பிற்பகலிலாவது உலகத்தின் மீது பிரியமாயிருங்கள்!

விகடனில் வெளியான எனது கீழ்க்கண்ட கவிதைக்கு பல்வேறு விதமான அபிப்ராயங்கள் தினமும் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் வந்து கொண்டிருக்கின்றன. காட்டமான எதிர்க்கவிதையொன்று நடப்பு இதழில் பிரசுரமாகியுள்ளது.

கற்றதனால் ஆன பயன்...
- செல்வேந்திரன், கவிதை

எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்தீர்கள்
கலாசாரத்தைக் கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிகைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்
எங்களது சம்பாத்தியத்தின்
பெரும் பகுதியை
வரியெனப் பிடுங்கினீர்கள்
நாங்கள் அந்நிய தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டினீர்கள்
'இந்தியா ஒளிர்கிறது' என
விளம்பரங்கள் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோஷம்தானா
சகோதரர்களே?
உங்கள் சட்டைகளைப் பற்றிக்
கேட்கிறோம்...
'கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?'

பிற்பகலிலாவது உலகத்தின் மீது பிரியமாயிருங்கள்!
- பி.ஜி.கதிரவன், கவிதை

எல்லோரும்
வருமான மாமிசம் தின்கிறவர்களே..!
ஆனால், அதை மாலையாய்த் தோளில் போட்டு
தேசத்தை வீச்சச் செய்தது நீங்கள் மட்டுமே
ஜே.கே.ரித்தீஷூக்கே
செலவழிக்கக் கற்றுத் தந்தவர்கள்
நீங்களாகவே இருக்கக்கூடும்.
தவறு
கணினி மொழி கற்றதல்ல நண்பனே...
'கசிந்த கண்' உடன்பிறப்புகளின்
'காய்ந்த வயிற்று' பெற்றோரின்
கசங்கல் நிமிர்த்தாத தன் முனைப்பே.
வாங்கிய வருமானத்தைக்கொண்டு
வாடகைகளை ஏற்றினீர்கள்.
ஒண்டுக்குடித்தனங்கள்
வாகனங்கள் குறைந்த சாலைகளில்
வாழ வந்தன.
மனை விலை உயர்த்தினீர்கள்
பிணம் வைத்து அழவும் வீடின்றி
நடுத்தரச் சுமை தாங்கிகளுக்கு
நாக்குத் தள்ளி நாடி குறைந்தது
'என்ன விலை அழகே'
உங்களின் விருப்பப் பாடலானபோது
'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்'
எங்களுக்கே எப்போதும் அர்ப்பணிக்கப்பட்டது.
கணினிகளைக் கையாண்ட கன்னிகளையே
கணினிகளாய்க் கையாண்டும்
அதை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் இறுமாந்த
கலாசாரக் காவலர்கள்
நீங்கள் அன்றி வேறு எவர்..?
வரி போகிறதே என்று உங்களுக்கும்
உயிர்போய் விடக் கூடாதே என்று
எங்களுக்கும்
கவலைகள் மாறுபட்டன.
உங்களைப் பற்றி
சினிமா எடுத்தோம்
பத்திரிகைகளில் எழுதினோம்
நிஜம்தான்,
வளர்ச்சிகளே வாழ்த்தப்படும்
வீக்கங்கள் எப்போதும்
விமர்சிக்கத்தானே படும் நண்பனே..?
உதிர்ந்த பிட்டைக் கூட
இந்த சொக்கர்களுக்குத் தராத
நீங்கள் பற்றிச் சண்டை போடக் கூட
எங்களிடம் சட்டை இல்லையே
யாது செய்வோம் நண்பனே..?
போகட்டும் நண்பனே...
மன்னிக்கத் தெரிந்ததால் தமிழனாய் இருப்பவர்கள்
வீதிக்கு வந்த உங்களுக்காக
பழைய சோற்றிலும்
பச்சை மிளகாயிலும் பாதி தருவோம்.
பாவி நண்பா!
பர்கருக்கும் பீட்ஸாவுக்கும் எங்கே போவோம்?
பெற்றவர்கள் இருப்பதை
பெரும்பாலும் மறந்தவர்களே...
நினைவிருக்கட்டும்,
உங்களின் கணினி யுகத்தில்
முற்பகல் செய்யின்
முற்பகலே விளையும்.
பிற்பகலிலாவது
உலகத்தின் மேல் பிரியமாயிருங்கள்!

நன்றி: விகடன்

Comments

நல்ல எதிர் கவிதை!
//மன்னிக்கத் தெரிந்ததால் தமிழனாய் இருப்பவர்கள்
வீதிக்கு வந்த உங்களுக்காக
பழைய சோற்றிலும்
பச்சை மிளகாயிலும் பாதி தருவோம்.
பாவி நண்பா!
பர்கருக்கும் பீட்ஸாவுக்கும் எங்கே போவோம்?//

:(
தங்கள் கவிதையும் அதற்கான எதிர்கவிதையும் மிகப்பிரமாதம்
na.jothi said…
இது விகடனோட மார்கெடிங் உக்தி இல்லையே

எப்படியோ கதிரவனுக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்

உங்களுக்கும் எளிமையான வரிகளுக்கு
கருத்துக்களுக்கு அல்ல
//வாங்கிய வருமானத்தைக்கொண்டு
வாடகைகளை ஏற்றினீர்கள்.
//

இத கேட்டா எனக்கு கடுப்பா வருது!!! ஒரு காலத்தில திருமணமாகாத இளைஞர்களுக்கு வீடு தர மாட்டோம் என்றவர்கள் மென்பொருள் துறையினருக்கு மட்டும் வலிய வந்து வீடு தந்ததேன்???

வாடகைக்கு விடப்படும் என்ற பலகையே வைக்காது போனதேன்?

நியாயமான வாடகைக்கு வீடு கிடைத்தால் நாங்கள் என்ன இருக்கமாட்டோம் என்றா சொன்னோம்??? சும்மா வாய்க்கு வந்தத பேசக்கூடாது.....

இதே பல்லவியே எத்தன நாள் தான் பாடுவீங்க?

முற்பகலில் செய்த நல்லவைகளையெல்லாம் விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டால் உங்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்
உன் கவிதைக்கும் இந்த எதிர்கவிதைக்கும் சேர்த்து ஒரு பதிவு போட்டாச்சு செல்வா

(பதிவு கயமைத்தனம் ;-))
சபாஷ் சரியான போட்டி :)
இரண்டாவது கவிதை ரொம்ப பெருசு!

உங்க கவிதை விகடனில் படிக்கும் போதே புரிந்தது!
அதில் எனக்கு ஒன்றும் தவறாக தெரியவில்லை!

விதவை மறுமணம் மறுக்கப்பட்ட போது அவளின் எண்ணங்களை அவளின் அவளாகவே சொல்வது போல் கவிதை எழுதினால் எப்படி இந்த உலகம் மறுக்குமோ அதை தான் இங்கேயும் நடந்திருக்கிறது!

யாராவது மறுப்பு சொன்னால் நீங்க்ள் சொல்லவேண்டிய ஒரே வார்த்தை

”நீ இன்னும் வளரணும் தம்பி”
Deepa said…
இரு தரப்பினரின் வேதனையும் நியாயமானது தான். ஆனால் கோபம் காட்டவேண்டியது ஒருவருக்கொருவர் அல்ல.

All said and done, எதிர் கவிதைச் சற்றுக் கூடுதலாகவே பாதிக்கிறது.
அதை வெளியிட்ட உங்கள் ரசிப்புத் தன்மைக்கும் பெருந்தன்மைக்கும் பாராட்டுக்கள்.
நந்தா said…
இரண்டாவது கவிதை குறித்து பக்கம் பக்கமாய் பேசலாம். என்னத்தைப் பேசி என்ன பிரயோசனம்.

கருத்தியல் ரீதியில் மகா மட்டமான கவிதை.
Thamira said…
கவிதைக்கான ஜாலம் குறைவாக இருப்பினும் உண்மையில் உங்களுடையதை விடவும் ஒரு மார்க் அதிகம்தான் தருவேன் கதிரவனுக்கு.!
Madhu said…
This is too much.. life was not half as unfair for Software engineers as being projected in this mail.. “பத்திரிக்கைகளில் கிழித்தீர்கள், பெண் கொடுக்க மறுத்தீர்கள் “?? இதெல்லாம் எங்கே எப்போது நடந்தது?? NRIs have been the most in demand for the marriage market - all of us know that very well… and doesn’t everyone have to pay taxes? Half the people in the IT profession end up working abroad and earning vast sums of money.. if you earn more, you will obviously have to pay more taxes.. ‘ஈட்டி வந்த பணத்தில் பாலங்கள் கட்டினீர்கள் ‘ ellam too much. Every development activity that the government takes up is from the taxes of its citizens. At least, the taxes don’t pinch us.. think of the lower and middle income group in the country. they are the ones who should be complaining.. but here we are, now that the situation is a little tough for us, we immediately divert the blame on others.. it’s stupid, unfair and incorrect.

if we take the good times readily and happily without doing our bit for the country and settle down in a foreign country without any hesitation whatsoever, I don’t think we have any right to complain when things go bad. we just have to shut up, sit tight and wait it out till the situation becomes better again.

Sorry if this sounds like a angry tirade.. I do feel sorry for all the layoffs happening - one of my classmates in the US was laid-off, actually, so I do feel bad about it.. but blaming others’ ‘vayitherichal’ for the current situation is ridiculous to say the least.
ICANAVENUE said…
மிக நன்றாக எழுதப்பட்ட கவிதை! இதற்கு எதற்கு எதிர்ப்பு?

We have not taken some else's money or somebody else's opportunity. We were ready to put in more efforts and to slog our ass to earn more. We did't steal our neighbours money to pay for our Pizzas and Burgers.

இயலாமையும் பொறாமையும் தான் இந்த எதிர்ப்புக்கு காரணமாக இருக்குமே ஒழிய, it is not due to concern for people or economy.
ம் ரைட்டு நடக்கட்டும்.
'கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?'

super.
எதிர்க்கவிதையும் சூப்பர்.
நான் கூட இதுக்கு ஒரு எதிரி கவிதை யோசிச்சேன். ஆனா இங்க நடக்குறதை பார்த்தா... அதை கைவிட்டுட்டேன்.

உண்மையில், எனக்கு உங்களது கவிதையில் உடன்பாடு இல்லை.
both the poems r good. Recession ending signs have started. so be ready for the party.

take away the passport, webcam etc from cupboard,

The next grand boom is going to start soon.
Suresh said…
உங்க கவிதையும் இப்போது தான் படித்தேன் தவறு இல்லை.. அழகாய் சொல்லிருக்கிங்க.. ஆனா சம்பளம் அதிகம் பெற்ற எல்லாரும் அன்பாய் நம்மல மாதிரி இருப்பதில்லை.. அதனால் தான் மக்களுக்கு இந்த வருத்தம்... ஏழைக்களுக்கும் நடுதர சம்பள்ம் வாங்கும் நிறைய பேருக்க்கு அது ஒரு வருத்தம்

எதிர் கவிதையும் அருமை .. நம்ம வலியை விட அது பெரிசு... அது ரொம்ப அதிகமாய் இருக்குல நன்பா

நான் இனி உங்க தொடர் வாசகன்.

நேரம் இருந்தால் சக்கரை பதிவுக்கு வாங்க

நன்பர் பிரேம்குமார் பதிவின் முலம் உங்கள் தளத்திற்க்கு வந்தேன்... நன்றி
Suresh said…
@ பிரேம்

//இத கேட்டா எனக்கு கடுப்பா வருது!!! ஒரு காலத்தில திருமணமாகாத இளைஞர்களுக்கு வீடு தர மாட்டோம் என்றவர்கள் மென்பொருள் துறையினருக்கு மட்டும் வலிய வந்து வீடு தந்ததேன்???

வாடகைக்கு விடப்படும் என்ற பலகையே வைக்காது போனதேன்?

நியாயமான வாடகைக்கு வீடு கிடைத்தால் நாங்கள் என்ன இருக்கமாட்டோம் என்றா சொன்னோம்??? சும்மா வாய்க்கு வந்தத பேசக்கூடாது.....

இதே பல்லவியே எத்தன நாள் தான் பாடுவீங்க?

முற்பகலில் செய்த நல்லவைகளையெல்லாம் விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டால் உங்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்//

சரியா தான் சொன்னிங்க ... நாம் தராவிட்டால் இன்னொருத்தன் தருவான்...
raasu said…
நல்ல கவிதை, நல்ல எதிர் கவிதை...

#########

சகோதரா,

கணிப்பொறி கற்றவனுக்கே பெண் கொடுப்போம் என்ற
காலம் இருந்ததை மறந்திருக்க மாட்டாய்.

மெத்த படித்த உனக்கு தெரியாததா - இந்தியாவில்
மொத்தமுள்ள அனைவருக்கும் வருமான வரி ஒன்றுதான்

கலாச்சாரம் - ? கம்பெனி டிரக்ட்டருக்கு, டியர் மோகன்
என்று மின்னஞ்சல் அனுப்பினிர்கள்
கழிவறை குழாயில் காண்டம்களை அடைத்தீர்கள்

இந்தியா ஒளிர்வதில் உங்களுக்கு மட்டும் என்ன இறுமாப்பு.

எள்ளி நகையாடியதும், எகத்தாளம் பேசியதும் ஏன் ?

நீங்கள் நீங்களாய் இருந்து, மற்றவருக்கு வழி காட்டியிருந்தால்
கண்டிப்பாக நீண்ட காலம் நடுத்தெருவில் நிற்க வேண்டியது இலலை

நாங்கள் அதனை விரும்பவும் இலலை.
@குப்பன்

என்ன சொல்றீங்க இன்னமேதான் 'கச்சேரியே'ன்னு இல்ல பேசிக்கிறாங்க.
Wolverine said…
I strongly oppose the edhir-kavidhai by kadhiravan....
Why hold us (IT employees) responsible for the increase in house rents & land rates? It was the greedy landlords, rt? They exploited our financial capabilities & loan eligibilities...
Karthikeyan G said…
நல்ல இருக்கு

{நல்லாதானே இருந்தாகவேண்டும் நீங்கள் எழுதியதாயிற்றே) :)
Suresh said…
நல்ல பதிவு

i liked ur blog and have become ur follower.

You can also visit my blog and if you like it u can be my follower :-)

Hope u like it
//கருத்தியல் ரீதியில் மகா மட்டமான கவிதை.//
எது மட்டம்? முதலாவதா..? இரண்டாவதா..? எந்த வகையில்..? விளக்கிச் சொல்வீர்களா நந்தா..? உங்கள் கருத்தியலை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
@ செல்வேந்திரன்.... தன் கவிதைக்கு ஒருவன் எதிராக கவிதை எழுதியிருக்கிறான் என்றால் அதை எடுத்துப் போட்டுவிட்டு, பேசாமல் போய்விடாமல் அதைப்பற்றியும் உங்கள் கருத்தையும் எழுதுவதே சரி என்று எனக்குத் தோன்றுகிறது.
Unknown said…
இவ்வ‌ள‌வு ம‌ட்ட‌மான‌ க‌விதையை நான் ப‌டித்த‌தில்லை... ந‌ன்றி ந‌ண்ப‌ரே...
SaiKrishRam said…
http://ragasiyasnekithan.blogspot.com/2009/05/ii.html

http://ragasiyasnekithan.blogspot.com/2008/02/blog-post_4126.html

:)

Popular Posts