மானத்தோடு வாழ்வது எப்படி?

வாக்குகளுக்காகப் பணம் வாரி இறைக்கப்படுவதைக் கண்டிக்கின்ற தொனியில் 'கண்ணுக்குத் தெரிந்த கயமையைக் களையுங்கள்!' என்கின்ற கட்டுரை தினமணியில் வந்திருந்தது. பழ. கருப்பையா எழுதி இருக்கிறார். திருமங்கலம் தேர்தல் இந்தியாவின் அவமானம் என்றெல்லாம் அவருக்கு ஏக வருத்தம். அ.தி.மு.க முகாமில் இருந்துகொண்டு இப்படி எழுதினால் சனங்கள் கை கொட்டிச் சிரிப்பார்கள் என்பது அவருக்குத் தெரியாது போலிருக்கிறது. சாத்தான்குளம் இடைத்தேர்தலில் பெய்த பண மழையில் நனைந்த எங்களூர் ஜனங்களுக்கு இன்னும் ஜலதோஷமே விட்டபாடில்லை. சரி அது கிடக்கட்டும். ஓட்டுக்காகக் காசு என்பதைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது யார்?

சி.பா. ஆதித்தனார் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். 1957ல் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலின் போது காசு வினியோகம் துவங்கி இருக்கிறது. எங்கே மாற்றிப்போட்டு விடுவார்களோ என்கிற அச்சத்தில் சாமிப் படங்களைக் காட்டி சத்தியம் வேறு வாங்கிக்கொண்டு ஜெயித்தார்களாம்.

ஆக ஓட்டுக்குக் காசு என்கிற கான்செப்ட் துவங்கி சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. யாராவது விழா எடுத்தால் காசு வாங்கிக்கொண்டு கலந்து கொள்ளலாம்.

***

பொருளாதாரச் சரிவினால் அச்சு ஊடகங்கள் நாளுக்கு நாள் அதலபாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டில் பல பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அச்சு ஊடகங்களின் உயிர்நாடியான விளம்பர வருவாயில் மரண அடி விழுந்ததே இதற்கு காரணம். தொழில் நிறுவனங்கள் செலவினக் குறைப்பு நடவடிக்கையாக முதலில் எடுத்ததே விளம்பரச் செலவுகளை ஏகத்திற்கும் குறைத்ததுதான்.

ஏற்கனவே பத்திரிகை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களது வாழ்வே கேள்விக் குறியாகிவிடும் அபாயம் இருக்கிறது.

***

எழுத்தாசை கொண்ட நண்பரொருவர் நெடு நாட்களாகப் புத்தகம் எழுதும் முயற்சியில் இருக்கிறார். ஆசை மட்டும் இருந்து அதற்கான முயற்சியோ பயிற்சியோ இல்லாததால் எதைப் பற்றி எழுதுவது என்கிற முடிவுக்குக் கூட வர முடியாத நூதனப்பிரச்சனை. இதுமாதிரி கேசுகளிடம் அல்லல் பட்டுச் சாகவேண்டும் என்பது என் தலைவிதி.

ஒரு நாளைக்கு தலா இரண்டு முறையாவது போன் பண்ணி தாலியை அறுக்கிறார். நேற்றிரவு பதினொரு மணிக்கு அழைத்து 'முறையாக வாழ்வது எப்படி?'ன்னு எழுதட்டுமா என்று கேட்டார். "அதை விட 'மானத்தோடு வாழ்வது எப்படி?'ன்னு எழுதுங்க. நாட்ல பல பேருக்கு அதுதான் இல்லைன்னு" சொல்லிவிட்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்தேன்.

Comments

//ஆசை மட்டும் இருந்து அதற்கான முயற்சியோ பயிற்சியோ இல்லாததால் எதைப் பற்றி எழுதுவது என்கிற முடிவுக்குக் கூட வர முடியாத நூதனப்பிரச்சனை.//

செல்வா, உன் பாடு திண்டாட்டமா தான் இருக்கும் போல
//யாராவது விழா எடுத்தால் காசு வாங்கிக்கொண்டு கலந்து கொள்ளலாம்.
//

:-)
கடைசி பாரா மேட்டருக்கு கிசுகிசு பாணி அநாவசியம். நேரடியாகவே சொல்லுங்கள் செல்வா.

நான் உட்பட பல நண்பர்களைப் பற்றி எழுதியது போலிருக்கிறது!

:-)

(நல்லவேளை நான் இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்வதில்லை. ஒன்லி இன்கமிங்!)
எழுத்தனுபவமே இல்லாதவருக்கு புத்தகம் எழுதும் ஆசை ... ரொம்ப ஓவரா தெரியுது.

அச்சு ஊடகங்கள் மட்டுமல்ல பல துறைகளின் நிலையும் இப்ப மோசம் தான்.

எனக்கு தெரிந்து 1967லேயே ஓட்டுக்கு காசு கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு முன்பு தெரியாது.
சி.பா. ஆதித்தனார் எல்லாம் டூ லேட்... குடவோட்டு முறை இருந்த காலங்களிலேயே ஓட்டுக்குக் காசு கான்செப்ட் எல்லாம் இருந்திருக்கும்.
Vetri said…
பழ கருப்பையா உயர் நீதி மன்றத்தினால் விளம்பர பிரியர் என்று குட்டு வாங்கியவர். இவருடைய கருத்து எப்போதும் நிரந்திரமாக இருந்தது இல்லை. தினமணியில் எல்லாம் இவருடைய கட்டுரை வருவது மிக வினோதமாக இருக்கிறது.
Thamira said…
பத்திரிகை நிலைமை இப்படி இருக்கிறதா? அங்கே இருக்கிறவங்களுக்கே இந்த நிலைமைன்னா எழுதறவங்களுக்கு? நா வேற இத நம்பி கதையெல்லாம் எழுதலாம்னு பிளான் பண்ணி வெச்சிருக்கிறேனப்பா..

அப்புறம் நானும் ஒங்களுக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன்.. என்ன மாதிரி புக்கு எழுதலாம்னு.?
(இதுமாதிரி கேசுகளிடம் அல்லல் பட்டுச் சாகவேண்டும் என்பது என் தலைவிதி.)உங்கள் நிலைமை நினைத்து வருத்தமாக இருந்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆட்குறைப்புக்கு எந்த துறையும் தப்பவில்லை விரைவில் நிலைமை மாறவேண்டும், மாறும்.
selventhiran said…
ஆமாம் பிரேமண்ணே..

என்னாத்த கிசுகிசு... உங்களை மாதிரி பிரபல எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதுகிற பத்தியில் அவனை மாதிரி கச்சடாக் கவிஞன் பெயரெல்லாம் வேண்டாம்னு வுட்டுட்டேன்.... (வந்தா போனா காபி, கிபி வாங்கித் தர்றீங்க.... அதனாலதான் "பிரபல...." ஹி... ஹி...)

மஞ்சூர் இப்ப பரவால்லயா

இரமேஷ் அண்ணா, ஒரு வேளை குடத்தையே தூக்கிக் கொடுத்திருப்பானுங்களோ என்னவோ...

வெற்றி தகவலுக்கு நன்றி.

ஆதிண்ணே "ஹாரிபார்ட்டரும் கார்ப்பரேஷன் லாரியும்"னு எழுதுங்க... நம்ம கும்கீகிட்ட அணிந்துரை, ரமேஷ் பைத்யாகிட்ட வாழ்த்துரை (வெளங்கிரும்) வாங்கி ரிலீஸ் பண்ணிரலாம்.

வெங்கடேஷ் சுப்பிரமணி நாங்களும் உங்களை மாதிரி நன்மையில் நம்பிக்கை வைச்சு நாட்களைக் கடத்துகிறோம்.
ஓட்டுக்குக் காசு என்கிற கான்செப்ட் துவங்கி சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. யாராவது விழா எடுத்தால் காசு வாங்கிக்கொண்டு கலந்து கொள்ளலாம். ///

அரை நூற்றாண்டா.... என்ன ஒரு கேவலம்.

பத்திரிகை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களது வாழ்வே கேள்விக் குறியாகிவிடும் அபாயம் இருக்கிறது. //

பத்திரிகை துறை தான் உங்களுக்கு தெரிந்த துறையாக உள்ளது. ஆனால், எல்லா துறையிலுமே நிலைமை இவ்வளவு மோசம் தான். ஏன், தொழிலாள வர்க்கமே பெரும் பீதியில் தான் உள்ளது.

"அதை விட 'மானத்தோடு வாழ்வது எப்படி?'ன்னு எழுதுங்க. நாட்ல பல பேருக்கு அதுதான் இல்லைன்னு" சொல்லிவிட்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்தேன். ///

ஹிஹிஹி.... சரிதான், இனி உனக்கு போன் பண்ணி கேப்பாரா....
//முறையாக வாழ்வது எப்படி?//

//மானத்தோடு வாழ்வது எப்படி?//

தொந்தரவு செய்யாமல் வாழ்வது எப்படி என்று எழுத எனக்கும்!

தொந்தரவை சமாளிப்பது எப்படி என உங்களுக்கும் எழுத தகுதி இருக்கிறது!
anujanya said…
செல்வா,

'புத்தகம் வந்து சேர்ந்தது. நன்றி' - இதச் சொல்ல போன் பண்ணினா, இப்பிடி மானத்த வாங்குறியே :)

அனுஜன்யா
அச்சு ஊடகங்கள் மட்டுமல்ல பல துறைகளின் நிலையும் இப்ப மோசம் தான்.

Popular Posts