கெட்ட புத்தி

இருபத்தெட்டு எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமையாக அறிவித்திருக்கிற செய்தியைக் கண்டு துணுக்குற்றேன். காரணம் கண்ணதாசன், சுந்தரராமசாமி போன்ற நட்சத்திர எழுத்தாளர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்ததே. மேற்படி எழுத்தாளர்களின் வாரிசுகள் தொடர்ந்து அவர்களது புத்தகங்களைப் பதிப்பித்து வரும் வேளையில் எப்படி இதற்குச் சம்மதித்தார்கள் என்ற பெரும்கேள்வியோடு ஒரு முதுபெரும் பதிப்பாளரைத் தொடர்பு கொண்டேன். "சென்னையில் காந்தி கண்ணதாசன் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார். தமிழக அரசு எழுத்தாளர்களின் குடும்பத்தாரிடமிருந்து முறையான அனுமதியைப் பெறவில்லை எனக் கேள்வி..." என்றார் அவர்.

இதற்கு முன்பு அகிலனின் படைப்புகளை நாட்டுடைமையாக அறிவித்தது தமிழக அரசு. அகிலனின் மகன் கடுமையாக எதிர்த்ததும் அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இம்முறையும் அப்படி நிகழ்ந்து விடுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன. தமிழ் வளர்ச்சித் துறை...?! ப்ச்...

***

இந்த இரண்டாவது பாரா - நீக்கப்பட்டது.

***
முடியலத்துவம்

யாருக்குத்
தெரியும்
நீரோ மன்னன்
வாசித்தது
அம்ருதவர்ஷிணியோ
என்னவோ?!


அர்ஜூனா
மரம் தெரிகிறதா?
இல்லை
கிளை தெரிகிறதா?
இல்லை
இலை தெரிகிறதா?
இல்லை
இது காட்ராக்ட்தான்
அட்மிட் ஆயிடுங்க...

Comments

SK said…
மீ த பர்ஸ்ட்
ஆமா செல்வா உங்களுக்கு ரொம்ப "கெட்ட" புத்தி தான்
இல்லாட்டி இப்படி பண்ணுவீங்களா?
அப்புறம் ஒரு விஷயம் என்னக்கு அந்த எதையும் கிழி.கிழியென்று கிழிக்கும் 'கலாச்சாரக் காவல எழுத்தாளன்' யார் என்று தெரிந்து விட்டது
நண்பா!

உங்களுக்கு இவ்வளவு நல்ல புத்தியா!
It is not good to be too good. அதனால்தான் கெட்ட புத்தில் லிஸ்டில் இருபிபீர்களாக்கும்.


ஆனந்த விகடன் கவிதைகள் படித்தேன். சுமார்தான்.
Kumky said…
இருங்க முதல்ல ஒரு வருகை பதிந்துகறேன்..
Kumky said…
உண்மையிலேயே உங்களுக்கு கெட்ட புத்திதான்....தோழியின் விருப்பென்னவோ..?
Kumky said…
முடியலத்துவம் அருமை...
நீரோ பற்றி இப்படிகூட யோசிக்க முடியுமா என ஆச்சரியமாக இருக்கின்றது.
Anonymous said…
செல்வா,
நாட்டுடமையாக்கப் பட்ட தகவல் படித்ததும் நானும் இதியே உணர்ந்தேன். காலச்சுவடு ஏற்கனவே நூலகத் தடையால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இது எரியும் நெருப்பில் எண்ணெய்?

ரெம்பப் பாமரத் தனமா இருக்கீங்க செல்வா.


//இது காட்ராக்ட்தான்
அட்மிட் ஆயிடுங்க...//

ஹா ஹா
நண்பரே!
பெரியாரின் எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டு விட்டனவா?

உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன்.
யாருக்குத்
தெரியும்
நீரோ மன்னன்
வாசித்தது
அம்ருதவர்ஷிணியோ
என்னவோ?!..//

இந்த விசயம் ”அம்ருதவர்ஷிணி அம்மா”(சக ப்ளாக்கருங்கோ)வுக்கு தெரியுமா?
தோழி சம்பந்தப்பட்ட நிகழ்வைச் சொல்லிக் காட்டியிருக்க வேண்டாமே நண்பா!!!
அப்புறம்..

25வது ஃபாலோயர் பெற்றதுக்கு வாழ்த்துகள்! அதென்ன துப்பாக்கி 25வதா வந்திருக்கு பாருங்க!!! :-)))))
முடியலத்துவம்.. முடியல..

ஸ்லீவ்லெஸ் புஜங்கள்.. படிக்கும்போதே சிலிர்க்குது.. பாவம் மப்பில் என்ன செய்வார்கள்? அங்கே போய் அவ்ளோ நேரம் அப்படி ஏற்றியதும் அவரின் தவறுதானே? இருவரின் மீதும் தவறில்லை. அங்கே தெளிவாக இருந்தது உங்களின் தவறு :))))
selventhiran said…
நாட்டுடமை தொடர்பான அருமையான பதிவின் சுட்டி இது. http://pitchaipathiram.blogspot.com/2009/02/blog-post_18.html என்னை விட கூடுதல் தகவல்களுடன் எழுதியுள்ளார்.
selventhiran said…
கீர்த்தி, உங்களுக்கு புலனாய்வுப் பிரிவில் வேலை கிடைக்கலாம்.

மாதவராஜ், தங்களது வெளிப்படையான விமர்சனத்திற்கு நன்றி.

ஆஹா, என்னுயிர்த்தோழன் கும்க்கீ வந்துவிட்டார். இனி கவலை இல்லை. அடிச்சு ஆட வேண்டியதுதான்...

வடகரை அண்ணாச்சி, புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொறுப்பு உங்களுக்குத்தான்....

வால் பையன், அது வீரமணியின் பாட்டன் வீட்டுச் சொத்து என்றல்லவா சொன்னார்கள்?!

பரிசல், போட்டிருக்க வேண்டாம்தான். ஆனா 'நானெல்லாம் ஒரு சல்லிப்பய'ங்கறத எப்படி நிரூபிக்கறது. அது என்னவோ துப்பாக்கிகள்... அதுவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் நம்மள தொடர்ந்து துரத்துது பார்த்தீங்களா...?!

கார்க்கி, உங்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் போடலாம்னு இருக்கேன்...
SK said…
// எனக்கு கெட்ட புத்திதானே?! //

சத்தியமா கெட்ட புத்தி தாண்ணே :) :)
முடியலத்துவம் சூப்பர்!
'கலாச்சாரக் காவல எழுத்தாளன்' பற்றி அறியும் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லைங்கோ...:)
Thamira said…
அவர்களிடமிருந்து மலைக்கோட்டை விஷால் அளவிற்குப் போராடி தோழியை//

ரசித்தேன்..
/வால்பையன் said...

யாருக்குத்
தெரியும்
நீரோ மன்னன்
வாசித்தது
அம்ருதவர்ஷிணியோ
என்னவோ?!..//

இந்த விசயம் ”அம்ருதவர்ஷிணி அம்மா”(சக ப்ளாக்கருங்கோ)வுக்கு தெரியுமா?/

வாலு எங்க போனாலும் பத்த வைக்குறீங்களே...:)
/வால்பையன் said...

நண்பரே!
பெரியாரின் எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டு விட்டனவா?

உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன்./

'உண்மை'யில் கேளுங்க சொல்லுவாங்க...:)
/வடகரை வேலன் said...

செல்வா,
நாட்டுடமையாக்கப் பட்ட தகவல் படித்ததும் நானும் இதியே உணர்ந்தேன். காலச்சுவடு ஏற்கனவே நூலகத் தடையால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இது எரியும் நெருப்பில் எண்ணெய்?

ரெம்பப் பாமரத் தனமா இருக்கீங்க செல்வா./

அட இந்த பின்னூட்டத்தில் பதில் இருக்கு...:)
முடியலத்துவம்...
ம்ஹூம். முடியல..(ரசிச்சேன்)
Anonymous said…
செல்வா,
கெட்ட புத்தி.......சினிமா போலவே இருக்குங்க !!!
நீரோ பற்றிய கவிதை அருமை.

சம்பந்தப்பட்ட வாரிசுகளின் அனுமதியில்லாமல் அறிவித்தது பெரிய தவறு.

அந்த எழுத்தாளர் யார் என்று ஒரளவு அவதானிக்கமுடிகிறது. ஆனா நீங்க ?
ஜீவா said…
குடும்பத்தினரின் அனுமதியை பெற்று அதன் பிறகு சட்டசபையின் ஒப்புதலுக்கு வைத்தால் என்ன
தமிழ் எழுத்தாளர்களில் வெகு சிலரே கோடிஸ்வரர்கள் !!! ஏனைய எழுத்தாளர்களின் நிதி நிலைமை மெச்சும் படி இல்லை.
இப்படி இருக்கும் போது ஒரு எழுத்தாளரின் குடும்பத்தினரிடம் வந்து பணம் தருகிறேன் (அதற்கு அனுமதி தாருங்கள்) என்று கூறிவிட்டு ஏதாவது காரணத்தால் அந்த வருடமோ அல்லது அதன் பின்னரோ நிதி ஒதுக்கீடு இல்லையென்றால் அந்த குடும்பத்தினரின் மனம் எவ்வளவு புண்படும் என்று யோசித்தீர்களா
அதனால் தான் நிதி ஓதுக்கீடு முடிந்த பின்னர் அனுமதி கேட்கிறார்கள். குடும்பத்தினர் அனுமதி அளித்தால் 100 சதம் அவர்களுக்கு பணம் தரலாம் என்ற உத்திரவாதம் இருக்கிறதல்லவா
உங்களுக்கு அடுத்த மாதம் சிறிது பணம் வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வருவது உறுதியில்லை. உங்கள் மகனோ மகளோ ஒரு பொருள் கேட்கிறார்கள்.
நீங்கள் என்ன செய்வீர்கள்


1. பணம் வந்த பின்னர் பணத்துடன் மகனை / மகளை கடைக்கு அழைத்து செல்வீர்களா

அல்லது

2. பணம் வருவது உறுதியில்லை என்று தெரிந்தும் மகனை கடைக்கு அழைத்து சென்று காட்டி தேர்ந்தெடுக்க சொல்வீர்களா
ஜீவா said…
http://www.payanangal.in/2009/02/blog-post_18.html
ஜீவா said…
தோழி சம்பந்தப்பட்ட நிகழ்வைச் சொல்லிக் காட்டியிருக்க வேண்டாமே நண்பா!!!
அப்புறம்.. /////


புஜம் தடவியவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ??
selventhiran said…
வாங்க எஸ்.கே, நிஜமா நல்லவன், தாமிரா, கவிஞர் முத்துவேல், துயா, மண்குதிரை வருகைக்கு நன்றி.

ஜீவா, யோசித்துப்பார்த்தால் நீங்கள் சொல்வதில் இருக்கும் 'அறம்' புரிகிறது. எனவே இரண்டாவது பாராவை எடுத்துவிட்டேன்.
ஜீவா said…
ஜீவா, யோசித்துப்பார்த்தால் நீங்கள் சொல்வதில் இருக்கும் 'அறம்' புரிகிறது. எனவே இரண்டாவது பாராவை எடுத்துவிட்டேன்.///

நன்றிகள் ,தவறை ஒப்புக்கொள்ளும் மனதிற்கு.

Popular Posts