வக்கீல்கள் ஜாக்கிரதை...!

நட்சத்திர பதிவராகத் தங்களைத் தேர்வு செய்துள்ளோம். சிறிய அறிமுகத்துடன் புகைப்படம் ஒன்றினை அனுப்பிவையுங்கள் என்று தமிழ்மணத்திடம் இருந்து மெயில் வந்திருந்தது. அதனை எளிதாக அனுப்பி வைப்பதற்கான தொழில்நுட்ப குறிப்புகளும் இருந்தது. ஆனால் வழக்கம்போல நான் ஏதோ சொதப்பி புகைப்படமும், அறிமுகமும் தமிழ்மணத்தில் மிஸ்ஸிங். பர்ர்ர்ருவாயில்லை.

கடந்த வருடம் ஒரு சாலை விபத்தில் என்னுடைய சகோதரர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மிகவும் பலவீனமாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை சந்தித்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்து இன்ஸீரன்ஸ் பெற தாம்தான் இந்த மருத்துவமனையின் ஆஸ்தான வழக்கறிஞர் என்ற அறிமுகத்தோடு சில,பல கையொப்பங்கள், ஆவணங்களை வாங்கி சென்றுவிட்டார்.

என்னுடைய சகோதரர், அவர் மீது மோதிய லாரியின் உரிமையாளர் இருவருமே தத்தம் வாகனங்களுக்கு உரிய இன்ஸீரன்ஸ், லைசென்ஸ் வைத்திருந்தனர். பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட மருத்துவ செலவு சுமார் மூன்று லட்சம், பாதிப்பின் விளைவால் நடக்கும் திறனும் குறைந்து விட்டது. சில வேலைகளை பிறரது உதவி இல்லாமல் செய்ய முடியாது என்கின்ற நிலை. அதனால், ஏற்கனவே செய்து கொண்டிருந்த பணியையும் அவரால் செய்ய இயலாது. அனைத்து பேப்பர்களும் சரியாக இருந்தும், பாதிப்பின் தீவிரம் கடுமையாக இருந்தும் அவருக்கு கிடைத்த தொகை ரூபாய் ஒன்றரை லட்சம்தான்.

காரணம் நம்ம வக்கீல் ஐயாதான். முதலில் படுத்த படுக்கையாக இருந்தவரிடம் தாறுமாறான தகவல்களை வழங்கி, வழக்கு நடத்தினால் நீண்டகாலம் ஆகிவிடும். எனவே இன்ஸீரன்ஸ் நிறுவனத்திடம் சமரசமாக பேசி அவர்கள் வழங்க ஓத்துக்கொண்ட தொகையினை பெற்றுக்கொள்வதே சிறந்தது என பயமுறுத்தி சம்மதிக்க வைத்தது. ஏற்கனவே பணச்சிரமத்தில் உள்ள அவரும் அதற்கு ஓத்துக்கொள்ள சுமார் ஆறு லட்சம் வரை க்ளைம் செய்து கிடைத்திருக்க வேண்டிய தொகை வக்கீலுக்கும், வழக்கிற்கும் மட்டுமே சுமார் 30,000 செலவு செய்த பின் ஒன்றரை லட்சம் கிடைத்திருக்கிறது.

மேற்கண்ட விபத்தில் நான் பெற்ற பாடங்கள்:

1. விபத்து நடந்த உடன் அனுமதிக்கப்படும் மருத்துவமனையில்தான் முழுச்சிகிச்சையும் பெறவேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அங்கு முதலூதவி எடுத்துக்கொண்டபின், வேறு எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிட்சை பெற்றுக்கொள்ளலாம். அதை இன்ஸீரன்ஸ் நிறுவனங்கள் அனுமதிக்கின்றன.
2. வழக்கறிஞர் உங்களுக்கு நன்கு அறிமுகமானவராக இருத்தல் நலம். அல்லது அவரைப் பற்றி தீர விசாரித்துவிட்டு வழக்கை ஓப்படைக்கவும்.
3. வழக்கறிஞர் உங்கள் ஊர்க்காரராக இருத்தல் வேண்டும். அல்லது வழக்கு நடைபெறும் கோர்ட் எந்த ஊரில் இருக்கிறதோ அந்த ஊரைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் வக்கீல் ஏங்கேயோ ஒரு இடத்தில் குடி இருந்தால் உங்கள் வழக்கின் டவுசர் கிழிந்து விடும்.
4. உங்களிடம் போதிய ஆதாரங்களும் வாய்ப்புகளும் இருக்கும்போது, சமரசத்திற்கு உட்படாதீர்கள்.
5. கிளர்க்குக்கு பணம் கொடுத்தேன், ஜட்ஜூக்கு கொடுத்தேன், பப்ளிக் ப்ராசிக்யூட்டருக்கு கொடுத்தேன் என வக்கீல்கள் சொல்லும் கதைகளை நம்பாதீர்கள். ஒரு வக்கீல் மேற்கண்டவர்களுக்கு பணம் கொடுத்துதான் ஒரு விபத்து வழக்கை முடிக்க வேண்டும் என்றால் அவன் ஒரு--------------
6. கூடியமட்டும் இன்ஸீரன்ஸ் நிறுவன அதிகாரிகளோடு தொடர்புகொண்டு நிலவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
7. வக்கீல் மிரட்டலுக்கு பயப்படாதீர்கள்.

Comments

Anonymous said…
கருப்பு வெள்ளைன்னு எந்த கலர்ல கோட் போட்டவங்களையும் நம்ப முடியாது இந்த காலத்துல. Sicko படம் பார்த்தீங்களா? வீட்டுக்கு வீடு வாசப்படி!
செல்வேந்திரன்,

நீங்கள் நட்சத்திரப்பதிவராக தொடர்ந்து ஒருவாரம் எழுத இருப்பதற்கு வாழ்த்துக்கள். நல்ல விழிப்புணர்வூட்டும் பதிவோடு வந்திருக்கிறீர்கள். நன்றி.

இதில் வழக்குகள் காலதாமதத்தைக் கருத்தில்கொண்டு இம்மாதிரி சமரசமுயற்சிகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தாலும் அங்கீகரிக்கப் பட்ட ஒன்றுதான். அதேசமயம் கொஞ்சம் பொறுமையோடு இருந்து இன்னும் கூடுதல் தொகை பெறமுடியுமென்றால் வழக்கு நடத்தியே பெறலாம் நீங்கள் சொல்வது மாதிரி.

நல்ல குறிப்புகள். இதுபோன்ற பயனுள்ள பதிவுகளைத் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!
முதல் பாடமே/பதிவே நன்றாக உள்ளது.

இந்த காலத்துல வக்கீலு டாக்டரு யாரயுமே நம்ப முடிய மாட்டேங்குது.
நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்..
selventhiran said…
ஃப்ரெண்ட்லி ஃபயர், செல்வநாயகி, வெங்கட்ராமன், சினேகிதன் வருகைக்கு நன்றி
இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள். சமீபத்தில்தான் நண்பர் ஒருவரிடம் உங்களைப் பற்றி பேசிக்கொண்ண்டிருந்தேன். வந்திருக்கும் புதியவர்களில் நான் பார்த்தவர்களில் நல்ல சிந்தனை உடையவராக இருக்கிறார் என்று. இன்று நட்சத்திர பதிவராக கண்டபோது மனம் மிகவும் மகிழ்ந்தது. சமூகத்திற்கு பயன்படும் செய்தியோடு துவக்கியிருக்கிறீர்கள். உங்கள் பல்வேறு பரிமாணங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Anonymous said…
This comment has been removed by a blog administrator.
அய்யோ இந்த வக்கீல்கள் எல்லாருமே இப்படித்தானா?

கிர்ர்ர்ர்ர்ர், எனக்கு சில கெட்ட அனுபவங்கள் உண்டு அவர்களுடன். அதுகிடக்கு விடுங்க.

நட்சத்திர வாழ்த்துக்கள். ஜமாய்ங்க.
Sridhar V said…
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

நல்ல பயனுள்ள பதிவு. நிறைய வழக்கறிஞர்கள் வெறும் கட்டப் பஞ்சாயத்துக்காரராகத்தான் இருக்கிறார்கள். அது அவர்களுக்கு எளிதாகவும் இருக்கிறது.
Anonymous said…
Keep d Pace...
ஆரம்பமே அசத்தல் அடிச்சு ஆடுங்க. வாழ்த்துக்கள்
ilavanji said…
வாருமைய்யா ஸ்டாரே!

சில ஜட்டிக்கதைகளைத் தவிர பல குட்டிக்கதைகளை இந்தவாரம் எதிர்பார்க்கிறோம்! :)))

எல்லா வக்கீல்களும் மோசமானவகள் அல்ல! கேசு நடத்துனா அது 10 வருசத்துக்கு இழுத்துக்கிட்டு 20 லச்ச ரூவா செலவுவைக்கறதுக்கு இப்படி ஊடால பேசி ரெண்டுசைடும் சமரசமா போயி சீக்கிரமா முடிச்சுவைக்கிற ஆளுங்களும் இருக்காங்க! என்ன,நீங்க சொன்னாமாதிரி தெரிஞ்சவரா இருந்துட்டா பாதி அலைச்சலும் பிரச்சனையும் கொறையும்.

இன்னமும் வக்கீலுகிட்டயும், டாக்டருகிட்டயும் ஒரு நம்பிக்கையிலதான் போக வேண்டியிருக்கு!
Anonymous said…
நட்சத்திர வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பயன்தரும் தகவல் தோழரே. சிறப்பாக கூறியுள்ளீர்கள். மேலும் தொடருங்கள். நன்றி.
Anonymous said…
நல்ல பதிவு. இது போன்ற மோசடி செய்பவர்கள் கண்டிப்பாக ஒரு நல்ல வக்கீலாக இருக்கு முடியாது.

மக்கள் அடிப்படை சட்டத்தை பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டும், அப்போது தான் இது போன்ற வக்கீல்களிடம் ஏமாறாமல் இருக்க முடியும்.
தருமி said…
நட்சத்திர வார வாழ்த்துக்கள்
பயனுள்ள பாடங்கள் !

நட்சத்திர வணக்கம் !
Jazeela said…
நட்சத்திர வாழ்த்துகள். வந்த கொஞ்ச நாளிலேயே நட்சத்திரமாக மின்னுபவர் நீங்களாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன். நல்ல துவக்கம். முடிவு வரை இப்படி நல்ல செய்திகளை அள்ளி தாருங்கள்.
MSATHIA said…
நட்சத்திர வாழ்த்துக்கள்.
பயனுள்ள கட்டுரை.
இந்த நட்சத்திர பதிவு தங்களுக்கு ஊக்க மருந்து.

ஆனால் இந்த மருந்து சாப்பிட்டதற்காக யாரும் உங்களை கைது செய்ய மாட்டார்கள்

ஆனால் கைது செய்யப்படுவீர்கள் வலைப்பதிவு நண்பர்களின் உள்ளங்களில் ஆகவே சிறப்பாக எழுதி ஜொலிக்க கவாழ்த்துக்கள்..
மங்கை said…
வாழ்த்துக்கள்... நல்ல ஆரம்பம்..
வலைப்பதிவு செய்யத் துவங்கிய சில மாதங்களிலேயே நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள். ஸ்டெல்லா புரூஸ் பற்றிய உங்கள் முதல் பதிவைப் பார்த்ததும் எனக்குத் தெரிந்த நண்பர் செல்வேந்திரன் என்று நினைத்துக்கொண்டு உங்கள் பதிவுக்கு வந்தேன், ஆனால் உங்கள் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்ததும் உங்கள் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு உங்கள் பதிவை கூகுள் ரீடரில் போட்டுவைத்துவிட்டேன் :-) இப்போது என்னவோ உங்களை நீண்டநாட்களாகத் தெரிந்ததுபோல் இருக்கிறது :-)
செல்வேந்திரன்,
உங்களை சின்ன வேலை. 8க்கு அழைக்கிறேன்.
பதிவைப் பார்க்கு மாறு வேண்டுகிறேன்.நன்றி.
Sud Gopal said…
வாங்கய்யா...நட்சத்திரமே...
ஒரு வாரம் சுடர் விட்டு பிரகாசிக்க வாழ்த்துகள்.

வக்கீல்கிட்டயும்,டாக்டர்கிட்டயும் மறைக்கக் கூடாத விஷயம் நம்ம பேங்க் பேலன்ஸ் தான்.
நட்சத்திர வாழ்த்துகள்!
செல்வேந்திரன்! வழக்கு பேசி முடிக்கப்பட்டதே உங்களுக்கு சாதகமான அம்சம். LIC மாதிரியான இன்ஸ்யூரன்ஸ் நிறுவனமாக இருந்தால் நிச்சயமாக வழக்கு இருபது வருடங்களுக்கு குறைவில்லாமல் நடக்கும். என் தந்தையின் நஷ்ட ஈடு வழக்கு 1985 ல் போடப்பட்டு போன ஆண்டு தான் மதுரை ஐகோர்ட் கிளை LIC வழக்கறிஞர் வரவில்லை இதற்க்குமேல் இந்த வழக்கை வைத்திருக்க முடியாது என்று அவர்களாகவே வழக்கை முடித்து விட்டார்கள்.
செல்வேந்திரன்,
நட்சத்திரப் பதிவராகத் தேர்வானமைக்கு வாழ்த்துக்கள். தூள் கெளப்புங்க.. தின்மும் உங்கள் பதிவுகளை படித்து விடுகிறேன். இப்போ இங்க மணி இரவு 11:47.. படிச்சிட்டுத்தான் தூங்கறதுன்னு ஒரு முடிவோடதான் வந்தேன் ..

வக்கீல் அனுபவங்கள் நல்லா எழுதியிருக்கீங்க.. 1 1/2 லட்சமோ 3 லட்சமோ .. விடுங்க.. சம்பாதிச்சுக்கலாம்.. அண்ணார் கால் எப்படியிருக்கு? பூரண் குணமாயிடுச்சா? நடக்க முடிகிறதா?

அன்புடன்,
சீமாச்சு..

பி.கு: இங்க பின்னூட்டம் போட்ட செல்வநாயகி அவர்கள் ஒரு வக்கீல். அவங்க மரத்தடியில் எழுதும் போது சொல்லிக் கேட்டிருக்கிறேன்...
நட்சத்திரத்துக்கு வாழ்த்து(க்)கள்.

யாரைத்தான் நம்புவதோ......... ** நெஞ்சம்னு பாடலாமா?
Anonymous said…
enna selva vaazhthu malaiyil nanaikireerkala - informative aak irunthathu - i never read any one of your articles so far, yet to try -
baskar
வாழ்த்துக்கள் ;)))
சீமாச்சு,

எனக்கும் அங்கு நீங்களும், நானும் உரையாடிய நினைவு இன்னும் மறக்கவில்லை. குழந்தைகளைக் காப்பகத்தில் விடும் உணர்வுகள் பற்றி ஒரு கவிதை(!!!!!) எழுதியபோது அதைப் படித்துவிட்டு உங்களுக்கு வந்த உணர்வுகள் பற்றி ஒப்பிட்டு அதை நினைவுபடுத்தியதாக எழுதியிருந்தீர்கள். நன்றி அப்போதும் சொல்லியிருக்கிறேன். இப்போது இன்னொருமுறை.

உங்கள் பின்னூட்டம் படித்துவிட்டு அதில் எனக்கு நானே ஒரு பொருள் போட்டுப் பார்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தேன். "நாய்கள் ஜாக்கிரதை" என போர்டு இருக்குமிடத்தில் "இதுவும் ஒரு நாய்" என்று சொல்லும்போது பயமாயிருக்குமில்லையா? அதுமாதிரி "வக்கீல்கள் ஜாக்கிரதை" எனும் தலைப்பு இருக்குமிடத்தில் "செல்வநாயகியும் ஒரு வக்கீல்" என்று நீங்கள் சொல்லும்போது அதே பொருளைப் பொருத்திப் பார்த்துக்கொண்டு சிரித்தேன். நீங்கள் நிச்சயம் அப்படியான பொருளில் சொல்லவரவில்லை, ஒரு வக்கீலே ஒத்துக்கொள்ளுமளவு அதில் தொழில்நேர்மைகள் மறைந்து வருகின்றன என்பதைத்தான் சுட்ட வருகிறீர்கள் என அறிவேன்.

உண்மையைச் சொன்னால் மற்ற எல்லாத் தொழில்களிலும் நேர்மையைத் தொலைத்துவரும் காலம்தான் இது. வழக்கறிஞர் துறையிலும் அப்படியே. அங்கும் நேர்மையோடு கட்சிக்காரனுக்கு நடக்கும் வழக்கறிஞர்கள் உண்டு. (இளவஞ்சி சொல்லியிருக்கார் பாருங்க). நாம் அப்படியானவர்களை நாடிச் செல்லவேண்டும். விதிவிலக்கான நேரங்களில் வக்கீல்களைக் கழுத்தறுக்கும் கட்சிக்காரர்களும் உண்டு, கேட்கும் ஆவணங்களைத் தராமல் இருந்துவிட்டு "இந்த ஆளு எங்கேசைத் தோக்கடிச்சிட்டாரு" என்று சொல்லுபவர்கள், இப்படி......அது எங்களுக்கு மட்டுமே தெரிந்த அனுபவம்:))

பொதுவாகத் தன் அனுபவம் மூலம் கற்றுக்கொண்டதை வைத்துக் குறிப்புகள் எழுதியிருக்கிறார் செல்வேந்திரன். அவை எல்லோருக்கும் பயனுள்ளவையும்கூட. எனவே பொதுவாய்ப் பாராட்டினேன். அதுமட்டுமல்ல இதுமாதிரி விழிப்புணர்வுகளை வளர்ந்துவரும் ஒரு புதிய பதிவர் எழுதும்போது ஊக்கப்படுத்தவும் வேண்டுமென்பதால். தலைப்பு கவர்வதற்காக வைத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். "வழக்கறிஞர்களிடம் போகும்போது தெரிந்துகொள்ளவேண்டியவை" என்றும் வைத்திருக்கலாம். போகப்போக இந்தக் கவர்ச்சித்தலைப்பு உத்திகளைத் தவிர்க்கிறவராக செல்வேந்திரன் மாறவும் கூடும். இது அறிவுரை எல்லாம் இல்லை செல்வேந்திரன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து நல்ல பதிவுகளை எழுதுங்கள், வாழ்த்துக்கள் மீண்டும்.
Anonymous said…
நட்சத்திரமானதிற்கு வாழ்த்துக்கள்.
உங்கள் அனுபவ பாடங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்

Popular Posts