ப்ளீஸ் மார்க் போடுங்களேன்...!

நட்சத்திர பதிவராக தேர்வான போதே, ஒரு நாளைக்கு ஒரு பதிவு மட்டுமே எழுதுவது, அலுவலக நேரத்தை வீணடிக்காமல் பதிவிடுவது, அலுவலக கணிணியை இதற்காக உபயோகிக்காமல் இருப்பது, அனைத்து பின்னூட்டங்களுக்கும் பதிலூட்டம் (எனது புதிய கண்டுபிடிப்பு!) போடுவது என சில சங்கல்பங்கள் எடுத்திருந்தேன். முதல் மூன்றையும் கடைசிவரை கடைபிடித்த என்னால் பதிலூட்டமிடுவது மட்டும் இயலாமல் போய்விட்டது. காரணம் கிருமிகள் அல்ல பணிச்சுமை.

என்னை நட்சத்திர பதிவராக தேர்வு செய்த தமிழ்மணத்திற்கும், என் பதிவுகளை அள்ளி அணைத்தவர்களுக்கும், கிள்ளிக்கொடுத்தவர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த பதிவு.

ஆசிப்மீரான், நாமக்கல் சிபி, பாஸ்டன் பாலா, வெங்கட்ராமன், சேதுக்கரசி, ஜெசிலா, வவ்வால், தென்றல், நிலவு நண்பன், இளவஞ்சி, சீமாச்சு, முகவை மைந்தன், தெக்கிகாட்டான், வதிலைமுரளி, நந்தா, வல்லிசிம்ஹன், சதங்கா, வாய்ஸ் ஆன் விங்க்ஸ், எல்.எல்.தாஸீ, இளா, விக்னேஷ், சந்திரவதனா, சுதர்ஸன் கோபால், பிரேம் குமார், காட்டாறு, பெருசு, வெயிலான், லொடுக்கு, முத்துகுமரன், ஜீவி, பாட்டையன், தங்ஸ், துளசி கோபால், சத்யராஜ்குமார், வடூவூர்குமார், வெட்டிப்பயல், சர்வேசன், பிரேம்குமார், தூயா, ராதாராகவன், அனுப்சுந்தரம், எல். கஸ்தூரி, தேவ், டெல்ஃபின், கோபிநாத், அய்யனார், குசும்பன், முத்துலெட்சுமி, சத்தியா, ச. திருமலை, திருச்சி விஜய், பாஸ்கர், வெற்றி, ஃப்ரெண்ட்லி ஃபையர், செல்வநாயகி, சிநேகிதன், முத்துக்குமரன், மோகன் தாஸ், ஸ்ரீதர் வெங்கட், அப்பாவி இந்தியன், தருமி, கோவி.கண்ணன், மங்கை, உலகம் சுற்றும் வாலிபி, பாரி அரசு, அறிவியல் பார்வை, பீ-மார்கன், ரஜினி வெறியன், முகு, வெயிலான் ஆகிய பதிவர்களுக்கும்...

தனிமடலில் வந்த பொன்ஸ் பூர்ணா, ஆர். செல்வேந்திரன், காசி, கோவை செந்தில்குமார், வடக்குவாசல் பெண்ணேஸ்வரன், குடியாத்தம் ராஜா, கந்தசாமி நாகராஜன் ஆகியவர்களுக்கும்...

உற்சாகமூட்டிய அலுவலக சுப்பீரியர்கள் வெங்கட் சார், முருகேஷ் பாபு சார், சரண், தென்பாண்டியன், அவர்களுக்கும்...

பெயர் வெளியிட இயலாத அருமை தோழியர்களுக்கும் (சத்தியமா தோழிகள்தாங்க...!)

அந்தோணி சாமி, அலெக்ஸ், விசாலாட்சி இன்னும் பல பெயர்களில் வந்து பதிவிட இயலாத பல பின்னுட்டங்களையிட்ட அணானி அன்பர்களுக்கும் எனது நன்றியை சொல்லிக்கொள்ளாவிட்டால், உய்வில்லை.

மற்றபடி இந்த நட்சத்திர வாரத்தை எந்த அளவுக்கு நான் பயன்படுத்திக்கொண்டேன், எனது எழுத்துகளுக்கு பதிவுத்தகுதி இருக்கிறதா என்பதை அவரவர் பாணியில் மதிப்பெண் போடுங்களேன்... ப்ளீஸ்...!

மிக்க அன்புடன்
செல்வேந்திரன்.

Comments

நன்றாகவே உபயோகப்படித்தி இருந்தீர்கள். (7/10)
ALIF AHAMED said…
என்றும் மாணவன் நான்
ilavanji said…
ஒரு வாரம் படிக்க நல்லா இருந்துச்சு!

உங்க எழுத்துநடை சுவாரசியமா இருக்கு. இதுபோக ஜட்டிக்கதை அளவுக்கு போகலைன்னாலும் நல்ல ரொமாண்டிக்கா, கில்மாவா, ஒரு தினுசா ஒரு குட்டிக்கதை எதிர்பார்த்தேன்!

அம்புட்டுத்தேன்! இதுல மார்க்கு போடனும்னு எல்லாம் படுத்தப்படாது! :)
Anonymous said…
// எனது எழுத்துகளுக்கு பதிவுத்தகுதி இருக்கிறதா //

ஓ! தாராளமா இருக்குது. ஜனரஞ்சக எழுத்து, வசீகரிக்கும் அழகு, கவரும் எழுத்து நடை,புதிய உத்தியுடனான சிறுகதை,கொள்கைகள் இவை எல்லாத்துக்கும் சேர்த்து - என்னுடைய மார்க் 70. 30 மார்க் போடாதது எதுக்குன்னா? பின்னூட்டத்திற்கு பதிலில்லாமை, மற்றும் படிக்கும் போது கண்ணைச்சுருக்கிக் கொள்ள வைக்கும் உங்கள் வார்ப்புரு.

இருந்தாலும் பல்வேறு வகைகளிலும், சுவைகளிலும் பதிவுகள் கொடுத்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்!
நல்ல படைப்புகளுக்கு எல்லாம் மதிப்பெண்கள் குடுக்கனுமா என்ன? அதெல்லாம் மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்டதுங்கோ..
மதிப்பெண்ணா? கவலையே படாதீங்க.. நீ(ங்க) இப்ப பாஸ் பாஸ் :)
Sud Gopal said…
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றமைக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும்...
செல்வேந்திரன்,

என்னது சின்னப்புள்ள தனமா மார்க்கெல்லாம் கேட்டுக்கிட்டு :-))

பெரும்பாலும் நட்சத்திர பதிவெல்லம் படிப்பது இல்லை, அது எல்லாம் மூளைக்காரங்க சமாச்சாரம்னு ஸ்கிப் பண்ணிடுவேன்.ப.இ.பா படிச்சேன் அப்படியே இதுவும் பட்டுச்சு.

தன்னடக்கத்தோடு சொல்லுறேன் என்னளவுக்கு பிரமாதாமா??!! எழுதலைனாலும் நல்லா எழுதுறிங்க:-))
Anonymous said…
செல்வேந்திரன் 8/10.
இளவஞ்சி 9.5/10.
டுபுக்கு 9.5/10.
குரல்வலை 8/10.
நான் பேச நினைப்பதெல்லாம் 8.5/10.
புத்தன் ஏசு காந்தி நான் 8/10
தருமி 8.5/10
Anonymous said…
கலக்கிட்டீங்க தலை
selventhiran said…
வதிலை முரளி - நன்றி
மின்னல் - உங்க தன்னடக்கத்தில் மெய் சிலிர்க்கிறேன்
இளவஞ்சி சார் உங்களுக்காகவே எண்டகதா ரேஞ்சில் ஒரு சூப்பர் ஸ்டோரி வச்சிருந்தேன். ஜட்டிக்கதைக்கே என் கிட்னிய எடுக்கனும்னு அவனவன் அலைஞ்சதால விட்டுட்டேன். பதிவை விட்டு மறைந்தாலும் உங்கள் மனதை விட்டு மறையாத ஜட்டிக்கதை வாழ்க!
வெயிலான் - பொன்ஸ் பூர்ணா உதவியுடன் அக்குறைகளை உடனே களைகிறேன்.
இளா, சேதுக்கரசி, வடூவுரார் உங்களுக்கு பெரிய மனசு நன்றி.
டெல்பின் அதை deepless என்று அர்த்தம் கொள்ள வேண்டுமா?
துளசி சார் என்னை மாதிரி சின்ன பையனுக்கு புரியிற மாதிரி, குட், வி.குட், ஸ்டார் குட் போடமாட்டிங்களா?
வவ்வால் - உங்களுக்கு தலைகீழா நின்னுகிட்டே ஒரு நன்றி!
Anonymous said…
நல்லா எழுதறீங்க. நிறைய எழுதுங்க. நட்சத்திர வாரத்திலதான் உங்க பதிவுகளை கவனித்தேன்.
வாழ்த்துக்கள்
உங்க எல்லா பதிவுகளும் சூப்பர் தான்...உங்களோட எழுத்து நடை அருமையாக இருக்கு....ரஜினியும் அப்பாவும் சிறுகதை அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்கு ;))))

இந்த வாரம் கலக்கல் வாரம் ;)))
Chandravathanaa said…
நன்றாகவே இருந்தது.
பின்னூட்டம் போடலன்னாலும், வாசிச்சிட்டுத்தான் இருந்தோம் :)

நல்ல சுவாரசியம். ஆனா நான் ஓஹோன்னு எதிர்பார்த்தது ஒங்க தப்பில்லையே.

சும்மா சொல்லக்கூடாது ஆளு சூப்பரா இருக்கீங்க ;-)
Anonymous said…
Hi Selva,
You are looking very handsome.... have you tried for film........?!!!
செல்வேந்திரன் நான் மார்க் போட வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்.

ஏன்னா உங்க கிட்ட தான் எப்படி பதிவு எழுத கத்துக்கலாம்னு நினைச்சேன்.

சிறப்பாக செய்தீர்கள்
தொடருங்கள் . . . . . . .
மார்க்கெல்லாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை தலைவா.. :) சும்மாவா எழுதத் தொடங்கிய மூன்றே மாதத்தில் தமிழ்மணத்தில் நட்சத்திரமாக்கி இருக்காங்க?!

வெயில்ல தான் கண்ணைச் சுருக்கிப் பார்ப்போம்; வெயிலானுக்கே சுருக்கிப் பார்க்க வைக்கும் இந்த வார்ப்புருவை மாத்தினா நல்லாருக்கும் தான் ;)
selventhiran said…
பூர்ணா நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலைன்னேன். நாளைக்கே மாத்திபுடமாம்னேன்
கலக்கியிருக்கீங்க செல்வேந்திரன் !! நான் ஒரு 10 நாளா இந்தப்பக்கம் வராததால உடனுக்குடன் கருத்துச்சொல்ல‌த் தவறிவிட்டேன்
selventhiran said…
வருகைக்கு நன்றி கதிரவன்
Anonymous said…
உங்க நட்சத்திர வாரம் நிஜமாவே மின்னியது..
என் நண்பர்களும் இதை குறிப்பிட்டிருந்தார்கள்
Anonymous said…
YOU ARE MY DREAM BOY

A GOOD GIRL
selventhiran said…
YOU ARE MY DREAM BOY

A GOOD GIRL

ஆஹா இந்த கொலவெறி தாக்குதலை நடத்துனது யாருன்னு எனக்கு இப்ப தெரிஞ்சாகனும்.... இல்லன்னா ரூம் போட்டு அழுவேன்...

Popular Posts