பணியிடக் காமம்

மயில் (எ) விஜிராம் சமீப காலமாகத்தான் எழுதத் துவங்கி இருக்கிறார் என்றாலும் வாசிப்பின் வீரியம் அவரது எழுத்தில் தென்பட்டதை கண்டுகொண்டேன். கோவையில்தான் இருக்கிறார் என்பதறிந்து கேண்டியோடு சென்று சந்தித்தேன். வானத்தின் கீழ் உள்ள அனைத்தையும் கற்றுக்கொள்ளும் வேகமும், கலைகளின் மீது தீராத தாகம் கொண்ட ஆச்சர்ய பெண்மணி. அவரோடு பேசியது பெரும் புத்துணர்ச்சியைத் தருவதாக இருந்தது என்றாள் கேண்டி. வெகுநாட்களுக்குப் பின் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு வந்தோம். கம்பு, சோளம் என்று அன்றாட வாழ்வில் இருந்து அகன்று விட்ட பாரம்பர்ய உணவுப் பொருட்களை நவீன யுகத்திற்கு ஏற்ப சமைத்துக் கொடுத்தார். நளபாகம்.

***

திருச்செந்தூர் முருகன், குலசை முத்தாரம்மன், உவரி சுயம்பு லிங்கம், சுசீந்தரம் தாணூமாலயன், கன்னியாகுமரி பகவதி, மனப்பாடு மணல் மாதா, தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர், ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான், கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி, திருநெல்வேலி நெல்லையப்பர் என்று எனது அபிமான கோவில்களைத் தரிசித்துவிட்டு, தாமிரபரணி படித்துறையில் உடலும் உள்ளமும் ஊற குளித்துக் கரையேறி இன்று விடுதியறை ஏகினேன்.

பெரிய பக்தியெல்லாம் ஒன்றுமில்லை. கோவில் பிரகாரங்களில் வெறுமனே சுற்றி வந்து முன்னோர்களின் கலைத் திறனை நாளெல்லாம் வியந்து கொண்டிருப்பதில் ஒரு பிரியம். தவிரவும், நெல்லை என்றால் என் பணியிடத் தோழர்களின் மனதில் இருக்கும் பிம்பத்தைக் கலைத்தாக வேண்டிய கட்டாயமும் இருந்தது. அதைச் செவ்வனே செய்து முடித்தேன். முல்லைத் தமிழ் மணக்கும் நெல்லைச் சீமையின் பெருமைகளை மூச்சுத் திணற சொல்லித் தீர்த்தேன். பாரதியின் வீட்டை, பாஞ்சாலங்குறிச்சியை, குற்றால நாதரை பார்த்தேயாக வேண்டுமென்கிறார்கள்.

***

சாகஸங்கள் நிறைந்த காமிக்ஸூகளைப் படிக்கையில் ஏற்படும் குதுகலத்தோடு 'அயன்' படத்தை ரசித்தேன். கே.வி. ஆனந்த் தேடல் நிறைந்த படைப்பாளி என்பதை படம் நெடுகக் கிடைக்கும் விவரணைகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அவரது 'டெக்னாலஜி விருப்பத்தைப்' பல பேட்டிகளின் மூலம் யூகித்து வைத்திருந்தேன். படங்களில் டெக்னாலஜிக்களை 'கடையனுக்கும் கடைத்தேற்றம்' போல எளிமையாக அறிமுகப்படுத்துவது பாராட்டத்தக்கது.

பலரும் சொல்லியடி பாடல்கள்தாம் படத்தைப் பெரிதும் பலவீனப்படுத்துகிறது. ஐந்து பாடல்களையும் நீக்கிவிட்டு, ஜெகனின் பாத்திரப்படைப்பை செம்மைப் படுத்தி, வில்லனின் உறுமலைக் குறைத்திருந்தால் அயன் அனைவராலும் விரும்பப்பட்டிருப்பார் என்று தோன்றுகிறது. ரியலிஸ படங்களை எடுப்பதற்கான தகுதியும் உழைப்பும் கே.வி. ஆனந்திடம் நிரம்பி இருப்பதன் சாட்சியம் காங்கோ காட்சிகள். வணிகக் காரணங்களுக்கும் வளைந்து கொடுத்தாக வேண்டிய கட்டாயங்கள் எதிர்காலத்தில் அவருக்கு இல்லாமல் இருக்கட்டும்.

***

'கன்னிகளை கணிணி போல பயன்படுத்தினீர்கள்' என்ற பி.ஜி. கதிரவனின் வரிகள் கேண்டியை மிகுந்த ஆத்திரப்படுத்தி விட்டது. இப்படி எழுத அவருக்கு என்ன துணிச்சல். இந்த மென்பொருள் துறைப் பெண்களெல்லாம் அமைதி காத்து இதனை ஆமோதிக்கிறார்களா?! யாரவன் எனத் தேடிப் போய் எழுதிய விரல்களை ஒடித்திருக்க வேண்டாமா?! குறைந்த பட்சம் முகத்தில் காரித் துப்பி இருக்க வேண்டாமா?! என்றெல்லாம் கொந்தளித்தாள். அவளை ஆற்றுப்படுத்தினேன்.

பணியிடக் காமம் என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து பணியாற்றும் அனைத்துத் துறைகளுக்கும் பொதுவானது. சினிமா, காவல்துறை, கல்வி, ஆன்மீகம் என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது முறையான / முறையற்ற உறவுகள். தவிர, என் சக ஊழியன் என்னைக் கற்பழித்தான் என்றோ, கர்ப்பமாக்கி விட்டு காணாமல் போனான் என்றோ மென்பொருள் துறை சார்ந்த எந்த பெண்ணும் புகார் செய்ததாகத் தகவல் இல்லை. மாறாக அவர்களை வாகனஓட்டிகள் கடத்தியதும், கற்பழித்ததும், கொன்றதும், கொள்ளையடித்ததும்தான் வரலாறு. பொதுப்புத்தியில் உறைந்துவிட்ட அசிங்கமான கற்பனைக்கு கவிதை ஆடை அணிவித்த பி.ஜி. கதிரவன் போன்ற முட்டாள் பேராசிரியர்களிடம் பயிலும் மாணவர்களைக் குறித்துதான் எனக்குக் கவலையாக இருக்கிறது.

Comments

///பெரிய பக்தியெல்லாம் ஒன்றுமில்லை. கோவில் பிரகாரங்களில் வெறுமனே சுற்றி வந்து முன்னோர்களின் கலைத் திறனை நாளெல்லாம் வியந்து கொண்டிருப்பதில் ஒரு பிரியம்///

என் திருமணத்திற்கு முன்பு வரை இலக்கில்லாமல் பயணம் செய்வதென்றால் மிகவும் பிடிக்கும். அதில் பெரும்பாலும் கோயில்கள்தான். பார்த்து வியக்க கங்கைகொண்ட சோழபுரம், சிதம்ப்ரம், வில்லிபுத்தூர் போன்ற கோயில்களை ஒவ்வொன்றாக ஒவ்வொரு பகுதியாக உற்று பார்த்து வியந்து கொன்டிருப்பேன். உண்மையில் பயணங்கள் மிக சுவாரசியமானவை.
// கோவில் பிரகாரங்களில் வெறுமனே சுற்றி வந்து முன்னோர்களின் கலைத் திறனை நாளெல்லாம் வியந்து கொண்டிருப்பதில் ஒரு பிரியம்/

இது போன்ற இடங்கள் செல்வதால் மனதிற்குள் பழைய தலைமுறையினை நினைத்து பார்த்து நன்றி சொல்லி வியந்து போகும் தருணங்கள் நிறையவே! நானும் கூட இதை தவறவிடுவதில்லை :)
Karthikeyan G said…
//பி.ஜி. கதிரவன் போன்ற முட்டாள் பேராசிரியர்களிடம் பயிலும் மாணவர்களைக் குறித்துதான் எனக்குக் கவலையாக இருக்கிறது.
//

Sir.. Why Kola veri?

Cool boss..
Anonymous said…
நன்றி செல்வா,

என் வீட்டுக்கு வந்ததுக்கும் உங்கள் மாலை பொழுதை என்னோடு கழிததுக்கும். கேண்டி என்ற பெயர் உங்களுக்கு மட்டுமே, அவங்களுக்கு "திரு " என்ற பெயரே ரொம்ப பொருத்தம்.

எப்போது நேரம் கிடைகிறதோ அப்போதெல்லாம் வாருங்கள், திருவுடன். ராம் இதை உங்களிடம் சொல்ல சொன்னார்.
//பணியிடக் காமம் என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து பணியாற்றும் அனைத்துத் துறைகளுக்கும் பொதுவானது. சினிமா, காவல்துறை, கல்வி, ஆன்மீகம் என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது முறையான / முறையற்ற உறவுகள்.//

நச் பாய்ண்ட்-ண்ணா.. கரிகிட்டா சொல்லிக்கிற..

அப்பால சொன்ன பாரு ஒரு பாய்ண்ட்.. அதாண்ணா பேஜாரா பூடுச்சு. நம்மளாண்ட நீ பேசுற பேச்சா இது ? நீயே சொல்லிகின.. அல்லா தொரையிலும் இந்த கருமம் நடந்துகினுகீது.அப்பால என்னாத்துக்கு போலீஸ், கம்ப்ளைன்ட், கற்பழிப்பு, கொலை ன்ற ?
கேட்டுக்கோ நயினா எந்த கலிஜு மேட்டரும் வெளிய வரதில்ல.. அப்பால முட்டாள் ன்ற வார்த்தை எல்லாம் பெரிய வார்த்தைங்கன்னா. நம்ம ரீஜிண்டுக்கு வேணாம்னா.
வர்ட்டா ?
செல்வா!
தன்னைக் கற்பழித்தான் என்றோ கர்ப்பமாக்கிவிட்டுக் காணாமல் போனான் என்றோ மென்பொருள் துறை சார்ந்தவர் யாரும் புகார் செய்ததாகக்த் தகவல் இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். வாஸ்தவமான பேச்சு. உங்கள் கூர்மையான அறிவு பளிச்சிடும் வரிகள் இவை.
பரஸ்பர சம்மதத்துடன் உரிய பாதுகாப்புச் சாதனங்களுடன் நடப்பதெற்கெல்லாம் புகார் சொல்வர்களா என்ன?
//கம்பு, சோளம் என்று அன்றாட வாழ்வில் இருந்து அகன்று விட்ட பாரம்பர்ய உணவுப் பொருட்களை நவீன யுகத்திற்கு ஏற்ப சமைத்துக் கொடுத்தார். நளபாகம்.//

:-))
Suresh said…
//பணியிடக் காமம் என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து பணியாற்றும் அனைத்துத் துறைகளுக்கும் பொதுவானது. சினிமா, காவல்துறை, கல்வி, ஆன்மீகம் என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது முறையான / முறையற்ற உறவுகள். தவிர, என் சக ஊழியன் என்னைக் கற்பழித்தான் என்றோ, கர்ப்பமாக்கி விட்டு காணாமல் போனான் என்றோ மென்பொருள் துறை சார்ந்த எந்த பெண்ணும் புகார் செய்ததாகத் தகவல் இல்லை. மாறாக அவர்களை வாகனஓட்டிகள் கடத்தியதும், கற்பழித்ததும், கொன்றதும், கொள்ளையடித்ததும்தான் வரலாறு./


மிக சரியான பதில் அவர்களின் கற்பனை நாளுக்கு நாள் அதிகமாக போச்சு
Unknown said…
நல்ல ஊர் சுத்தினியா..நம்ம ஊருக்கு போய்ட்டு வந்திருக்கே..அல்வா வாங்கினியா செல்வா? கேண்டியை கேட்டதாகச் சொல்.
//பரஸ்பர சம்மதத்துடன் உரிய பாதுகாப்புச் சாதனங்களுடன் நடப்பதெற்கெல்லாம் புகார் சொல்வர்களா என்ன//

அதில் என்ன தவறு இருக்கிரது? அரசாங்கமே காண்டம் காண்டம் என்று வி்ளம்பரப்படுத்துகிரது. எனவே சட்டாப்ப்டியும் தவறில்லை. விருப்பத்துடன் நடந்தான் அறபப்டியும் தவறில்லை.
//பொதுப்புத்தியில் உறைந்துவிட்ட அசிங்கமான கற்பனைக்கு கவிதை ஆடை அணிவித்த பி.ஜி. கதிரவன் போன்ற முட்டாள் பேராசிரியர்களிடம் பயிலும் மாணவர்களைக் குறித்துதான் எனக்குக் கவலையாக இருக்கிறது.//

மிகவும் சரி.பாராட்டுக்கள் .
selventhiran said…
சிவா, கல்யாணமானா என்ன? மனைவியோடு ஜாலியாக கிளம்ப வேண்டியதுதானே...

வாங்க ஆயில்யன், வருகைக்கு நன்றி.

கார்த்திகேயன், லட்சக்கணக்கில் காபிடேஷன் கட்டிப் படிக்கிறார்கள். வாத்தியார்கள் இப்படிக் கோமாளிகளாக இருந்தால் என்ன செய்வது?

மயில், உங்கள் பேரன்பிற்கு நன்றி. எப்போதும் குளிர்சாதனப் பெட்டியில் தோசை மாவு வைத்திருங்கள்.

ஆதி, வருகைக்கு நன்றி!

லதானந்த் சார், பிரமாதமான பின்னூட்டம். ரெண்டு பேரு சந்தோஷமா இருந்தா, பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்னு போயிட்டே இருக்கனும்.

வாங்க சென்ஷி.

வருகைக்கு நன்றி சுரேஷ்.

உமா, உனக்கு அல்வா, மைசூர்பா, மற்றும் இன்னபிற பலகாரங்கள் வாங்கி வைத்திருக்கிறேன்.

கார்க்கி, நீ ஒரு குசும்புத் திலகம்யா... ஜூப்பரு

ஸ்ரீதர் வருகைக்கு நன்றி!
//பொதுப்புத்தியில் உறைந்துவிட்ட அசிங்கமான கற்பனைக்கு கவிதை ஆடை அணிவித்த பி.ஜி. கதிரவன் போன்ற முட்டாள் பேராசிரியர்களிடம் பயிலும் மாணவர்களைக் குறித்துதான் எனக்குக் கவலையாக இருக்கிறது.//

என்னத்தைச் சொல்ல... இப்படியும் இருக்காய்ங்க!!! நெசமாவே அவருடைய மாணவர்களை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது.


//லதானந்த் சார், பிரமாதமான பின்னூட்டம். ரெண்டு பேரு சந்தோஷமா இருந்தா, பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்னு போயிட்டே இருக்கனும்.//

புரட்சிகரமான பின்னூட்டம்தான்... அதுக்காக அவருக்கு இப்படியா 'கட்டய' குடுக்குறது?? செல்வா... குசும்பு ஜாஸ்தி உமக்கு. இருந்தாலும் உமது குசும்புத்தனமான பதிலை தாறுமாறாக ஆதரித்து வழிமொழிகிறேன்.

Popular Posts