வென்றார் லக்கிலூக்!


நாட்டுமக்களுக்கோர் நற்செய்தி! நமது சமஸ்தானம் நடத்திய போட்டிக்கு உலகெங்கிலுமிருந்து பல்வேறு பொழிப்புரைகள் வந்திருந்தன. நுன்மான்நுழைபுலமிக்க நமது அரசவைப் பண்டிதர்களும், ரிட்டையர்டு தமிழ் குஞ்சுகளும், மதியூக மந்திரிகளும் ஆய்வு செய்ததில், திரு.லக்கிலூக் அவர்களின்
"மேட்டரு இன்னான்னு சுகுரா சொல்லிடு - இல்லாங்காட்டிஅப்பாலிக்கா வேலைக்காவாது" என்ற பதில் சுருக்கமாகவும், எளிதாகவும், உண்மைக்கு மிக நெருக்கத்தில் இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள். எனவே அவரது பின்னூட்டமே பரிசில் பெற தகுதியுடையதாக அறிவிக்கப்படுகிறது. அவரை சமஸ்தானம் வாழ்த்துகிறது.

Comments

நன்றி!!!

சென்னை
என்னை
வளர்த்த
திண்ணை!!!

சென்னை மொழி என்னை என்றுமே கைவிட்டதில்லை. நான் பேசும்போதும் இதே மொழியை தான் பயன்படுத்துகிறேன்.
PRINCENRSAMA said…
வாழ்த்துக்கள் லக்கியாரே!
Anonymous said…
வன்மையாக கண்டிக்கிறோம்

-லக்கிலுக்கார் ரசிகர் மன்றம்
Boston Bala said…
நல்ல போட்டி! ல.லு.க்கு வாழ்த்துகள்
ஆஹா, வாழ்த்துக்கள் லக்கி,
நல்ல சுவாரசியமான போட்டி. நானும் யாழ்ப்பாணத் தமிழில் இக் குறளுக்கு விளக்கம் சொல்ல வேணுமென்றிருந்தேன். சோம்பலால் எழுதவில்லை.

லக்கிக்கு வாழ்த்துக்கள்.
Anonymous said…
'சுகுரா சொல்லுன்னா' வேகமா / சீக்கிரமா சொல்லுன்னு அர்த்தம் வரும்னுல நினச்சேன் - ('சுருக்க' என்பதோட மரூஉ மாதிரி).

'பயனுள்ள சொல்'ன்னு எப்படி அர்த்தம் வருது?
வாழ்த்துக்கள் லக்கி

//"மேட்டரு இன்னான்னு சுகுரா சொல்லிடு - இல்லாங்காட்டிஅப்பாலிக்கா வேலைக்காவாது"//

இதுக்கு என்னா அர்த்தம்னு நான் நினைகிறேன்னா " சொல்ல வந்ததை சீக்கிறம் சொல்லு-இல்லையென்றால் பிறகு உபயோகமில்லை"

ஆமா இது எப்படி அந்தக் குறளோட ஒத்துபோகும்??

ஒன்னும் பிரியலையே...
நண்பர்களே!

"சுகுரு" என்பதை பல பொருள்களுக்கு சென்னையில் பயன்படுத்துகிறோம்.

சுகுரு என்றால் சிக்கனம்

சுகுரு என்றால் பக்கா

சுகுரு என்றால் பர்பெக்ட்

என்று பல பொருள்கள் உண்டு!
வாழ்த்துக்கள் லக்கியாரே!
Anonymous said…
இந்த முடிவை நாங்கல் ஏற்கமாட்டோம்.

தி.மு.க வுக்கு ஆதரவாக தேர்தல் ஆனையம் நடந்து கொள்கிறது.
செல்வா,
நடு நிலைமையான தீர்ப்பு.என்னை நடுவராக போட்டிருந்தாலும் லக்கிக்குத்தான் கொடுத்திருப்பேன். வாழ்த்துக்கள் லக்கி :-)
Anonymous said…
வாழ்த்துக்கள் லக்கிலுக்!

/// "சுகுரு" என்பதை பல பொருள்களுக்கு சென்னையில் பயன்படுத்துகிறோம்.

சுகுரு என்றால் சிக்கனம்

சுகுரு என்றால் பக்கா

சுகுரு என்றால் பர்பெக்ட்

என்று பல பொருள்கள் உண்டு! ///

என்ன பண்றது! நீங்க சொன்னா நாங்க நம்பித்தான் ஆகணும். வேணும்னா, விக்கிபீடியால போட்டுக்கலாம்.
பகீ said…
////என்ன பண்றது! நீங்க சொன்னா நாங்க நம்பித்தான் ஆகணும். வேணும்னா, விக்கிபீடியால போட்டுக்கலாம்.////

ஆமா போட்டுக்கலாம்.

ஊரோடி
http://oorodi.com
Anonymous said…
சுகுருன்னா எங்க பேட்டலே கட் அண் ரீட்டுன்னு அர்த்தம்