கு நன்றி!
இந்த பதிவுலக தீவிரவாதம், கோமாளித்தனம் இருக்கட்டும்.

ஒரு சந்தோசமான செய்தி. உங்களின் கணிபொறி மொழி கற்றோம் வேறு என்ன தவறு செய்தோம், கவிதை இன்போசிஸ் நாராயண மூர்த்தி வரை சென்று அடைந்து உள்ளதாம்.

ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்லவும், அவர் மிகவும் ரசித்தாராம்.

குப்பன்_யாஹூ
/மவனே நாறிடுவ லெவலில் ஒரு தெருப்பொறுக்கி எழுத்தாளன். //
கொஞ்சம் யோசிச்சு வார்த்தைய போட்டிருக்கலாமே செல்வா? பல சச்சரவுகள் வருமே. நீங்களா இப்படி உணர்ச்சிவசப்படறீங்க? ஆச்சர்யம்
//1) அடிக்கடி ரத்தம் கொதிக்கிறது.//

உடம்பு மேலேயே பாத்திரத்தை வச்சு சமைச்சுகலாம்! எதிரி வீசும் பந்தை அவனுக்கே திருப்பி அடிக்கும் வித்தை நம்ம்மிடம் இருக்கு

//2) எழுதுவதும், படிப்பதும் தடைபடுகிறது.//

கஷ்டம் தான்!

//3) விமர்சனங்களைத் தாங்குமளவிற்கு எதிராளிகளுக்குப் போதவில்லை.//

தமிழ்க முதல்வரையும், அவரது குழந்தைகளையும் கேள்வி கேட்கும் உரிமை உண்டு நமக்கு!

இந்த சுண்டைக்காய்கள் என்ன சொன்னால் நமக்கென்ன, நாம் வேக்குவம் கிளீனராக வேண்டாம், தெரு கூட்டும் சீமாறாகவே(துடைப்பம்) இருப்போம்
Deepa said…
சுவாரசியமான பதிவு.
என்னப்பா, பதிவு ரொம்ப சூடா இருக்கு!!

நீயா நானா நிகழ்ச்சியை காண ஆவலாய் இருக்கிறேன்
செல்வேந்திரன்,

"விமர்சன வெப்பத்தைத் தாங்க முடியாதவன் எப்படி தன்னை எழுத்தாளனென கற்பிதம் செய்துகொள்கிறான் என்பது புரியவில்லை. நான் என்ன எழுதினாலும் ரசி. தப்பித்தவறி விமர்சனம் செய்தால் மவனே நாறிடுவ லெவலில் ஒரு தெருப்பொறுக்கி எழுத்தாளன். அவனுக்கு ஒரு அடிப்பொடி. அந்த அடிப்பொடிக்கு ஒரு அரைப்பொடியென பதிவுலகில் நிகழ்ந்து வரும் கோமாளித்தனங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது."

என்ற உங்கள் கருத்துடன் எழுத்துக்கு எழுத்து ஒத்துப்போகிறேன். நீங்கள் குறிப்பிடும் நபர் அதெப்படி எப்போதும் அநியாயத்தின் பக்கமே நிற்கிறார் என்ற அதிசயம் எனக்குப் புரியத்தானில்லை. கெளரவர் பக்கமே நிற்பேன் என்று அடம்பிடிக்கிறார். தவறைச் சரியென்கிறார். சரியைத் தவறென்கிறார். இவர்களையெல்லாம் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. எப்படி இப்படிக் கண்களை மூடிக்கொண்டிருக்க முடிகிறது என்று.

சாதி தொடர்பாக நீங்கள் எழுதியிருப்பதும் சரி. பதிவுலகிலும் சாதி வேண்டாமே.
selventhiran said…
தமிழ்நதி. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டங்களில் நடுநிலைமை கூட அயோக்கியத்தனமென்றுதான் பொருள் கொள்ளப்படவேண்டும். அப்படி இருக்கையில் தீமைக்கு தூபம் போடும் வேலையை உலக நாடுகளும், நம்மை ஆள்பவர்களும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். தற்போது சில இலக்கியவாதிகளும் அவ்வறப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது நம்மைப் பிடித்த சாபமன்றி வேறென்ன?!
//தமிழ்நதி. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டங்களில் நடுநிலைமை கூட அயோக்கியத்தனமென்றுதான் பொருள் கொள்ளப்படவேண்டும். //

உங்க வார்த்தைதான் பதிலா சொல்ல வேண்டியிருக்குது இதுக்கு...

அமைதியா இருக்குறதுக்கு அர்த்தம் பயம் இல்லை :-)
BEST FUNDS ARUN said…
நாந்தன் 100 வது ஃபொல்லொநெர் ஆக நினைதென். ஆனா அதூக்கு முன்னஅகி
விட்டொம்
100 பிந்தொடர்வர்கல் வந்ததருக்கு விருந்து உன்ட்டாஆஆ?


நாலை இர‌வு ச‌ன்க‌ர‌ன்கொஇல் karthick cablela vijay த‌விர‌ ம‌ட்ட்ர‌ ஷ‌ன்னெல் ஒலிப‌ர்ர‌ப்பு ஆகாது என்ப‌ட்தை ம‌கில்வுட‌ன் தெரிவிது கொள்கிரென்.
(தொலில் நுட்ப‌ கொல‌ரு)
நாளைக்கா ?
ரைட்டு
Anonymous said…
செல்வேந்திரன் ,,,,,
உங்களது படைப்புக்களை விரும்பி படிக்கும் ஒரு வாசகன் ...
நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை ஜ்யோவ்ராம் சுந்தர் ரின் ப்லோக் ஆ படிப்பதிலும் லக்கி இன் ப்லோக் இ படிப்பதிலும் வீணாக்க வேண்டாம் ...
நீங்கள் மிகப்பெரிய உயரத்தை அடையப்போகிறவர் ....
உங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யுங்கள் ....


உங்கள் எழுத்துக்கள் மற்றும் உங்களை ரசிக்கும் வாசகன் ..
Anonymous said…
லக்கியும் நைனா தானே,அப்புறம் எப்படி முட்டாநாயக்கன் என்று யாரையாவது திட்டமுடியும்?
//ஞாயிறு (31/05/09) இரவு இந்திய //நேரப்படி 9 முதல் 10:30க்குள் காட்ட இருக்கிறார்கள். நண்பர்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.//

பதிவுலகப் பாலிடிக்ஸ் நிறைய புரியவில்லை...
நாளை கண்டிப்பாகப் பதுங்கிக் கொள்கிறேன்!!!
சற்றுமுன் தான் உங்கள் பேச்சைக் கேட்டேன் நீயா நானாவில்!உடன் சுட சுட இந்தப் பின்னோட்டம்.நானும் நெல்லைக்காரன் தான்.உங்களை எங்கோ சந்தித்திருக்கிறேன்!நினைவில் இல்லை.பேச்சு மிக நன்றாய் இருந்தது கொஞ்சம் மேடை பயம் இருந்தாலும்.!வாழ்த்துக்கள்.
Suresh said…
மிக அழகாக பேசினிர்கள்

//பொட்டில் அடித்தார் போல் பேஸ்புக், ஆர்குட், பிளாக்னு //

எல்லா கருத்தும் உடன் படும் படி, வேர்கள் பத்தியும் அருமையா சொன்னிங்க எங்க இருந்து வந்தோம்னு
Suresh said…
நீட்டா புல் பார்மல்ஸில் இருந்திங்க முதல் கேமிரா முன் பயணம் என்று தெரிந்தது, ஆனால் பதில்கள் ரொம்ப ஓசிக்கவைத்தது

சூப்பர்

விஜய் டிவி எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று, கோபி அண்ணா அருமை ;) அவரு டைரக்டர் அண்டோனி செம ஆளு திறமையின் உச்சம் அவரின் நிகழ்ச்சிகள்
Suresh said…
சூப்பர் தலைவா
Venkatramanan said…
செல்வா!
தங்களது கருத்துக்கள் பலரையும் நேற்று சிந்திக்க வைத்திருக்கும்!
அதன் சுட்டி: http://tamil.techsatish.net/file/neeya-naana-36ஆகஸ்டில் கோவை வருகிறேன். இருவரும் நேரம் ஒத்து வருமெனில் சந்திப்போம்.

அன்புடன்
வெங்கட்ரமணன்
Suresh said…
http://www.sakkarai.com/2009/06/blog-post.html

நண்பர், பதிவர், கவிஞர் செல்வேந்திரன்
விஜய் டிவி நீயா நானா வீடியோ மற்றும் பேச்சு
Suresh said…
//"உலகமே ஒப்புக்கொண்ட உன்னத எழுத்தாளனாயினும் அவனது படைப்புகளை விமர்சனம் செய்ய அல்லது நிராகரிக்க ஒவ்வொரு வாசகனுக்கும் உரிமை இருக்கிறது" - 'நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' நூலில் ஜெயமோகன்.

விமர்சன வெப்பத்தைத் தாங்க முடியாதவன் எப்படி தன்னை எழுத்தாளனென கற்பிதம் செய்துகொள்கிறான் என்பது புரியவில்லை. நான் என்ன எழுதினாலும் ரசி. தப்பித்தவறி விமர்சனம் செய்தால் மவனே நாறிடுவ லெவலில் ஒரு தெருப்பொறுக்கி எழுத்தாளன். அவனுக்கு ஒரு அடிப்பொடி. அந்த அடிப்பொடிக்கு ஒரு அரைப்பொடியென பதிவுலகில் நிகழ்ந்து வரும் கோமாளித்தனங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது.

விக்ரமன் இவர்கள் கதையைப் படமாக எடுத்தால் 'லா லா' நிறைய்ய்ய போடலாம்.//

ஹா ஹா சரி சூடா உண்மையை சொன்ன உங்களுக்கு பெரிய பாராட்டு

அப்புறம் பூனைக்கு எல்லாம் மணி கட்டியாச்சு ;)கழட்டி விட்டாலும் மறுபடி கட்டுவோம்

இல்லைனா இப்படி தான்
Suresh said…
/ஒரு தெருப்பொறுக்கி எழுத்தாளன். அவனுக்கு ஒரு அடிப்பொடி. அந்த அடிப்பொடிக்கு ஒரு அரைப்பொடியென பதிவுலகில் நிகழ்ந்து வரும் கோமாளித்தனங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது.//

செல்வாவ இது நான் இப்போ தான் உங்க பதிவை படிக்க அரம்பித்துள்ளேன்

சும்மா அதிருதுல்ல சரி தில்லு உங்களுக்கு ;) நாமும் உங்கள மாதிரி தான்
Suresh said…
//லக்கி 'சாரு-ஈழம்' என்ற பதிவில் "முட்டாப்பய நாயக்கன்; முரட்டுப்பய துளுக்கன்" என்ற பதத்தில் யாரைத் தாக்குகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தும் வாளாவிருக்கிறோம். பதிவர்களுக்குள் விமர்சனங்கள் இருந்தாலும் ஜாதி, மத அடையாள பிரிவினைகள் இருந்ததில்லை. மணி கட்டப்படாத பூனைகளின் கதி தெரியுமில்லையா?//

ஜாதி மதம் எல்லாம் தேவை இல்லாத ஒன்னு.,,

அப்புறம் அனானி சொலி தான் எனக்கும் தெரியும் அது அந்த நண்பர் என்று

சரி நான் ஒரு பிரச்ச்னையிலே அவரது பதிவை Stopped following as follower

தமிழ்மணத்தில் சூடானால் அதை படித்து கருத்தும் போடுவது உண்டு

ஆஹா பதிவுலகத்தில் இவ்வளவு பிரச்சனை இருக்கா..

பராவில்லை தவறு என்றால் தட்டி கேட்க ஒரு சில பதிவர்களாவது இருக்கிங்க ரொம்ப சந்தோசம்
Suresh said…
//என்னுடைய நூறாவது பாஃலோயர் எனும் பெருமையை 'சென்சேஷனல்' சென்ஷி தட்டிச் செல்கிறார். நேற்று சாட்டில் தொடர்பு கொண்டவர் 'இது என் வாழ்நாள் பெருமை' என்று உணர்ச்சி வசப்பட்டார். என்னதான் கோடிக்கணக்கான வாசகர்கள் கூகிள் ரீடரில் படித்தாலும் பாஃலோயர்ஸ் 100ஐ தொட்ட உற்சாகத்தில் கம்ப்யூட்டர் மானிட்டரைத் தூக்கி 'பேட்-அப்' செய்துகொள்கிறேன்.//

உண்மை தான் பாலோவர் 100 என்றால் அதில் ஒரு ஆனந்தம் இருக்கு..

சிக்கிரமா 200 அடிக்க வாழ்த்துகள்

சென்ஷி என்ன்பா ஏதாச்சும் பரிசு கொடுத்தாரா :-)
RaGhaV said…
முதன்முறையாக "நீயா, நானா" வை காத்திருந்து பார்த்தது நேற்றுதான்.. :-)

அருமையாக பேசினீர்கள்.. :-)
Guru said…
விஜய் TV-ல் உங்கள் கருத்துகளை மிகச்சிறப்பாக பதிவு செய்தீர்கள். அவை அளவானதாகவும், அர்த்தம் பொதிந்ததாகவும் அமைந்தது. வாழ்த்துக்கள்.
Thamira said…
அனைத்து பகுதிகளுமே சிறப்பு. இரண்டாவது பகுதி குறித்து : மாற்றுக்கருத்துகளுக்கான இடம் எப்போதுமே உள்ளது. யாராலும் அதைத் தடுத்துவிடமுடியாது. ஆயினும் எந்த மனிதனுக்கும் கோபத்தைத்தூண்டும் கடுஞ்சொற்களை பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை, எனக்கு பிடித்திருக்கிறது என்பதைத்தாண்டியும் பலரும் மதிக்கும் ஒரு எழுத்தாளரை தகாத சொல்லில் விளிப்பது தவறே..
Thamira said…
அப்புறம் விஜய் டிவி கதைக்கு வரவும். நிகழ்ச்சிக்குப்பின்னர் கேண்டி பொறாமை கொள்ளும் அளவில் எத்தனை போன்கால்கள் வந்தன என்பதை மறைக்காமல் சொல்லிவிடவும்.
மிக அழகாக அருமையா சொன்னிங்க :)
Unknown said…
முட்டா நாயக்கன், முரட்டு துலுக்கன் என்பது தவறு..!!
முட்டாள் துலுக்கன் முரட்டு நாயக்கன் என்பது பொருந்தும் என நினைக்கிறேன்.!!

Popular Posts