தோழியரே...

பிரதீபா திருக்குளத்தரசன், அனோஜா ரத்தினவேல் என்று மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு தோழிகள் எனக்கு 'பேனா நண்பர்களாக' இருந்தனர். பிரதீபா திருச்சியை பூர்விகமாகக் கொண்ட தமிழ்க்குடும்பத்துப் பெண். பிரதீபாவின் தந்தை இலங்கை அரசாங்கத்தில் கல்வித்துறையில் உயர் பதவி வகித்து வந்தார். ஏர்மெயில் ஸ்டாம்பு வாங்க இடம் கொடுக்காத வறுமையிலும் பிரம்மப் பிரயத்தனங்களோடு அவர்களுக்குக் கடிதம் எழுதுவேன். ஒவ்வொரு கடிதங்களும் சுமார் பத்து முதல் பதினைந்து பக்கங்கள் வரை. பதில் மடல்கள் இருபது பக்கத்திற்குக் குறையாமல் வரும். இருவருக்கும் தேர்வு மொழிப் பாடமான தமிழ் மீது தனியாத ஆர்வம் இருந்தது.

கொடிய பணப் பஞ்சத்தில் துயர்மிகு வரிகளோடு இறுதிக்கடிதம் ஒன்று எழுதினேன் "கடல் கடந்து பேனா நட்பு வைத்துக்கொள்ளும் சலூகையை வாழ்க்கை எனக்கு வழங்கவில்லையென". அத்தோடு நின்று போனது அவர்களுடனான நட்பு.

அன்றாடக் கவலைகள் ஒருவழியாக ஓய்ந்துவிட்ட என் இன்றைய நிலையில் பழைய நட்புகளின் வேர்களைத் தேடி வருகிறேன். பிரதீபா குறித்து யாதொரு தகவலும் இல்லை. அனோஜா ரத்னவேல் (Anoja Ratnavel) 'ஃபேஸ் புக்'ல் இருப்பதைக் கண்டுகொண்டேன். என் சொற்ப கணிணி அறிவில் ஃபேஸ் புக்கில் அவளைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. என்னுடைய இணைய நண்பர்களே யாராவது என் தேடலை அவளுக்குத் தெரியப்படுத்துங்களேன் ப்ளீஸ்....

***

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு லைசென்ஸ் தேவையில்லை. ரிஜிஸ்ட்ரேஷன் எண்களும் தேவையில்லை. ஓட்டுவதும் சுலபம். இதுபோன்ற காரணங்களுக்காக இதன் பயன்பாடு பெருத்திருக்கிறது. நிறைய பள்ளி மாணவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு பேராவது என் ஓடுபாதையில் விழுகிறார்கள். இண்டிகேட்டர் சிக்னல் இல்லாமல் திடீரெனத் திருப்புகிறார்கள். இடித்து விட்டு நிற்காமல் ஓட்டுகிறார்கள். எண்களைக் கூட குறித்து வைக்க முடியாது. குறைந்தபட்ச சாலை விதிகள் கூட தெரியாமல் நெடுஞ்சாலையில் ஓட்டுகின்ற இந்தச் சிறுவர்கள் லாரிச்சக்கரங்களுக்குள் நசுங்கி விடும் அபாயம் குறித்து கவலை கொள்கிறேன். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சைக்கிளைத் தவிர்த்த வாகனங்களுக்கு ஓட்டுனர் உரிமம், ரிஜிஸ்ட்ரேஷன் எண்கள் வழங்கப்பட்டால் உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கலாம்.

***

சே குவேராவைப் பற்றி படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருபத்து மூன்று வயதில் ஏற்பட்டது. 'சே'வைப் பற்றிய புத்தகங்கள் எல்லாம் தலையணை அளவிலும் என் மாதச்சம்பளத்தின் விலையிலும் இருந்தது. ஒவ்வொரு புத்தகக்கண்காட்சியிலும் 'சே'வை ஆசையோடு எடுத்துப் பரிசித்துவிட்டு எடுத்த இடத்தில் வைத்து விடுவேன்.

ஈரோடு புத்தகக்கண்காட்சியில் வெறும் நாற்பது ரூபாய் விலையில் ஒரு சேகுவேரா புத்தகம் இருந்தது. புத்தகத்தின் தலைப்பு "அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து...'. விடுவேனா?!. ஓரிரவில் படித்து முடித்தேன். 'சே' யாரென்று கேட்கும் நண்பர்களுக்கு விளக்கவும், படித்துப்பார் எனக் கொடுக்கவும் மிகவும் உதவிகரமாக இருந்தது. புத்தகம் முழுதும் ஆவணங்களால் ஆனது. ஒரு தமிழ் எழுத்தாளன் இத்தனை ஆதாரங்களை எப்படித் திரட்டினான் என்பதே நேற்றிரவு வரை என் கேள்வியாக இருந்தது.

அப்புத்தகத்தின் ஆசிரியர் ஜா. மாதவராஜ், வடகரை அண்ணாச்சி மூலம் எண்களைப் பெற்று நான் நன்றாக எழுதுவதாகப் பாராட்டினார். நானும் யாரோ ஒரு மாதவராஜ் என்று பேசிவிட்டு வைத்துவிட்டேன். திடீரென 'ஸ்ட்ரைக்' ஆகி அண்ணாச்சியை போனில் பிடித்து உறுதி செய்து கொண்டு மாதவராஜின் எண்களைப் பெற்றேன். அவரை அழைத்து ஒன்றே ஒன்றுதான் சொன்னேன் "கிண்டலாக இருக்கிறதா.... யாரை யார் பாராட்டுவது....?!"

Comments

Anonymous said…
செல்வா,

அவரது சிறுகதைத்தொகுப்பு “போதி நிலா” என்னிடமிருக்கிறது. அடுத்த முறை சந்திக்கும்போது தருகிறேன்.

மாதவ், பழகுவதற்கு எளிதானவர். மிகுந்த விஷயமுள்ளவர் என்றபோதிலும், அதுகுறித்த அகம்பாம் ஏதுமற்றிருப்பவர்; சலசலக்கும் நீரோடையினாழத்தில் சலனமற்றிருக்கும் கற்களைப் போல.

பங்குனி உத்திரத்திற்குச் செல்லும்போது தோழர் காமராஜ் மற்றும் கார்த்திக் இருவரையும் தவறாது சந்திக்கவும். நல்ல அனுபவங்களுக்கு உத்திரவாதம்.

எளிமையால் பிறரை வசீகரிக்கவும் வசப்படுத்தவும் முடியும் என்பது இவர்களிடமிருந்து கற்ற பாடம்.
Anonymous said…
மக்கா

ஊரு பேரைக் காப்பாத்துதடே! நல்லா இருடே!!
மாதவராஜ் இப்பொழுதுதான் அதிகம் வாசவிக்கப்படுகிறார் ஆனால் அவர் நெடுநாட்களாக வலைப்பக்கம் வைத்திருப்பவர்...
செல்வேந்திரன்!

இன்று காலையில் தான் திருச்சியிலிருந்து திரும்பினேன். உங்கள் பதிவில் என் போட்டோவைப் பார்த்ததும் ஒரு சந்தோஷம், அதிர்ச்சி எல்லாம். நன்றி. பங்குனி உத்திரத்தில் நேரில் சந்திப்போம். எப்போது வலைப்பக்கத்தில் சந்திப்போம்.

வேலன்!
இந்த தாக்கு தாக்குறீங்க..

தமிழன் கறுப்பி!

வலைப்பக்கத்தில், 2008 நவம்பர் 24லிருந்துதான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
தமிழன் கறுப்பி!

மன்னிக்கவும். செப்டம்பர் 24, 2008லிருந்து வலைப்பக்கத்தில் எழுதுகிறேன்.
Anonymous said…
// கிண்டலாக இருக்கிறதா.... யாரை யார் பாராட்டுவது....?! //

:))))))))
அவர் சொன்னதிலும் தவறில்லை.. நீங்கள் சொன்னதிலும் தவறில்லை!!!
மாதவராஜ் said...
\\
தமிழன் கறுப்பி!

மன்னிக்கவும். செப்டம்பர் 24, 2008லிருந்து வலைப்பக்கத்தில் எழுதுகிறேன்.
\\
சரிதானே அண்ணன் செப்டெம்பர்லருந்து இப்பவரைக்கும் எத்தனை மாதம் ஆகிவிட்டது...

ஏனென்றால் எனக்கே நான் உங்கள் பதிவொன்றை கன நாட்களுக்க முன்பு வாசித்ததாகவும் அதற்கு தமிழன் என்கிற பெயரில் பின்னூட்டம் எழுதியதாகவும் ஒரு நினைவிருந்ததில் சொன்னேன்...
selventhiran said…
அண்ணாச்சி, நிச்சயமாக சாத்தூர் நண்பர்களைச் சந்திக்கும்படியே பயணத்திட்டத்தை அமைத்திருக்கிறேன்.

ஆசீப் அண்ணே, எல்லாம் உங்க ஆசீர்வாதம்ணே. (இது தாங்கள் எனக்கிடும் இரண்டாவது பின்னூட்டம் என்பதைப் பெருமகிழ்ச்சியோடும், எரிச்சலோடும் சொல்லிக்கொள்கிறேன்...)

தமிழன் கறுப்பி, மாதவராஜ், அன்பின் வெயிலான், பரிசல்காரன் வருகைக்கு நன்றி!
selventhiran said…
அன்றாடக் கவலைகள் ஒருவழியாக ஓய்ந்துவிட்ட என் இன்றைய நிலையில் பழைய நட்புகளின் வேர்களைத் தேடி வருகிறேன். பிரதீபா குறித்து யாதொரு தகவலும் இல்லை. அனோஜா ரத்னவேல் (Anoja Ratnavel) 'ஃபேஸ் புக்'ல் இருப்பதைக் கண்டுகொண்டேன். என் சொற்ப கணிணி அறிவில் ஃபேஸ் புக்கில் அவளைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. என்னுடைய இணைய நண்பர்களே யாராவது என் தேடலை அவளுக்குத் தெரியப்படுத்துங்களேன் ப்ளீஸ்....

// மேற்படி விண்ணப்பத்திற்கு யாராவது செவி சாயுங்களேன்...
Thamira said…
பரிசல்காரன் said...
அவர் சொன்னதிலும் தவறில்லை.. நீங்கள் சொன்னதிலும் தவறில்லை!!!
//
ரிப்பீட்டு.!
Anonymous said…
Hi,

I'm from Batticaloa too, but now i'm living in Canada. I think i know Anoja, she studied at the same school as me- Vincent Girls' High School. Just to clarify, if u still remember her address... was she living at Central Road, Batticaloa????
Anonymous said…
அன்றாடக் கவலைகள் ஒருவழியாக ஓய்ந்துவிட்ட என் இன்றைய நிலையில் பழைய நட்புகளின் வேர்களைத் தேடி வருகிறேன். பிரதீபா குறித்து யாதொரு தகவலும் இல்லை. அனோஜா ரத்னவேல் (Anoja Ratnavel) 'ஃபேஸ் புக்'ல் இருப்பதைக் கண்டுகொண்டேன். என் சொற்ப கணிணி அறிவில் ஃபேஸ் புக்கில் அவளைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. என்னுடைய இணைய நண்பர்களே யாராவது என் தேடலை அவளுக்குத் தெரியப்படுத்துங்களேன் ப்ளீஸ்....

// மேற்படி விண்ணப்பத்திற்கு யாராவது செவி சாயுங்களேன்...

Why don't you create a facebook account and send a message. There is an option to send message in facebook.
selventhiran said…
அணானி, அனோஜாவின் முகவரி
87/2 லேக் ரோடு, நம்பர் 1,
பட்டிக்கோலா

அவளும் வின்செண்ட் ஸ்கூல்தான் என்று சொன்னதாக நினைவு. அவளைத் தாங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் மகிழ்வேன்.
selventhiran said…
தாமிராண்ணே வாங்கண்ணே...
Anonymous said…
I'll try my best to get more info re Anoja. Don't worry!!

Popular Posts