ஐ வில் டூ இட் அகெய்ன்

தன் தேசம் கண் முன்னே சூறையாடப்படுவதைக் காணப்பொறுக்காத ஒரு இருபத்தொன்பது வயது இளைஞனின் எதிர்வினையாகத்தான் புஷ்ஷின் மீது ஷூ ஏறியப்பட்ட சம்பவத்தைக் கருதுகிறேன். வரலாறு தன்னை மாவீரனென்று பதிவு செய்யும் என்றோ, ஓரே நாளில் உலகப்புகழ் அடைந்துவிடலாம் என்றோ நிச்சயம் அவர் இதைச் செய்திருக்க மாட்டார்.

இச்சம்பவத்திற்குப் பிறகு அல்-ஜெய்தி நிர்வாணப்படுத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவரது கரங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. அவரது வலது காது சிகரெட் நெருப்பினால் பொசுக்கப்பட்டிருக்கிறது. பற்கள் நொறுக்கப்பட்டிருக்கிறது. வெற்றுத் தரையில் படுத்திருக்கும் அவர் மீது குளிர்ந்த நீர் கொட்டப்படுகிறது. இதெல்லாம் சிறையில் அவரைச் சந்தித்துவிட்டு வந்த அவரது சகோதரர் ஊடகத்திற்குச் சொன்னவை. மேலும் இவ்வழக்கில் அல்-ஜெய்திகு ஏழு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்றும் தெரியவருகிறது.

நடந்து சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும், ஒரு தீவிரவாதியின் தூண்டுதலில்தான் தாம் அப்படிச் செய்ததாகவும் அல்-ஜெய்தி கடிதம் எழுதி இருப்பதாக 'யுனைட்டட் ஸ்டேட் ஆஃப் ஈராக் அரசாங்கம்' தெரிவித்திருக்கிறது. ஆனால், சிறைக்கு வந்த சகோதரரிடம் உறுதியாக அதை மறுத்த அல்-ஜெய்தி , இந்த உலகத்திற்கு ஒரு செய்தியும் சொல்லி அனுப்பி இருக்கிறார். அது "மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் 'ஐ வில் டூ இட் அகெய்ன்' "

இந்தச் செய்தியைப் படித்ததும்,

வீடு இல்லை
பணம் இல்லை
பால் இல்லை
தேன் இல்லை
ஆனால்...
இந்த நிலம் எங்களுடையது
கடலோடிப் போங்கள்
இந்த நிலம் எங்களுடையது
- என்ற பெஞ்சமின் ஸஃபானியாவின் கவிதை (சுதந்திரம்) நினைவுக்கு வந்தது.

தன் காலணி நாடு ஒன்றிலிருந்து புதிய காலணிகளோடு நாடு திரும்பிய புஷ் 'ஈராக்கியர்கள் ஷூ அணிய தடை' என்று இன்னும் அறிவிக்காமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. ஒருவேளை ஓபாமா சொல்வார் என்று விட்டிருப்பாரோ?!

Comments

King... said…
லேபிள் அதகளம்...:)
இவையெல்லாம் நடக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யமே!

இப்போது ஈராக்கை ஆட்சி செய்வது புஷ்சின் கை பொம்மை தானே!
வல்லவனுக்கு செருப்பும் ஆயுதம்.
சாரி, வல்லவனுக்கு ஷூவும் ஆயுதம்
selventhiran said…
நன்றி கிங்...

வால்பையன், ஓபாமாவும் புஷ்ஷூக்கு அண்ணன் மாதிரிதான் பேசுகிறார்.

வெங்கட்ராமன் ரொம்ப நாளாச்சி... பிஸியா?!
Anbu said…
அந்த புஷ் நாயை கொல்லாம விட்ருக்ககூடாது. பல லட்சம் பேர கொன்ன ஒரு பெரிய கொலைக்காரன். விலைவாசி ஏறதுக்கு முக்கிய காரணகர்த்தா. பல பேரோட சாபமும் வயிற்றெரிச்சலும் அந்த நாயை நிம்மதியா வாழவிடாது.

--
வேண்டாவெறுப்புடன்,
அன்பு
selventhiran said…
அன்பு, தேவை இல்லாமல் நாயை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?!

Popular Posts