பத்தினி

சேங்காளிபுரம் சுந்தரராம தீட்சிதரின் உபன்யாசத்திற்குப் போயிருந்தேன். இப்போதெல்லாம் உபன்யாசங்களில் அபார்ட்மெண்ட் வாசிகள், சாஃப்ட் வேர் ஆசாமிகள், அமெரிக்காவாழ் பிராமணர்கள் போன்றவர்களைக் கிண்டலடிப்பது பேஷன் ஆகிவிட்டது.

வெளியூர் போயிருந்த கணவன் வீடு திரும்பி இருந்தானாம். அவனது மனைவி 'என்னங்க... ரெண்டு நாளைக்கி முன்ன அல்வா கிண்டியிருந்தேன். நீங்க இல்லாம சாப்பிடப் பிடிக்கல... அப்படியே வச்சிட்டேன்' என்றாளாம். ஒரு பதிவிரதை புருஷன் வீட்டில் இல்லாத நேரத்தில் எப்படிய்யா அல்வா கிண்டலாம்? இது பத்தினி செய்கிற காரியமா? என்று அவையோரைக் கேட்டார் தீட்சிதர். நான் நெளிந்தேன்.

அடுத்து, 'வேலை கிடைக்கலை... வேலை கிடைக்கலைன்னு சொல்றாங்க... கனகதாரா ஸ்தோத்திரத்தை நாளொன்றுக்கு ஆயிரம் தடவை வீதம் மூன்று மாதத்திற்கு சொல்லி வந்தால் இந்திரனுக்கு நிகரான பதவி கிடைக்கும். அதைச் செய்யுங்கோ முதல்ல...' நான் கேண்டியைக் கூட்டிக்கொண்டு கனகதாரா தியேட்டருக்குக் கிளம்பிவிட்டேன். போய்யா நீரும் உம்ம உபன்யாசமும்...

திருச்சி கல்யாணசுந்தரம்தான் தமிழின் மிக மோசமான உபன்யாசகர் என்ற என் அபிப்ராயத்தில் சுந்தரராம தீட்சிதரையும் சேர்த்துவிட்டேன். அனந்தபத்மாச்சாரியார், ஆராவமுதாச்சாரியர், வேளுக்குடி கிருஷ்ணன் போன்றோரது உபன்யாசகங்கள் கொங்கு மண்டலத்தில் எங்கு நடந்தாலும் முன் வரிசையில் அமர்ந்து கேடபதுண்டு. அவர்கள் தங்களது பேச்சில் கூடுமானவரை பிற்போக்குத்தனங்களைத் தவிர்க்கிறார்கள். சேங்காளிபுரம் போன்றவர்கள் கற்காலத்திற்கு கைபிடித்து இழுக்கிறார்கள்.

***

தியாகு புக் சென்டர் முன் வடகரை வேலன், சஞ்செய் போன்ற சான்றோர்களும் இன்ன பிற ஆன்றோர்களும் கூடிப் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு கல்லூரிகளில் நிகழும் விழாக்களில் நடிக, நடிகையர் கலந்துகொள்வது பற்றி திரும்பியது. பல கல்லூரி நிறுவனங்கள் நடிகர்களை அழைத்துவர பல லட்சம் செலவு செய்கிறது போன்ற புள்ளி விபரங்கள் வந்து விழுந்துகொண்டிருந்தது. நானும் இந்தக் கோயம்புத்தூருக்கு வந்து ஐந்தரை வருடங்களாகிறது. சிறிதும் பெரிதுமாக நாளொன்றுக்கு சுமார் இருநூறு விழாக்கள், கூட்டங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. எந்த ஒரு விழாவிலும் நாஞ்சில் நாடன் தலைமை வகிக்கிறார் என்றோ, முன்னிலை வகிக்கிறார் என்றோ வந்ததில்லை. நக்குகிற நாய்களுக்கு செக்கு போதும் போலிருக்கிறது.

***

பாளையங்கோட்டையில் புஸ்பலதா மெட்ரிக்குலேஷன் என்றொரு பள்ளி இருக்கிறது. அங்கே இருபத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் மழை நீர் சேமிக்கும் திட்டத்தை அமல்படுத்தி அந்த நீரின் மூலம் ஒரு பெரும் தென்னந்தோப்பையும், நீச்சல் குளத்தையும் உருவாக்கி சிறப்பாக பராமரித்து வருகிறார்கள். ரொம்பவும் ஆச்சர்யப்பட்டேன் என்று தகவல் சொன்னார் மரம் யோகநாதன்.

மரம் யோகநாதனைப் புதிதாகப் புகழ ஒன்றுமில்லை. இயற்கைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட ஈர மனுஷன். தனி மனிதனாக காட்டை உருவாக்கிய சாதனைத் தமிழன். கோயம்புத்தூரில் சாதாரண அரசுப்பேருந்து நடத்துனராகப் பணியாற்றிக்கொண்டு லட்சக்கணக்கான மரங்களை நட்டுக்கொண்டிருக்கிறார் என்பதைத் தமிழின் அத்தனை ஊடகங்கள் மூலமாகவும் அறிந்திருப்பீர்கள். அவரது சமீபத்திய குறும்படம் 'தாகம்' பற்றி விகடன் வரவேற்பறையில் எழுதி இருந்தார்கள். அதனை முதன் முதலில் எனக்காகத் திரையிட்டு காட்டியபோதே எனக்குப் பரிச்சயமுள்ள பத்திரிகைகளில் எழுதுகிறேன் என்று சிடி வாங்கி வந்து இன்றோடு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. உடலெங்கும் கொழுப்பு சேர்ந்துவிட்ட என்னால் எப்படி எழுத இயலும். தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டேன்.

***

உன்னுடைய பதிவுகள் முழுவதும் உனக்கு நேர்ந்ததைப் பற்றியும் உன்னைப் பற்றியும்தான் எழுதுகிறாய். என்னைப் போன்ற வாசகனுக்கு அதில் என்ன அக்கறை / சுவாரஸ்யம் இருக்க முடியும் என்று பெயர் வெளியிட முடியாத நண்பர் மெயில் அனுப்பி இருந்தார். அவர் எனது பதிவின் நெடுநாள் வாசகர்.

பிளாக் என்பது தபால், செல்போன் போல என் நண்பர்களைத் தொடர்பு கொள்ளும் ஒரு சாதனம். என்னுடைய எழுத்துப் பயிற்சிக்கான ரஃப் நோட். என் அபிப்ராயங்களை இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்ள எளிதான ஊடகம். அவ்வளவுதான். தவிரவும் எனக்கு நேர்ந்ததைத்தான் நான் எழுதமுடியுமே தவிர உங்களுக்கு நேர்ந்ததை நான் எழுதினால் பல்லிளித்துவிடும். தவிர, நான் எழுதிய அனைத்தையும் நீங்கள் படிக்கிறீர்கள் என்பதொன்று போதாதா என் எழுத்தில் ஏதோ இருக்கிறது என்பதற்கு.

Comments

/பிளாக் என்பது தபால், செல்போன் போல என் நண்பர்களைத் தொடர்பு கொள்ளும் ஒரு சாதனம். என்னுடைய எழுத்துப் பயிற்சிக்கான ரஃப் நோட். என் அபிப்ராயங்களை இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்ள எளிதான ஊடகம். அவ்வளவுதான்/


சூப்பர். எந்த பய்ற்சியும், உழைப்பும் இல்லாமல் எழுத வந்துட்டாங்க என்று பதிவர்களை நோக்கி வசை பாடும் பெரிய எழுத்தாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சொல்ல நினைப்பது இதைத்தான். பதிவர்களில் பலர் ஒரு நாள் உங்களை போல ஆவார்கள். அதற்கான முயற்சிதான் ப்ளாக்.
Vetri said…
அவர் திருச்சி கல்யாணசுந்தரம் இல்லை கல்யாணராமன்! வாய்ப்பு கிடைத்தால் நாகை முகுந்தனையும் முயற்சி செய்து பாருங்கள்!
Anonymous said…
அந்த உபன்யசர் என் கனக தாரா சொல்லி வேலை வாங்காம இந்த தேங்கா மூடி நிகழ்ச்சிக்கு வந்தாராம். வேலங்குடி நல்லாத்தான் சொல்லறார்.

சமிபத்தில் நடந்த ஒரு புகழ் பெற்ற யுனிவெர்சிட்டி இல் நடிகர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியை தமிழ் பத்திரிகைகள் அனைத்தும் விளம்பரப்டுத்தியது.
உபன்யாசம் பயங்கர தமாசா இருக்கும் போல!

நக்குற நாய்களுக்கு செக்கு போதாதா நெத்தியடி!

உபன்யாசத்தை பார்க்க அமர்திருக்கும் பிற்போக்கு(பேதி இல்லை) பாப்பானுங்களுக்கும் இது பொருந்துவது கூடுதல் சிறப்பு!
anujanya said…
ரொம்ப நாட்களாக வர வேண்டும் என்ற எண்ணம் அபரிமித சோம்பலால் முடியாமல் போய்விட்டதில், எவ்வளவு நட்டம் என்று புரிகிறது செல்வா.

ரொம்ப எளிமையான, பாசாங்கில்லாத நடை. மனதில் நினைப்பதை தைரியமாகச் சொல்லும் துணிவு. நிறைய ஜ்யோவ்ராமை நினைவு படுத்துகிறீர்கள்.

அனுஜன்யா
நாஞ்சில் நாடன் போன்றோர் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இன்னமுன் வீர்யத்துடன் இயங்கிக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் பாடம்.

உங்களுக்கு மின்னஞ்சலாய் வந்ததை எனக்கும் ஆரம்பத்தில் (ரொம்ப ஓவரோ?)கேட்டிருக்கிறார்கள்.

இப்போது.. உங்களைப் பத்தி ஒண்ணுமே எழுதறதில்லையே என்கிறார்கள்.

என்ன சொல்ல?
சொல்ல மறந்துவிட்டேன்.

வேளுக்குடி கிருஷ்ணன்.. கீரனுக்குப் பிறகு கிடைத்த முத்து.

கீரன் சகுனியாகவும், துரியோதனாகவும், தருமனாகவும் மைக்கின் இடவலம் கணீரெண்று பேசுவது இன்னும் காதில் ஒலிக்கிறது.. (மாமனே.. மாமனே... யார் சொல்வார் உன்போல் ஆலோசனை....)
உபன்யாசம்ல்லாம்...
//எந்த ஒரு விழாவிலும் நாஞ்சில் நாடன் தலைமை வகிக்கிறார் என்றோ, முன்னிலை வகிக்கிறார் என்றோ வந்ததில்லை//

உள்ளதுதான்.

என்ன செய்ய நண்பரே
narsim said…
//ஒரு பதிவிரதை புருஷன் வீட்டில் இல்லாத நேரத்தில் எப்படிய்யா அல்வா கிண்டலாம்? இது பத்தினி செய்கிற காரியமா? என்று அவையோரைக் கேட்டார் தீட்சிதர்//

என்னத்தச் சொல்ல??
selventhiran said…
வெற்றி, அருமையான பிழைதிருத்தம். ஆம் அவர் திருச்சி கல்யாணராமன் தான். பாசுரங்களைப் பற்றிப் பேசுவதைவிட வத்தக்குழம்பு வைப்பது போன்ற மாமிகளுக்குத் தேவையான தகவல்களை வாரி இறைப்பார்.
Anonymous said…
//பிளாக் என்பது தபால், செல்போன் போல என் நண்பர்களைத் தொடர்பு கொள்ளும் ஒரு சாதனம். என்னுடைய எழுத்துப் பயிற்சிக்கான ரஃப் நோட். என் அபிப்ராயங்களை இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்ள எளிதான ஊடகம். அவ்வளவுதான். தவிரவும் எனக்கு நேர்ந்ததைத்தான் நான் எழுதமுடியுமே தவிர உங்களுக்கு நேர்ந்ததை நான் எழுதினால் பல்லிளித்துவிடும். தவிர, நான் எழுதிய அனைத்தையும் நீங்கள் படிக்கிறீர்கள் என்பதொன்று போதாதா என் எழுத்தில் ஏதோ இருக்கிறது என்பதற்கு.//

well said.
Karthikeyan G said…
//ஒரு பதிவிரதை புருஷன் வீட்டில் இல்லாத நேரத்தில் எப்படிய்யா அல்வா கிண்டலாம்? இது பத்தினி செய்கிற காரியமா? //

இப்படி டபுள் மீனிங்காவா பொது மேடையிலே பேசுவாங்க?

:)
///என்னுடைய எழுத்துப் பயிற்சிக்கான ரஃப் நோட்.///

உன்மையை ரொம்ப சுலபமா ஏத்துக்கரீங்க செல்வா...
Anonymous said…
ஐயோ செல்வேந்திரன் உங்கட profile photo வை மாத்துங்க அல்லது உங்கட கேன்டிகு ஆபத்து வந்துடும். உங்கட சிரிப்பு அப்படியே அள்ளிட்டு போகுது. அப்படி ஒரு attraction!!! பயபடாதீங்க வேற நோக்கத்தில் சொல்லவிலை.
உபன்யாசம்... :-(((

ரஃப் நோட்... :-)))
வெளியூர் போயிருந்த கணவன் வீடு திரும்பி இருந்தானாம். அவனது மனைவி 'என்னங்க... ரெண்டு நாளைக்கி முன்ன அல்வா கிண்டியிருந்தேன். நீங்க இல்லாம சாப்பிடப் பிடிக்கல... அப்படியே வச்சிட்டேன்' என்றாளாம். ஒரு பதிவிரதை புருஷன் வீட்டில் இல்லாத நேரத்தில் எப்படிய்யா அல்வா கிண்டலாம்? இது பத்தினி செய்கிற காரியமா? //

என்ன கொடுமை இது. அடுத்த முறை இவர் உபன்யாசம் நடந்தால் என்னை கூப்பிடு. கூட்டத்தில இருந்து கல்லாலேயே அடிக்கிறேன்.

எந்த ஒரு விழாவிலும் நாஞ்சில் நாடன் தலைமை வகிக்கிறார் என்றோ, முன்னிலை வகிக்கிறார் என்றோ வந்ததில்லை. நக்குகிற நாய்களுக்கு செக்கு போதும் போலிருக்கிறது. //

சரியா சொன்ன செல்வா.

Popular Posts