டிஸ்கோதேக்கு வரலைம்மா

பயணங்கள் மட்டுமே என்னை புதுப்பித்து திருப்பித் தருகின்றன. கல்யாணம், சாவு, திருவிழா எல்லாம் ஊர் சுற்ற ஒரு சாக்கு. ஜன்னலோரத்து இருக்கையும் முகத்தில் மோதும் காற்றும் துரோகங்களையும் துன்பங்களையும் எளிதாக மறக்க வைக்கிறது தானே?!

இன்று இரவு கிளம்பி திருச்செந்தூர் செல்கிறேன். 19/04/09 ஞாயிறு திருச்செந்துரிலிருந்து கிளம்பி கடற்கரைச் சாலை மார்க்கமாகவே பயணித்து கன்னியாகுமரியை அடைவதாக உத்தேசம். இரு தினங்களுக்கான பயணத் திட்டம்.

மறுபடி அடுத்த வார வெள்ளி இரவு ஆசிப் மீரான் அண்ணாச்சியை சந்திப்பதற்காகச் சென்னை செல்கிறேன். சனி, ஞாயிறு (25 & 26) சென்னையில் இருப்பதாக உத்தேசம். ரமேஷ் வைத்யா, ரமேஷ் குமார், பைத்தியக்காரன், பாஸ்கர் சக்தி, தாமிரா என அண்ணன்மார்களால் நிறைந்திருக்கிறது சென்னை. அத்தனை அண்ணன்களையும் சந்திக்கும் திட்டம் இருப்பதால் 'டிஸ்கோதே' போன்ற உபத்திரவங்களுக்கு வரச்சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம் என தோழிமார்களுக்கு விண்ணப்பம் வைத்திருக்கிறேன்.

Comments

பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் நண்பா.. பதிவுலக நண்பர்களை வேற பார்க்கப் போறீங்க.. என்ஜாய்..
/
அத்தனை அண்ணன்களையும் சந்திக்கும் திட்டம் இருப்பதால் 'டிஸ்கோதே' போன்ற உபத்திரவங்களுக்கு வரச்சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம் என தோழிமார்களுக்கு விண்ணப்பம் வைத்திருக்கிறேன்.
/

அப்படி எவளும் கூப்பிட்டுட்டா டிஸ்கோத்தேவில் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே பாடல் ஒலிபரப்பப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

:))))))
மீ த பர்ஸ்ட்டு!
நீங்களும் நம்ம சாதி தானா.... ஊர் சுத்திகிட்டே இருக்குற சாதி!
பாதுகாப்பான பயணத்திற்கு வாழ்த்துக்கள்! :)
எங்க ஊர் பக்கமெல்லாம் வரமாட்டீங்களா செல்வா?
Thamira said…
இந்தத் தாமிரா நாந்தானே? (பேரு மாத்தினது ஆருடாப்பா.?)

அண்ணன்மார் மேல் என்னா பாசம்டா புள்ளைக்கு? டிஸ்கொதே வாணாம்னு சொல்லுதே..

ஆமா, ஆசிஃப் இந்த வாரம் சென்னை வருகையா.? அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா.. கேட்டுச்சொல்லுங்களேன்.
Kumky said…
திருச்செந்தூர் செல்வதானால்...நமக்கான நண்பரொருவரை சந்திக்க ஏற்பாடு செய்கின்றேன்.தொடர்புக்கு வருக.
Unknown said…
கணக்கில்லாத தங்கையரால் நிறைந்திருக்கிறது என் உலகம். தம்பியர் என்றால் கொள்ளை மகிழ்ச்சி. மின்னஞ்சலில் விஜய் அண்ணே என்று நீங்கள் விளித்ததில் மிகுந்த சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். எனது விருந்தினராக என் இல்லத்துக்கு வந்து சென்றால் அகழ்ந்திருப்பேன். அன்புத் தம்பி இதையே அழைப்பாக ஏற்று, என் விருந்தினனாக வந்து செல்ல வேண்டும்.
திருச்செந்தூர் - கன்னியாகுமரி... கடற்கரை வழியாகவே... செல்வேந்திரா, உம் பயண ஆசையை என்னென்பது! மணப்பாடு, குலசேகரம், பெரியதாழை, உவரி, கூத்தங்குளி அப்புறம் முக்கியமாக 'கூடங்குளம்' என்று மிக மிக வித்தியாசமான ஊர்களைக் கொண்டது அந்த பயணப்பாதை. நன்றாக ஊர் சுற்றுங்கள்.

//அத்தனை அண்ணன்களையும் சந்திக்கும் திட்டம் இருப்பதால் 'டிஸ்கோதே' போன்ற உபத்திரவங்களுக்கு வரச்சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம் என தோழிமார்களுக்கு விண்ணப்பம் வைத்திருக்கிறேன்.
//

'டிஸ்கோதே' உமக்கு உபத்திரவமா?
இப்படி சொன்னா எந்த தோழியும் உம்மை அழைக்கமாட்டார். :)
senthil said…
முடியல! முடியல !! என்னா வில்லத்தனம் !!!
//'டிஸ்கோதே' போன்ற உபத்திரவங்களுக்கு வரச்சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம் என தோழிமார்களுக்கு விண்ணப்பம் வைத்திருக்கிறேன்.//

இந்த நக்கலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல ராசா ;-)
நீயும் அண்ணாச்சியும் சந்திக்கும் அந்த மகோன்னத பொழுதில் நான் அங்கு இருக்க முடியாத நிலையில் இருக்கிறேன்

(நல்ல வேளைடா பிரேமு, எஸ்கேப்பு ஆயிட்டேஏஏஏஏஏ)
//ரமேஷ் வைத்யா, ரமேஷ் குமார், பைத்தியக்காரன், பாஸ்கர் சக்தி, தாமிரா என அண்ணன்மார்களால் நிறைந்திருக்கிறது சென்னை //

என்னை மறந்து விட்டீர்களேண்ணே

:((
”வரலைம்மா...?”

நண்பர்கள்கிட்ட சொல்ற மாதிரி தெரியலயே?

நான் பொண்ணுவூட்டுக்காரன் என்பதை நினைவுபடுத்துகிறேன்!!!
uvaraj said…
Romba mukkiyam.............
அத்தனை அண்ணன்களையும் சந்திக்கும் திட்டம் இருப்பதால் 'டிஸ்கோதே' போன்ற உபத்திரவங்களுக்கு வரச்சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம் என தோழிமார்களுக்கு விண்ணப்பம் வைத்திருக்கிறேன். //

உனக்கே இது Too Much ஆ தெரியல...
Raju said…
ஆமாங்கோ..அண்ணன டிஸ்டர்ப் பண்ணாதீங்க!
தோழியரே.!
அன்பு நண்பரே!
பயணம் இனிதாகுக!!!
selventhiran said…
நன்றி கார்த்திகைப் பாண்டியன்.

ஹா ஹா மங்களூரார் ஜூப்பர்.

வாங்க வெங்கி. வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஸ்ரீதர் அண்ணே வராம என்ன...?! சீக்கிரத்துல சதித் திட்டம் தீட்டிர வேண்டியதுதான்.

ஆமுகி கூப்பிடுறார்னு சொன்னா அண்ணாச்சி அடிச்சிப் பெரண்டுல்லா வருவார். பெறவிக் கவிஞனாச்சே...

கும்கி நீங்க சொல்ற நபரைச் சந்தித்தேன். வேளாவேளைக்கு உண்டைக் கட்டி கிடைப்பதில்லைன்னு புகார் சொன்னார்.

விஜய்கோபால்ணே, ஹைதரபாத்துக்கு நிச்சயம் வருவேன். (ஜோடியா வரலாம்ல)

ஊர்சுற்றி பிரமாதமா ரூட் சொல்றீங்களே எந்த ஏரியா?

செந்திலண்ணே ரொம்ப முடியலன்னாக்கா முடியலத்துவம் படிங்க... சரியாயிடும்.

பிரேம் அண்ணே, நம்ம பிராட்-அப் அப்படி.

அப்துல்லாண்ணே மெயில் போட்டிருக்கேன்.

பரிசல், பெண் வழியில் நீங்க மச்சான் முறை. எங்க ஊர் முறைப்படி மச்சான் மாப்பிள்ளைக்கு மூணு பவுன் சங்கிலி போடனும்.

யுவராஜ், ரொம்ப முக்கணும். சென்னை ரொம்ப சூடுல்லா.

வாம்மா விக்கி.

வாங்க டக்ளஸ் வருகைக்கு நன்றி.

தேவன்மயம் வாழ்த்துக்களுக்கு நன்றி.
நந்தா said…
//ஜன்னலோரத்து இருக்கையும் முகத்தில் மோதும் காற்றும் துரோகங்களையும் துன்பங்களையும் எளிதாக மறக்க வைக்கிறது தானே?!//

அருமையான வார்த்தைப் பிரயோகங்கள் செல்வேந்திரன். உங்களுடைய பயண திட்டங்களைப் பார்க்க சற்றே பொறாமையாகவும் இருக்கிறது.

ஆசிஃப் அண்ணாச்சியுடன் உங்களை சென்னையில் சந்திக்கிறேன்
Anonymous said…
///
விஜய்கோபால்ணே, ஹைதரபாத்துக்கு நிச்சயம் வருவேன். (ஜோடியா வரலாம்ல)
///

கேடியாதான் வரக்கூடாது, ஜோடியா வரலாம்.
selventhiran said…
நந்தா, உங்களைச் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.

ஹா.. விஜய் அண்ணே கருணாநிதி மாதிரி பின்றீங்கண்ணே
திருநெல்வேலிதானுங்கோ... அந்த கடற்கறை பக்கமெல்லாம் காலாற நடந்து போயிட்டு வந்திருக்கேங்க.

இரண்டு நாளா உங்க இடுகையை திரும்ப திரும்ப வந்து பார்த்துகிட்டு இருந்தேன். கமென்டு பப்ளிஸ் ஆகல. திங்களுக்கு அப்புறம் மறந்துட்டேன். சனி, ஞாயிறுதான் நமக்கு வழக்கம்போல கையில கிடைக்குது. என்ன பண்றது!

Popular Posts