ஞானகுருவும் கண்ணுக்குத் தெரியாத கண்களும்

ஜீனியர் விகடன் நடப்பு இதழிலிருந்து இரண்டு அசத்தலான தொடர்கள் ஆரம்பமாகியுள்ளது. ஒன்று எஸ்.கே. முருகனின் 'ஞானகுரு' மற்றொன்று பாரதிதமிழனின் 'கண்ணுக்குத் தெரியாத கண்கள்'. எஸ்.கே.முருகன் பல ஆண்டுகளாக தினகரன், வசந்தம், விகடன் போன்ற ஊடகங்களில் பணியாற்றி வரும் மூத்த பத்திரிக்கையாளர். இவர் வாராவாரம் விகடனில் எழுதி வந்த 'மந்திரச்சொல்' தொடருக்கு வாசகர் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. பின்னாட்களில் மந்திரச்சொல் பிரசுர வெளியீடாகவும் வெளியாகி விற்பனை சாதனை படைத்து வருகிறது. "ஆத்மா, பரமாத்மா, பாவம், புண்ணியம், மறு ஜென்மம் போன்ற சித்தாந்தங்களைக் காட்டி பயமுறுத்தியே அப்பாவிகளைச் சுரண்டும் தப்பான மனிதர்களை தோலூரித்துக்காட்டுவதே தொடரின் நோக்கம்" என்ற முன்னுரையோடு அதிரடியாக ஆரம்பித்திருக்கிறார் எஸ்.கே.

பாரதிதமிழன் ஜூனியர்விகடன் உதவி ஆசிரியர்களுள் ஒருவர். "பெரிய இடத்துக் கள்ளக்காதலோ, பல கோடி ரூபாய் பிஸினஸ் துரோகங்களோ, நம்பிக்கைக்குரிய அதிகாரியே நடத்திவிடும் வங்கிக்கையாடலோ... பாதிக்கப்பட்டவர்கள் அந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அப்படிப்பட்ட இக்கட்டான நிலைமைகளில் அவர்கள் நாடுவது தனியார் டிடெக்டிவ் ஏஜென்சிகளையே. டிடெக்டிவ் ஏஜென்சிகள் கண்ணுக்குத் தெரியாத கண்களாக இருந்து நமக்குத் தெரியாமலே நமக்கு மத்தியில் ஏகப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் வேலைகளை செய்துகொண்டிருக்கின்றன. அவற்றுள் சில முன்னனி ஏஜென்சிகள் ஜூவி வாசகர்களுக்காக தங்கள் அனுபவங்களை பேச வருகின்றன" என்ற முன்னுரையோடு ஆரம்பித்திருக்கும் இத்தொடரின் முதல் பாகமே பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் கல்வியாளர் ஒருவர் பாதை மாறிய பயணத்தோடு ஆரம்பித்திருக்கிறது. இரு தொடர்களுமே சலிக்காத நடையில் விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

Comments

Anonymous said…
பத்திரிக்கையாளருக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகாது.

விரு விருப்பு இல்லை, விறுவிறுப்பு.
selventhiran said…
நன்றி தோழரே எழுதும்போதே ஒரு சந்தேகம் இருந்தது. இதோ மாற்றிக்கொள்கிறேன்.
Jazeela said…
செல்வா, (அப்படி சொல்லலாமா?) இந்த மாதிரி விஷயங்களை உங்க விகடன்குருப் வலைப்பதிவிலேயே போடலாமே? உங்க வலையில் நீங்க எழுதும் கட்டுரை, கதை, கவிதைகள் மட்டும் வரட்டும்ப்பா, தொழில் சார்ந்த பதிவை அங்க படிச்சிக்கிறோம்.
selventhiran said…
அப்படி சொல்லலாமா?// ஜெஸிலா பார்த்தீங்களா... நான் எப்பவோ பின்னூட்டத்துல கேட்டதை மறக்காம வச்சிருந்து கேட்டுட்டீங்க... பரவாயில்லை.. (என்னை மாதிரி இங்கிரிமெண்டுக்கு ஏங்குற ஒருத்தன் லாயல்டியை வேற எப்படித்தான் காட்டுறது..?) இனி கூடுமானவரை தவிர்த்து விடுகிறேன். பதிவர்களுக்கு பயன்படும் வகையில் ஏதேனும் தொழில் வாய்ப்பு (உம்: சோமனூரில் தொழில் வாய்ப்பு) இருந்தால் போடலாம்தானே?! அப்புறம் தங்களை மார்க் போட கூப்பிட்டு இருந்தேனே என்ன ஆச்சு?
வணக்கம் நண்பரே,
ரா.கண்ணனின் ஆர்குட் மூலமாக உங்களைப் பார்த்தேன்.உங்களது ப்ரொபைல் படிக்க மிக சுவாரஸ்யமாக இருந்தது.சூன்யப்பெருவெளியில் துழாவித்துழாவி இங்கே வந்து உங்களை படித்தேன்.மகிழ்ச்சியும் உற்சாகமுமாக இருக்கிறது.நன்றாக எழுதுகிறீர்கள்.குறிப்பாக உங்கள் உற்சாகமும்,சுய எள்ளலும் என்னைக் கவர்கிறது. வாழ்த்துக்கள்.
பாஸ்கர்சக்தி.
Anonymous said…
வணக்கம்.
ரா.கண்ணனின் ஆர்குட்டிலிருந்து சூன்யப்பெருவெளியைத் தடவித்தடவி இங்கே வந்து சேர்ந்தேன். உங்கள் உற்சாகமும், சுய எள்ளலும் என்னை மிகவும் கவர்ந்தது.நன்றாக எழுதுகிறீர்கள்.
அன்பான வாழ்த்துகள்.
பாஸ்கர்சக்தி.
selventhiran said…
நன்றி பாஸ்கர்சக்தி அவர்களே, உங்களைப் போன்றவர்களின் உற்சாகம் என்னை மேன்மேலும் ஊக்கப்படுத்துகிறது
இங்கு பின்னூட்டம் போட்டால் நான் அடுத்த முறை வரும் போது என்னையும் "கண்ணுக்கு தெரியாத கண்களும்" கவனிக்குமா?
:-))