உதாசீனன்
மேற்கண்ட படத்திற்குக் கீழே...
* செல்வா,
நீயொரு பொய்யன்
பித்தலாட்டம் உனது மொழி
அன்பை சுவீகரிக்கும்
அருகதையற்ற உதாசீண புருஷன்
உன்னைப்போலவே
மிகுந்த போலியானவை
உனது சமூக அக்கறைகள்
எவரும் அறியாதவை
உனது குரூரங்கள்
ஆனாலும்
உன்னைக் காதலிக்கிறேன்.
ஏனெனில்
நான் மட்டுமே அறிவேன்
நீ எத்தனை நல்ல 'காதலன்' என்று...
தீராத முத்தங்களுடன்,
கேண்டி
என்று எழுதி அனுப்பி இருந்தாள் கேண்டி. அவள் ஒரு திமிர் பிடித்த பெண் என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்?!
***
ஊரில் நாங்கள் குடியிருந்த வீடு ஊர்க்கோவிலுக்குச் சொந்தமானது. கோவிலை ஓட்டிய அந்த வீட்டின் முற்றத்தில் வில்வமரம் இருக்கிறது. வில்வங்காய்கள் விழுந்து ஓடுகள் தினசரி உடைந்து கொண்டிருக்கும். வில்வமரம் புனிதமாகக் கருதப்படுவதால் அதை வெட்ட எவரும் சம்மதிப்பதில்லை. மழைக்காலங்களில் வீட்டில் ஒண்ட இடம் இல்லாமல் ஓழுகும். நள்ளிரவு தூக்கத்தில் 'சுர்ரென்று' வலியெடுக்கும். திடுக்கிட்டு முழித்தால் போர்வைக்குள் 'முசுக்கட்டாண்' பூச்சிகள் ஊரும். விதம் விதமான பூச்சிகளின் கடிக்கு ஆளாகி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஒன்றும் தெரியாது. உழைத்த களைப்பில் அடுத்த நிமிடமே உறங்கிப் போய்விடுவேன். இப்போதோ ஒரு கொசு கடித்தால் கூட ஒரு அங்குல பரப்பளவிற்கு சிறிய தடிப்பு ஏற்பட்டு அரை மணி நேரம் கழித்து மறைகிறது. ஏதுவும் புதுவிதமான நோயாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது.
***
பரிசல் வீட்டிற்குள் நுழைந்தால் எவரையும் பொறாமைப்பட வைக்கும் ஒரு புத்தக அலமாரி உங்களை வரவேற்கும். சோபாவில், டீப்பாயில், சாப்பாட்டு மேஜையில், கணிணியில், படுக்கையில் என புத்தகங்களால் நிறைந்திருக்கிறது அவரது வீடு. பொறாமையாய் இருக்கிறது. எனக்கு 'கோணல் பக்கங்களை' பரிசளித்தார்.
"பரிசலில் பதிவுகள் ஜனரஞ்சகமாய் இருக்கிறது. எல்லாப் பதிவர்களும் வாசிப்பாளர் குறித்த அக்கறையின்றி தங்களது சொந்த அனுபவங்களை எழுதிக் குவித்துக்கொண்டிருக்க பரிசல் ஒரு வெகுஜனப்பத்திரிகைப் போல தனது வலைதளத்தை நடத்துகிறார்." என்கிறாள் கேண்டி. அது உண்மைதான். அவரது வலைதளத்தில் என்னைக் குறிப்பிட்டு எழுதிய பின் நாளொன்றுக்கு சுமார் அறுநூறு பேர் வருகை தருகிறார்கள் என் வலைப்பூவிற்கு. பரிசல் பிராண்ட் ஆகிவிட்டார்.
***
குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்தால் என் இதயத்தில் ரத்தம் வடிகிறது. என் வாழ்நாள் முழுவதையும் குழந்தைத் தொழிலாளர்களுக்காகச் செலவு செய்ய தயாராக இருக்கிறேன். நானும் கேண்டியும் மாலைப் பொழுதைக் கழிக்கும் வ.ஊ.சி மைதானத்தைச் சுற்றி இருக்கும் பேல்பூரி கடைகளில் பால் மணம் மாறாத பாலகர்கள் பல நூறு பேர் இருக்கிறார்கள். அவர்களை பள்ளிக்கு அனுப்புவது இயலாத காரியம் என்பது அவர்களது குடும்பச் சூழலைக் கேட்டறிந்து புரிந்துகொண்டோம். குறைந்தபட்ச கல்வியும், உலக அறிவும் அவர்கள் பெற எங்களது மாலை வேளையை பயன்படுத்த இந்தக் காதலர் தினத்தில் சங்கல்பம் கொண்டிருக்கிறோம்.
***
நீண்ட இடைவேளைக்குப் பின் அடியேனின் கவிதைகள் நடப்பு இதழ் (காதலர் தின சிறப்பிதழ்) விகடனில் இடம்பெற்றுள்ளது. முடியலத்துவ ரசிகர்களுக்கான வழக்கமான 'குசும்புச் சுவை' உண்டு. இந்த நேரத்தில் கவிமடத்தையும் அதன் அராஜக தலைவனையும் நன்றியோடு நினைவு கொள்கிறேன்.
***
காதலர் தின சிறப்பு முடியலத்துவம்
*எங்கெல்லாம்
காதல் இருக்கிறதோ
அங்கெல்லாம்
கவிதையும் இருக்கிறது
யாதொரு பயனுமின்றி...
* காதலெனும்
பெருநோயின்
ஆரம்ப அறிகுறி
கவிதை
* நான் உன்னைக் காதலிக்கிறேன்
நானும் உன்னைக் காதலிக்கிறேன்
நான் உன்னையும் காதலிக்கிறேன்
நான் உன்னையே காதலிக்கிறேன்
முடியல.. விட்ரு...
Comments
*எங்கெல்லாம்
காதல் இருக்கிறதோ
அங்கெல்லாம்
கவிதையும் இருக்கிறது
யாதொரு பயனுமின்றி...
/
காதலைப்போலவே!!
காதலெனும்
பெருநோயின்
ஆரம்ப அறிகுறி
கவிதை
/
prevention is better than struggle எவ்ளோ நாளைக்குதான் better than cure அப்படின்னு சொல்றது.
(பி.கு : அனுபவமல்ல)
தோழமையுடன்
ஜீவா
உமா அவர்களிடம் பரிசலுக்கு கண்ணேறு கழிக்கச் சொல்லவேண்டும்
:-)
அப்புறம்.. நான் குறுஞ்செய்தியில் அனுப்பிய விஷயத்தை ‘உதாசீனப்’படுத்தாதீர்கள்!
இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்திருக்கிறேன்... பரிசல் பக்க்ங்கள் போவதால்தான் அதுவும் தெரிந்தது.
நுட்பமான விஷயங்களை மிக லாவகமான மொழியில் சொல்கிறீர்கள். படிக்கும் போதே நெருக்கமாக உணர முடிந்தது. எல்லாவற்றையும் ரசித்தேன்...
இருந்தாலும் ஊரில் வீட்டில் படுத்து இருந்ததையும், இப்போது கொசுக்கடி குறித்து எழுதியதையும் ரொம்பவே ரசித்தேன்.
ஆனால் உங்களுக்கு கோணல் பக்கங்கள் கொடுத்து கஷ்டபடுத்தியிருக்க வேண்டாம். :))))
(அப்புறம்.. உதாசீ'ன'ன் என்று நினைக்கிறேன்)
நானும் உன்னைக் காதலிக்கிறேன்
நான் உன்னையும் காதலிக்கிறேன்
நான் உன்னையே காதலிக்கிறேன்
முடியல.. விட்ரு...//
very nice..
ஆம் நகரமயமாகுதல் என்ற நோய் தாக்குகிறது
அவருக்கு எது ஆவரதில்லையோ!
அதை உடனே தூக்கி கொடுத்துடுவார்!
ரொம்ப நல்லவர்!
என் உதவி எதாவது தேவைப்படுமா?
புத்தகம் வாங்க, அப்படி எதாவது!
அழைகிறேன்
அழைகிறேன்
அழைகிறேன்
(ழ தப்பா திருத்தவும்)
எதாவது இலவசம் போட்டுடாங்களான்னு தெரியல, ஒரு கடையிலேயும் புத்தகத்த காணோம்
காதல் இருக்கிறதோ
அங்கெல்லாம்
கவிதையும் இருக்கிறது
யாதொரு பயனுமின்றி...//
காதைப் போலவே!....
பெருநோயின்
ஆரம்ப அறிகுறி
கவிதை//
முற்றிய நிலை
கணவன் பதவி!...
எனக்கும் பொறாமையாய் தான் இருந்தது. இப்போது பரிசலிடமிருந்து ஒவ்வொரு புத்தகமாய் சுட்டு கொண்டு வந்து என் வீட்டு அலமாரியை நிரப்புகிறேன் ;)
நச் ..
உங்கள் தொலைபேசி என்னோ .. ஈமெயில் முகவரியோ தர முடியுமா ?? என்னுடைய ஈமெயில் முகவரி ..
friends.sk@gmail.com
I've started reading your blog after Parisal's introduction. You have amazing sense of humor. Keep it up
சிவா, ஜீவா, பரிசல், பாலராஜன்கீதா, கார்க்கி, மாதவராஜ், வெயிலான், ஈரவெங்காயம், வால்பையன், தாமிரா, தேனியார், எஸ்கே, ஐகேனவன்யூ, வருகைக்கு நன்றி.
ங்கொய்யால.. உம்ம வீட்டுக்கு வந்து வெச்சுக்கறேன்!
//எனக்கு 'கோணல் பக்கங்களை' பரிசளித்தார். //
அவருக்கு எது ஆவரதில்லையோ!
அதை உடனே தூக்கி கொடுத்துடுவார்!
ரொம்ப நல்லவர்!//
அய்யகோ நண்பா.. கோணல் பக்கங்கள் என்னிடம் ஒரு பிரதி இருக்க, நர்சிம் எனக்கு மற்றொன்று அனுப்பினார். ஆகவே பகிர்ந்து கொண்டேன்!
கோணல் பக்கங்கள் நல்லதொரு புத்தகம்தான்!
count me in for any sort of help
i am also seeing your blog for the first time
r radhakrishnan
அட அவர ஏனுங்க கெளப்பிவிட்டீங்க.
[ஒற்றை இலக்கப் பின்னூட்டங்கள் மாறி 24(+1) பின்னூட்டங்கள் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது]
பை தி வே கேண்டி அம்மாவையும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கச் சொல்லுங்க. நீங்க அவங்களப் பத்தி சொல்றதும் அவங்க சொன்னதா சொல்றதையும் தான் படிக்க முடியுது. நெஜமா அவங்களா என்ன சொல்றாங்கன்றது தெரியறதில்லை.
பை தி வே கேண்டி அம்மாவையும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கச் சொல்லுங்க.
எல்லா பதிவிலயும் தேடிப்பார்துட்டேன்.
கேண்டி அம்மாவை பற்றி எந்த குறிப்பும் இல்லை.
பை தி வே கேண்டி அம்மாவையும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கச் சொல்லுங்க.
///
விஜய்கோபால்சாமி: கும்க்கி, ஏன்ய்யா இப்படி பிரச்சன பண்றீங்க...
கும்க்கி: ஆகுவோம்ல, பிரச்சன ஆக்குவோம்ல...
விஜய்கோபால்சாமி: ஆக்கி....
கும்க்கி: ஆக்கித்தானே சாப்பிடனும்....
விஜய்கோபால்சாமி: சார், அவரா நீங்க.... தெரியாம பேசிட்டேன்...