மாபஸான்: ஓர் எளிய அறிமுகம்

'சிறுகதைகளின் தந்தை' என வர்ணிக்கப்பட்ட மாபஸான், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு எழுத்தாளர். பாரீஸில் வழக்கறிஞர் பட்டம் பெற்ற இவர், பிராங்கோ-பிரஸ்ஸியன் போரின் போது ராணுவத்தில் சேர்ந்து தேச சேவை புரிந்தார். போருக்குப் பின் பாரிஸீக்குத் திரும்பிய இவருக்கு கஸ்தேவ் ப்ளாபர்ட் போன்ற எழுத்தாளுமைகளோடு ஏற்பட்ட நட்பு இலக்கிய பரிச்சயத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. 1872 முதல் 1880 வரை கப்பற்படை, கல்வி அமைச்சகம் போன்றவற்றில் அரசுப் பணியில் இருந்தார். அரசுப்பணியில் இருந்து கொண்டே பிரான்ஸின் முன்னனி நாளிதழ்கள் பலவற்றிற்கும் ஃப்ரீலேண்ஸ் செய்தியாளராக தனது பங்களிப்பை செய்து கொண்டிருந்தார். 1880ல் அவரது முதல் கவிதை வெளியானது. அவ்வாண்டின் இறுதியில் அவரது மாஸ்டர் பீஸ் எனக் கொண்டாடப்படும் 'பால் ஆஃப் பேட்' வெளியானது. போர்க்காலத்தில் ஒரு கோச்சில் பயணிகளோடு பயணித்துக்கொண்டிருந்த ஒரு ஊரறிந்த வேசியின் கதைதான் அது. பின்னாட்களில் இக்கதை இயக்குனர் ஜான் போர்டினால் 'ஸ்டேஜ் கோச்' என்ற பெயரில் படமாக்கப்பட்டு பெரும்புகழ் பெற்றது. 1881ல் வெளியான இவரது முதல் சிறுகதைத் தொகுதி, இரண்டு ஆண்டுகளில் பன்னிரெண்டு மறுபதிப்புகள் கண்டது. 1883ல் வெளியான இவரது முதல் நாவலான 'ஒரு பெண்ணின் வாழ்க்கை' அந்த ஆண்டின் இறுதிக்குள் 25,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. இவரது இரண்டாவது நாவலான பெல்-அமி வெளியான நான்கு மாதங்களில் 37 பதிப்புகள் கண்டது.

தனது இருபதாவது வயதில் சிபிலிஸ் நோயால் தாக்கப்பட்டார். நோயின் தீவிரத்தால் அவரது உடல் நிலையும் மன நிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவரது சிதைவுற்ற மனநிலையின் வெளிப்பாடு கதைகளிலும் வெளிப்பட்டது. அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருப்பது ' எ டைரி ஆஃப் மேட்மேன்'. இக்கதையின் கருதான் சுஜாதாவின் 'எதையும் ஒருமுறை' நாவல். இக்கதையில் வரும் நீதிபதி கதாபாத்திரத்தைப் போலவே மாபஸானும் தனது 42வது வயதில் தற்கொலை முயற்சியாகத் தனது தொண்டையை அறுத்துக்கொண்டார். அதில் அதிர்ஷ்டவசமாக பிழைத்துக்கொண்டவர் அடுத்த ஆண்டே மரணமடைந்தார்.

முன்னூறு சிறுகதைகள், ஆறு நாவல்கள், மூன்று பயணப் புத்தகங்கள் எழுதியுள்ள மாபஸான் சிறுகதையின் வடிவத்திலும், கதைக்களத்திலும் மேற்கொண்ட மாற்றங்களும், சோதனை முயற்சிகளும் அவரது வழியொற்றி எழுத வந்த எண்ணற்ற எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருந்தது. அவர்களுள் சாமர்ஸெட்டும், ஓ. ஹென்றியும் முக்கியமானவர்கள். தமிழில் புதுமைப்பித்தன் 'தமிழ்நாட்டின் மாபஸான்' எனக் கொண்டாடப்பட்டார். கடந்த மாதத்திற்கு முன்பு வரை...

டிஸ்கி:
சிறுகதைகள் எழுத முயற்சிப்பது, அரசுப்பணி, முறுக்கு மீசை, எழுத்தாளர்களோடுத் திரிவது, மனச்சிதைவு போன்றவைகள் உங்களுக்கு வேறு யாரையாவது நினைவுப் படுத்தினால் அதற்கு கட்டுரையாளர் எவ்விதத்திலும் பொறுப்பல்ல...

Comments

Anonymous said…
saaru etho solraaru!
lollu thaane?
selventhiran said…
வாங்க அணாணி, நீங்க சொன்னதுக்கப்புறம்தான் ஒரு உண்மையை உலகம் இன்னும் புரிஞ்சிக்கலன்னு தெரியுது... தமிழ்நாட்டுல ஒரு சாரு' மட்டும் இல்லங்கிறதுதான் அந்த உண்மை...
ரி said…
செலுவா! மாப்பசான் கட்டுர செம சுகுரா கீது. போன மாசம் வெரை ன்னியே.. அப்ப இந்த் மாசம் தமில் மாப்பசான் ஆருன்றத எட்த்து வுடு மச்சி!

நீ சொன்ன மீச, கத எயுதறது, எய்த்தாலருங்களோட ஒட்டிகினு வூர சுத்துறது, கெவுர்மென்ட்டு வேல, மென்ட்டலு அத்தினியும் பாத்தாக்க அந்த டுபாக்கூரத்தான் சொல்றறியோன்னு டவுட்டா கீது. சிபிலஸ ஏன்மா வுட்டுட்டே? அத்தையும் சேத்துக்கோ! நோண்டி நொங்கெடு நைனா!
KARTHIK said…
//தமிழில் புதுமைப்பித்தன் 'தமிழ்நாட்டின் மாபஸான்' எனக் கொண்டாடப்பட்டார். கடந்த மாதத்திற்கு முன்பு வரை...//

அப்போ இந்த மாசத்துல இருந்து யாரு ?
அதையும் சொல்லிடுங்க செல்வா.
பரவாயில்லையே! ஆறே ஆறு பிழைகள் மட்டுமே இருக்குண்ணா! தப்பே இல்லாம ஒரு கட்டுரை எ்ளுதிப் போட்டீங்கன்னா ஒங்களையும் காட்டுக்குக் கூட்டிட்டுப் போயிக் காமிக்கிறேன். அரங்க முத்துச்சாமியும் வருவார்.
Voice on Wings said…
கீ த மோபஸான் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. அவரது Ball of fat / Boule de suif ஒரு அற்புதமான கதை. தமிழில் யாரும் மொழிபெயர்த்திருக்கிறார்களா என்றுத் தெரியவில்லை.
selventhiran said…
வாங்க கார்த்திக், ரி, லதானந்த், வாய்ஸ் ஆஃப் விங்ஸ் வருகைக்கு நன்றி...
கடந்தமாதத்திற்கு பிறகு என்ன நடந்தது என்பதே இப்பொழுது அனைவரின் கேள்வி.

ஆக விரைவில் சொன்னால் நல்லது.
Karthikeyan G said…
சரோஜா Politics நல்ல intrestingaa இருக்கு.
Oh..Sorry .. that is சாரு-ஜெ Politics.

Good Going for it..
selventhiran said…
மஞ்சூர் சார், கார்த்திக்கேயன் உங்கள் இருவருக்காகவும்தான் மாபஸானின் புகைப்படத்தையே போட்டிருக்கிறேன். அதே உருவ ஒற்றுமையோடு இணையத்தில் புத்தம்புதியதாக நுழைந்திருக்கும் ஒரு எழுத்துச்சுனாமியை நீங்கள் இன்னும் கண்டுகொள்ளாமல் இருப்பது எனக்கு பெரும்கவலை அளிக்கிறது.
KARTHIK said…
//அதே உருவ ஒற்றுமையோடு இணையத்தில் புத்தம்புதியதாக நுழைந்திருக்கும் ஒரு எழுத்துச்சுனாமியை நீங்கள் இன்னும் கண்டுகொள்ளாமல் இருப்பது எனக்கு பெரும்கவலை அளிக்கிறது.//

adap paavi
unga ravisukku oru alave illaiyaa
அப்படியா

அது யார் என பார்க்கவேண்டுமே

எனக்கு தனி மடலில் தகவல் தரவும்.
கோ.பரமேஸ்வரன் மொழிபெயர்த்த மாப்பஸான் சிறுகதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையிலேயே அபாரமான எழுத்தாளர். அவர் பற்றிய மேலதிக தகவலுக்கு நன்றி.
selventhiran said…
வாங்க கோகுலன். அது எந்த பதிப்பகம் என்று சொல்லுங்களேன். படித்து விடலாம்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிமிட்
41 பி. சிட்கொ இண்டஸ்ரியல் எஸ்ரேட்
அம்பத்தூர், சென்னை.

Popular Posts